குடியரசுத் தலைவரின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், "ஈஸ்டர் திருநாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து மக்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாகக் கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சிப் பண்டிகை அன்பு மற்றும் இரக்கத்தின் அடையாளமாகும். இயேசு கிறிஸ்து உண்மைக்காகவும் நீதிக்காகவும் தம் உயிரை தியாகம் செய்து அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை நமக்கு வழங்கினார். அவரது வாழ்க்கை இரக்கத்திற்கும் தியாகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் விழுமியங்களை ஏற்று நமது சமுதாயத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்புவோம், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்". என்று கூறியுள்ளார்.ஈஸ்டர் திருநாளையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:
“ஈஸ்டர் திருநாளையொட்டி நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்து பிரான் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் திருநாள் குறிக்கிறது. அன்பு, கருணை, மன்னித்தல் ஆகியவற்றின் ஆற்றலை இது நினைவு கூர்கிறது.
ஈஸ்டர் திருநாள் உணர்வு அனைவரையும் ஒன்று சேர்ப்பதுடன் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கட்டும். மனித குலத்திற்கு புதிதாக சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள ஊக்கமளிக்கட்டும்”ஈஸ்டர் திருநாளன்று மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்த சிறப்பு தினம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுவாக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு தினம் நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை வலுவாக்கட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவுகூர்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்