முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் மாதம் .30 ஆம் தேதி வரை தான் ரூபாய்.2000 நோட்டுகள் செல்லுமென; இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8- ஆம் தேதி பழைய ரூபாய் 1000 மற்றும் 500 ரத்து செய்யப்பட்டது,

திரும்பப் பெறப் பட்டது ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது,                       செப்டம்பர் மாதம் .30 ஆம் தேதி வரை தான்


ரூபாய்.2000 நோட்டுகள் செல்லுமென;


இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு


தற்போது குறைந்த அளவில் புழக்கத்திலுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

முதலீடு  மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து செப்டம்பர் மாதம் .30 ஆம் தேதி வரை தான் ரூபாய் .2000 நோட்டுகள் வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. ரூபாய் .2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு அணைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது..  

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய்.500 மற்றும் ரூபாய்.1000 நோட்டுகளைச் செல்லாதென 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததையடுத்து தற்போது ரூபாய்.2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாதென இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 

23 ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ள நபர்கள் வங்கிகளில் கொடுத்து வரவு வைக்கலாம்.


ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் பத்து தாள்களை மட்டுமே மாற்ற முடியும்.இதில் பொதுநீதி யாதெனில் ரூபாய் 2000/- Something மாற்றுவதற்கு எதற்கு 120 நாள்கள்? என்பது குறித்த கேள்வி வருகிறது,

மொத்தப் பணமும் மக்களிடம் தான் உள்ளதா அப்படி ஒரு நிலை இருக்கிறதா?  2024

தேர்தலுக்கான பணத்துக்கு சில அரசியல் கட்சிகள் என்ன தான்  செய்வார்களோ.என்பது பலரது சந்தேகம். 

₹. 2000/- தாள் பரிதாபங்கள். தற்போது வங்கிகளிடமும் ஏழை எளியவர்களிடமும் புழக்கத்திலில்லாத பணம் யாருக்கென முடிவெடுத்து விட்டதாகவே தற்போது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது,         


 2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும் – அதுவரை சட்டப்படி செல்லுபடியாகும் - இது தொடர்பாக

அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்

ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் –

புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுதல்; சட்டபூர்வமான பரிவர்த்தனை தொடரும்

1.    ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்படுகின்றன?

ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச்  சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனையை திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், போதுமான அளவில் மற்ற விகிதாசாரத்தில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்து, பின்னர்

2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. பெரும்பாலான 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன்பு வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சாதாரணமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய இதர குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்" படி, 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. தூய்மையான ரூபாய் தாள்  கொள்கை என்றால் என்ன?

பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் தாள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள கொள்கை இது.

3. 2000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனை நிலை நீடிக்குமா?

ஆம். 2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ பரிவர்த்தனை அந்தஸ்தைத் தொடரும்.

4. 2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?

ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாகப் பெறலாம். இருப்பினும், அவர்கள் 2023 செப்டம்பர் 30,  அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

5. கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுமக்கள் அவர்கள் வைத்திருகும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ வங்கிக் கிளைகளை அணுகலாம்

கணக்குகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30ந் தேதி  வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும். ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் மாற்றும் வசதி செப்டம்பர் 30 வரை வழங்கப்படும்.

(அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம்)

6.  2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?

வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டப்பூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.

7.  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள செயல்பாட்டு வரம்பு ஏதேனும் உள்ளதா?

பொதுமக்கள்  2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில்

ரூ 20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.

8. வங்கிகளின் துணை அமைப்புகள் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?

ஆம், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ 4000/- என்ற வரம்பு வரை இத்தகைய துணை அமைப்புகள் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

9. எந்த தேதியிலிருந்து மாற்றிக்கொள்ளும் வசதி கிடைக்கும்?

ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களையோ மே 23ந் தேதி  முதல் அணுகி மாற்றும் வசதியைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

10. வங்கியின் கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?

இல்லை. கணக்கு வைத்திருக்காதவர் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த வங்கி கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ 20,000/-.என்னும்  வரம்பு வரை மாற்றிக்கொள்ளலாம்

11. ஒருவருக்கு வேறு நோக்கங்களுக்காக ரூ 20,000/-க்கு மேல்  பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது.

கட்டுப்பாடுகளின்றி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.

12. மாற்றிக் கொள்வதற்கு  ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. இந்த வசதி இலவசமாக வழங்கப்படும்.

13. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் இருக்குமா?

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/ டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

14. ஒருவரால் 2000 ரூபாய் நோட்டை உடனடியாக டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?

முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ரூ 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

15. ஒரு வங்கி 2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?

சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றால் அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றால், புகார்தாரர், ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம் (RB-IOS), 2021 இன் கீழ் RBI இன் புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலில் (cms.rbi.org.in) புகாரைப் பதிவு செய்யலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.