மத்திய பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணி இறுதித் தேர்வு முடிவுகள், 2022 - இடஒதுக்கீடு விவரங்கள்
மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடத்திய எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு 2023, ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சிப் பெற்றவர்களை கீழ்கண்ட பணிகளுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
1) இந்திய ஆட்சிப் பணி
2) இந்திய வெளியுறவுப் பணி
3) இந்திய காவல் பணி மற்றும்
4) மத்தியப் பணிகள், குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ மொத்தம் 933 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொதுப்பிரிவினர் 345 பேர், இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 99 பேர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 263 பேர். ஷெட்யூல்டு வகுப்பினர் 154 பேர், ஷெட்யூல்டு பழங்குடியினர் 72 பேர்.
இந்திய ஆட்சிப் பணிக்கு 180 பேரும், இந்திய வெளியுறவுப் பணிக்கு 38 பேரும் இந்திய காவல் பணிக்கு 200 பேரும், மத்திய அரசின் குரூப் ‘ஏ’ பணிக்கு 473 பேரும், குரூப் ‘பி’ பணிக்கு 131 பேரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த மாணவி ஜிஜி முதலிடம் பெற்று அகில இந்திய அளவில் 107 வது இடம் பிடித்து, முதல் முயற்சிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். குடிமைப்பணித் தேர்வுகளில் இன்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தேர்ச்சிப் பெற இயலாதவர்களுக்கு பிரதமர் ஆலோசனையும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குடிமைப்பணிப் தேர்வுகளில் வெற்றிப்பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இனிதான திருப்தியுள்ள பணியை எதிர்நோக்கி இருக்கும் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். தேசத்திற்கு சேவை செய்ய மிகவும் மகிழ்ச்சியளிக்கும் தருணமாகவும், மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ மாற்றத்தை கொண்டுவரும் தருணமாகவும் இது உள்ளது.”
“குடிமைப்பணிப் தேர்வுகளில் வெற்றிப்பெற இயலாதவர்களின் ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன். இதற்கு மேலும் பல முயற்சிகள் இருப்பது மட்டுமல்ல, உங்களின் திறன்களையும், ஆற்றலையும் வெளிப்படுத்த பல வாய்ப்புகளை இந்தியா கொண்டிருக்கிறது. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார், இசய சூழலில் மூத்த IAS அதிகாரியான ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றார் அவரது ரேங்க் 361 அதே நேரத்தில் சென்னை கொளத்தூர் எலக்ட்ரீஷியன் மகள் ஜீஜீ, B.Com பட்டதாரி தமிழ் இலக்கியம் விருப்ப பாடமாக எடுத்து அகில இந்திய ரேங்க் 107, ஒரு சாதாரண பிண்ணனியிலிருந்து வந்து முதல் முயற்சியிலேயே அகில இந்திய ரேங்க் 107 எடுத்த ஜீஜிக்குப் பாராட்டுகள் குவிகிறது,
கருத்துகள்