எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி
கடந்த கால முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி,
எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியதில் நடந்த முறைகேடு புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை விசாரணை நடத்த தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் ரூபாய்.4,000 கோடியில் கட்டப்பட்டன.
அதைக் கட்டியதில் முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக விசாரணைக்கு ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் எடப்பாடி கே. பழனிசாமி மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
கருத்துகள்