முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகா தேர்தல் விரலால் தாமரையை கிள்ளிப் பறித்த கை

கர்நாடகா தேர்தல்  விரலால் தாமரையை கிள்ளிப் பறித்த கை !         



கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும்  பாரதிய ஜனதா கட்சிக்குமான வாக்கு வேறுபாடு என்பது வெறும் 7 விழுக்காடு மட்டுமே . இது ஒன்றும் அரசியல் அறியாதவர்கள் பேசுவது போல  பா ஜ க இல்லாத தென்னிந்தியா என்பது எல்லாம் வெற்று மாயை ! "க்ளியர் மெஜாரிட்டி" அணைத்து அரசியல் அறிந்தோரும் கணித்த முடிவு  அப்படியே வந்துள்ளது

 ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியான நிலையில் .


பல கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய ரிசல்ட், ஒரு மாத இதழ்  வெளியிட்ட கணிப்போடு துல்லியமாகப் பொருந்துகிறது.



கர்நாடகாவிலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம்  10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி , காங்கிரஸ் கட்சி , ஜேடிஎஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி தான் நிலவியது. 113 என்ற ஜனநாயக மேஜிக் நம்பரை யார் பெறுகிறார்களோ, அவர்கள் தான் கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியும்.






ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துத் திணிப்புகளின் ஒருசார்பு நபர்களின் இதழ்கள் மற்றும்  காங்கிரஸ்  பாரதிய ஜனதா கட்சிகளிடையே பெரும்பான்மை இடங்களை எட்டுவதில் இழுபறி நிலவுமென்றே தெரிவிக்கப்பட்டதனால், ம ஜ த கட்சி பெறும் தொகுதி முடிவு  எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்த்த நபர்களின் கருத்து  எடுபடாமல் போனது,





முக்கிய மாத வார இதழ்களின் கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.







இதில் தான் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு  135 இடங்கள் வரை கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தது.சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத், நியூஸ் நேஷன் - சி.ஜி.எஸ், ராஜ்நீதி, போல்ஸ்ட்ராட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது அது எப்படி என்பதைத் தான் அவர்கள் கூற வேண்டும் மக்கள் மன நிலை அறியாத கருத்துத் திணிப்பு அது. 

இதனால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த முறை போலவே, இம்முறையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி  உருவெடுத்துக் குழப்புவார் என்ற எதிர்பார்ப்பும்  நிலவியது.

அதேசமயம், இந்த எக்ஸிட் போல் முடிவுகளை தாங்கள் நம்பவில்லை என காங்கிரஸ் கட்சி  மற்றும் பாரதிய ஜனதா கட்சி என இருதரப்புத் தலைவர்களுமே தெரிவித்தனர். தொங்கு சட்டசபை அமையாது, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் கூறினர்.

இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறுகிறது. தற்போதைய சூழ் நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்த அறுதிப்பெரும்பாண்மையுடன்   ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா கட்சி பிரதான எதிர்கட்சி 

மஜத கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைக்காத நிலை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால், மஜத தலைவர் குமாரசாமியின் கிங் மேக்கர் எனும் கனவும்  கலைந்துள்ளது. தொங்கு சட்டசபை அமையும் என்ற பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் பொய்த்துப் போயின.

அப்படியே பிரதிபளித்த மக்களின் மன நிலை கணிப்பு ஒட்டுமொத்தமாக, கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்தது மாத இதழ் நிறுவனம் தான். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் பெற்ற வெற்றி ஏற்படுத்தவுள்ள தாக்கங்களாவன

அதிகார பலம், பணபலம், பொய்ப் பிரச்சாரங்கள்..எல்லாம் தவிடு பொடியானது! பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் பல காங்கிரசின் வெற்றிக்கான சூத்திரங்கள் மிகவும் நுட்பமானது, இந்த தோல்வி பாஜகவிற்கு தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் என்ன பின்னடைவுகளைத் தரும் என்பதைப் பார்க்கலாம்  

கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற தன் முழு பலத்தையும் பிரயோகித்தது பாரதிய ஜனதா கட்சி பிரதமர் நரேந்திர மோடி ஆறுமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததோடு தெருத்தெருவாகவா சென்று ஓட்டும் கேட்டார்! உள்துறை அமைச்சர் அமித் ஷா பல முறை வந்து மேடைகள் தோரும் முழங்கினார்! பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரம் எதுவுமே கர்நாடகா மக்களிடையே எடுபடாமல் போய்விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கின்ற ஹோதாவில் பாஜக இந்த தேர்தலில் செய்த அத்துமீறல்கள் கொஞ்சம் அதிகமாகவே பார்க்கப்பட்டது,

அத்தனையையும் கடந்து குழப்பமில்லாத தெளிவான வெற்றியை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தந்துள்ளனர். பாஜகவிற்கு பெருத்த பின்னடைவாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து விடக் காரணம், நான்கு வருட ஆட்சியில் பாஜக அரசு செய்த மிதமிஞ்சிய ஊழல்களாகும் 40 சதவிகித கமிஷன் கட்சி என்ற முத்திரை அந்தக் கட்சியின்  மீது மிக வலுவாக குத்தப்பட்டது. இது அனுபவபூர்வமான உண்மை என்பது தான் இந்த பிரச்சாரத்தின் வெற்றியாகும் ! மேலும்  பாஜகவின் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறைகள், வெறுப்புப் பேச்சுக்கள், தாக்குதல்கள் ஆகியவற்றால் சமூக நல்லிணக்கம் கெடுவதை மக்களும் விரும்பவில்லை. பாஜக வந்தால் குடியுரிமைச் சட்டத் திருத்தங்கள், சி.ஏ.ஏ ஆகியவை அமலாகுமென்று பகிரங்கமாகச் சொன்ன நிலையில் தான் தோல்வியை மக்கள் தந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும். பாஜக அமைச்சரவையில் வெற்றிகரமாக இருந்த  சோமண்ணா,  ஹாலப்பா ஆச்சார், பி.சி. நாகேஷ், கே.சி.நாராயண கவுடா, முருகேஷ் நிரானி, பி.ஸ்ரீ ராமலு, டாக்டர் சுதாகர், கோவிந்த் கார்ஜோள் ஆகியோரை மீண்டும் சட்ட சபைக்கு அனுப்ப மக்களே விரும்பவில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்கள் சீரிய முறையில் திட்டமிடப்பட்டன! காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒற்றுமை ஒரு சிறப்பம்சம்! ராகுல் காந்தியின் பாரத்ஜூடோ  யாத்திரையும், தற்போதைய பிரச்சாரங்களும் நல்ல பலன்களைத் தந்துள்ளன! அத்துடன் தமிழ் நாட்டின் சசிகாந்த் செந்தில் அங்கு செய்த வியூகங்கள், களப் பணிகள் போன்றவையும் இந்த வெற்றிக்கு பங்களித்துள்ளன!

கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத வண்ணம் குழப்பமான தீர்ப்பை மக்கள் தந்து வந்தனர். இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தயவில்லாமல் காங்கிரசோ, பாஜகவோ ஆட்சி அமைக்க முடியாத நிலைமை உருவாவதும், அந்த சூழலை பயன்படுத்தி சிறிய கட்சியில் தலைவரான குமாரசாமி முதல் அமைச்சராகி ஆடாத ஆட்டம் போடுவதுமே இதுவரை வாடிக்கையாக இருந்தது!

குதிரை பேர அரசியலுக்கு வாய்ப்பில்லாமல் போன குமாரசாமி. நேற்று காலை ஓட்டு எண்ண ஆரம்பிக்கும் முன்பு பேசிய பேச்சு இது ”எங்கள் ஆதரவு வேண்டுமென்றால், முதல்-மந்திரி பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்தக் கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது…” என்றெல்லாம் ஆணவத்தோடு மாடு வாங்கும் முன்பாகவே  நெய் விலை பேசுவது போலவே பேசினார். அப்படிப் பேசிய குமாரசாமியின் மகனும் முன்னால் பிரதமர் தேவகௌடா பேரனுமானவரையே மக்கள் தோற்க வைத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்பது ஜனாநாயகத்தில் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. குமாரசாமியே திக்கித் திணறித் தான் அவரது தொகுதியில் வென்றார்!

போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண் சவதி, அத்தாணி தொகுதியில்  67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடகாவில் 25 முதல் 30 தொகுதியில் தமிழர்கள் மட்டுமே அதிகமாக வசிக்கிறார்கள். இங்கு பாஜக பெருத்த பின்னடைவைச் சந்தித்தது கவனிக்கத்தக்கது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அதை அடாவடியாக பாதியிலேயே நிறுத்தினார் ஈஸ்வரப்பா! அதை அமைதியாக இருந்து ஆதரித்தார் மாநிலத் தலைவரான அண்ணாமலை! அதற்கான விலையை தமிழ் மக்கள் பாஜகவிற்கு தேர்தல் மூலமாக தந்துவிட்டனர் என அப்பகுதி தமிழ் மக்களின் கருத்தாகும். 

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியானது தேசிய அளவில் அந்தக் கட்சிக்கு தற்போது ஒரு பெரும் புத்துணர்வைத் தந்துள்ளது. பீமபூஷ்டியாகக் கருதப்பட்ட  பாஜகவை  வீழ்த்த முடியாத கட்சியல்ல என்ற நம்பிக்கையை இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியினருக்குத் தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் மனோ பலத்  திடத்தையும் இந்த வெற்றி அவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. தமிழகத்திலுமே கூட காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு மரியாதையை இந்த வெற்றி ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லலாம். தற்போதைய நிலவரப்படி, தென்னிந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் பாஜக ஆட்சி கிடையாது!காங்கிரஸ் கட்சி  ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பது மக்களுக்கும் தெரியும். ஆனால், பாஜகவை போல சாமானிய மக்களுக்கு ஆபத்திலாத கட்சி என்பது தான் மக்களின் பார்வையாக உள்ளது. பாஜகவின் மீதான அதிருப்தியும், காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளும் இந்த வெற்றியை கர்நாடகத்தில் சாத்தியப்படுத்தியுள்ளன! இஷ்டத்திற்கு இலவசங்களை அறிவித்து வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது மிகப் பெரிய சவாலாகும்.

மேலும்நஅறிவிக்கட்ட இலவசங்களை அமல்படுத்த கஜானாவில் பணமிருக்குமா என்பதும் தெரியாது. ஆனால், ஊழலற்ற நிர்வாகத்தை சாத்தியப்படுத்த முடியுமானால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டுக்குச் செல்லும் பணத்தைத் தடுக்க முடிந்தால் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிவிடலாம். இதற்கான நேர்மையும், நெஞ்சுரமும் காங்கிரசுக்கு இருக்கிறதா என்று புதிய முதல்வர் செயல் என்பது போகப் போகத் தான் தெரியும்.

உள்கட்சி சண்டைகள் இல்லாத சுமுகச் சூழலை சாத்தியப்படுத்த வேண்டிய அவசியத்தை காங்கிரஸ் கட்சி  உணர வேண்டும்.  சித்தாராமையாவும், சிவகுமாரும் போட்டி இல்லாமல் விட்டுக் கொடுத்து செயல்படுவதில் தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றி அடங்கியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் இந்த வெற்றி சாத்தியமாகி இருப்பதை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உணர்ந்து கொள்வார்கள் 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த மிகப் பெரிய வெற்றி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சித்தராமையாவின் 75 வது பிறந்தநாளை  விழாவாகக் கொண்டாடியதில் ராகுல் காந்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் சித்தராமையாவையும், டிகே சிவக்குமாரையும் ஆரத்தழுவச் செய்தார் ராகுல் காந்தி. அது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், தேர்தலுக்கு அவசியமான ஒற்றுமை அந்த மேடையில் தான் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோதும் இருவரும் ராகுலுடன் ஒன்றாகவே கலந்து கொண்டனர். உட்கட்சியில் பூசலும், பிளவும் இருந்தால் மக்கள் முன் வலுவான மாற்றை முன்னிறுத்த முடியாது என்பதே டெல்லி மேலிடத்தின் கருத்தாக இருந்தது.

 கர்நாடகத் தேர்தலை சித்தராமையாவும், டிகே சிவக்குமாரும் இணைந்தே முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டனர். அதை அப்படியே செய்தனர் . இருப்பினும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இன்னும் டிகே சிவகுமாருக்கு அதிருப்தி உள்ளதாகவே தெரிகிறது. தேர்தல் வெற்றிக்கு உழைப்பதில் இருவரும் காட்டிய ஒற்றுமை பலனளித்துள்ளது. பிரச்சார மேடைகளில் கூட ஒன்றாகத் தான்  தோன்றினர். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மட்டும் பூசல் இருந்ததால் அதைத் தவிர்த்துவிட்டே பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இருவரும் இணைந்து மக்கள் குரல் யாத்திரையை மேற்கொண்டனர். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றாகவும் பின்னர் அவர்கள் தேர்வு செய்த பகுதிகளில் தனித்தனியாகவும் பிரச்சாரம் செய்தனர்.

ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரம்: 40 சதவீத கமிஷன் அரசு.. கர்நாடக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் கையில் எடுத்த கோஷம் தான் பாஜக ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் அரசு என்ற விமர்சனம். இதனைக் குறிப்பிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக போஸ்டர்களை ஒட்டியது காங்கிரஸ். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், துண்டு பிரசுரங்கள் என அனைத்திலும் காங்கிரஸ் 40 சதவீத கமிஷன் அரசு என்ற விமர்சனத்தை முன்னெடுத்தது. இது தேசிய அளவில் பிரபலமாக்கப்பட்ட "40% Sarkara" என்ற தலைப்பில், பாஜக ஆட்சியில் நடந்த பல்வேறு துறைகளின் ஊழல்களை காங்கிரஸ் பட்டியலிட்டது.

ஒப்பந்ததாரர் தற்கொலை: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றம்சாட்டி, ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்

இந்த விவகாரத்தை முன் வைத்து கர்நாடக பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறியது. கடந்த வாரம் 40 சதவீத கமிஷன் அரசு (40percentsarkara.com) என்ற பெயரில் இணையதளம் தொடங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களை கோரியது காங்கிரஸ். இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ரேங்க் கார்டு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது அது. பேடிஎம் ஸ்கேனர் போன்று 'பே சிஎம்' எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டரை வெளியிட்டது. இதில் பசவராஜ் பொம்மையின் படம் கியூஆர் கோட் வடிவில் இடம் பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டதென்றே சொல்ல வேண்டும். கர்நாடக தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரதமரோ, அமித் ஷாவோ ஊழல் ஒழிப்பு பற்றி எதுவும் பேசவில்லை. அதைவிட முக்கியமான விஷயம் பிரச்சார மேடைகளில் ஈஸ்வரப்பாவும் இடம் பெற்றார். ஊழலை முன்வைத்தே மல்லிகர்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் இருந்தே மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சற்று விலக்கியே வைத்திருந்தது காங்கிரஸ். காரணம் முன் ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான். இந்தத் தேர்தல் பாஜக - காங்கிரஸ் இடையேயான போட்டியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் வியூகமாக இருந்தது. அதனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வரவேற்கவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை. ஒருவேளை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தால் அது வொக்கலிகா, தலித், முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கலாம் என்பதால் இவ்வாறாக தவிர்த்திருக்கலாம். இதனால் தான் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சில தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று கூறியிருந்தாலும் கூட மஜதவை நாடுவதாக காங்கிரஸ் சிறு சமிக்ஞை கூட காட்டவில்லை.

அதேபோல் காங்கிரஸ் விலக்கிவைத்த இன்னொரு கட்சி ஏஐஎம்ஐஎம். அசாதுதீன் ஓவைசியின் இந்தக் கட்சியை உ.பி. தேர்தலின்போது பாஜகவின் பி டீம் என்று காங்கிரஸ் வெகுவாக சாடியது. ஆனால் அதுபோன்று எந்த ஒரு பிரச்சாரத்தையும் இத்தேர்தலில் காங்கிரஸ் செய்யவில்லை. முழுக்க முழுக்க இருமுனை போட்டியாகவே காங்கிரஸ் அணுகியது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 5 அறிவிப்புகள் அக்கட்சிக்கு வாக்குகளை அதிகமாக ஈர்த்தன என்றும் கூறப்படுகிறது.

க்ருஹ லக்‌ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.

யுவா நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறைந்தது இரண்டாண்டுகள் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும். வேலையில்லா டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.

க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பொதுப்பணித் துறையில் வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் நடைமுறை அமல்படுத்தப்படும். பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பாசனத்திட்டம், நகர்ப்புற வளர்ச்சி, மின் துறை அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு லஞ்சம் கண்டறியப்பட்டால் அவற்றைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்படும்.

இந்த  அறிவிப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேவேளையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்ற அறிவிப்பு வெளியானது பாஜகவுக்கு அது நல்லதொரு பிடிமானமாகக் கிடைத்தது. ஆனால், கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி, ''பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் காங்கிரஸிடம் இல்லை. வெறுப்பை விதைக்கும் அமைப்புகளை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்க‌ளின் அடிப்படையிலே சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம். ஒரு கட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ், அமைப்பை தடை செய்தார். அதனை திரும்ப பெற்றது ஜவஹர்லால் நேரு தான் என்பதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்று கூறி காங்கிரஸுக்கு அந்த அறிவிப்பால் எவ்வித பின்விளைவும் ஏற்படாமல் சரிகட்டினார்.

அதன் நீட்சியாகத் தான் இன்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள பழமையான அனுமன் கோயிலான ஜக்கு கோயிலுக்குச் சென்றதையும் பார்க்கலாம். கர்நாடக தேர்தல் வரலாற்றில் 73.19 சதவீதம் என்ற வாக்குப்பதிவில் ஒரு புதிய மைல்கல். அதற்கு காங்கிரஸ் கட்சியின் மேற்கூறிய வியூகங்கள் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகா அரசியல் வரலாற்றில் கடந்த 38 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை; அது இப்போதும் நடந்திருக்கிறது போன்ற விமர்சனங்கள் வந்தாலும் கூட இந்த தேர்தல் வெற்றி கர்நாடகத்திற்கு மட்டுமானதா அல்லது அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இருக்கலாமா என்பதே  .பெங்களூருவில்  கேபிசிசி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்  தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,  பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது வெற்றி குறித்து அணைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்  இனி காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் சித்தராமையாவா இல்லை சிவக்குமாரா என்பதே இதேபோல தேர்தல் நடந்த நான்கு  சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் இரு தொகுதிகளையும் அப்னா தளம் கைப்பற்றியது,

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு தொகுதிகள், ஒடிசா, மேகாலயாவில் தலா ஒரு தொகுதியில் மே மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் சான்பே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரிங்கி கோல் 9,587 வாக்குகள் வித்தியாசத்தில்  சான்பேயில் . வெற்றி பெற்றார் இதேபோல் சவுர் சட்டமன்ற தொகுதியைும் அப்னா தளம் கைப்பற்றியது.

அப்னா தள வேட்பாளர் ஷபீக் அகமத் அன்சாரி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். ஒடிசாவின் ஜார்சுகுடா தொகுதியில் ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளர் திபலி தாஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி  வேட்பாளரை விட திபலி தாஸ் 48,721 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மேகாலயாவில் சோஹியோங் தொகுதியில் என்பிபி கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சின்ஸ்ஷார் குபார் ராய் தாபா கைப்பற்றினார். சின்ஸ்ஷார் 16,600 வாக்குகளையும், என்பிபி வேட்பாளர் 13,200 வாக்குகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அடுத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தேர்வான சட்டமன்ற   உறுப்பினர்கள் கூடி புதிய முதல்வரை அகில இந்தியத் தலைமை ஒப்புதல் பெற்று தேர்வு செய்து மாநில ஆளுநருக்கு  தருவர் அவர் ஆட்சி அமைக்க முறையாக அழைப்பு விடுப்பார் அதுவரை ஜனநாயகம் காக்க வெற்றி பெற்றவர்களை கட்சி தங்கள் ஆதரவு மாநிலத்தில் வைத்துப் பாதுகாக்கும், மேலும்கர்நாடகா ..முதல்வர் பதவி..

தலைமை முடிவு செய்யும். கூட்டத்தில் முடிவு. சிவகுமார். சித்தராமையா டில்லி பயணம்.. கடலோர கர்நாடகாவில் பெங்களூரூவில் பாஜக  பெருவாரியாக வென்றுள்ளது என்பது புறம் தள்ளப்படும் புள்ளி விவரமல்ல.     'மலர்களிலே இராணி போல கன்னடத்தில் மலர்ந்திருந்த  தாமரை   மாந்தர் புகழும் பாரதத்து தேசிய மலர் தாமரை, மக்கள் வைத்த நம்பிக்கை  மாறியதால் ஆட்சியும் காட்சியும் அங்கு கை மாறியது'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த