முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களாகக் கொண்ட தமிழர்கள் சித்திரா பௌர்ணமி விழா

மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை. ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.


நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களாகக் கொண்ட தமிழர்கள், சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவில் இராசராச சோழனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த குறிப்பு உள்ளது. இதன் மூலம் தமிழர்கள் தொன்றுதொட்டு சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அறியமுடியும்சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இது. அதனால் அந்த எழிலைக்காணவே பலரும் கன்னியாகுமரிக்குச் செல்வது உண்டு. இந்த நாளில்தான் அழகர் ஆற்றில் இறங்குவார். மக்கள் வைகையின் நதிக்கரை ஓரங்களில் எல்லாம் விழாக் கொண்டாடுவார்கள். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.









சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.சித்ரா பௌர்ணமியின் விசேஷங்களில் ஒன்று சித்ரகுப்த வழிபாடு. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால் அவருக்குச் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.






சித்ரா பௌர்ணமி பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு.

சித்ரா பௌர்ணமி நாளில் குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்றும் கூறப்படுகிறது.






தமிழர்களின் மாதம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே முதல் மாதம். என்றாலும் மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை. ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.








நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களாகக் கொண்ட தமிழர்கள், சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ராசராச சோழனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த குறிப்பு உள்ளது. இதன் மூலம் தமிழர்கள் தொன்றுதொட்டு சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அறியமுடியும்

சித்ரா பௌர்ணமி சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இது. அதனால் அந்த எழிலைக்காணவே பலரும் கன்னியாகுமரிக்குச் செல்வது உண்டு. இந்த நாளில்தான் அழகர் ஆற்றில் இறங்குவார். மக்கள் வைகையின் நதிக்கரை ஓரங்களில் எல்லாம் விழாக் கொண்டாடுவார்கள். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.


சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாகச் சொல்லும்  புராணங்கள் .

குற்றாலத்தில்  செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்பது செய்தி 











இத்தனை சிறப்பு நிறைந்த சித்ரா பௌர்ணமியின் விசேஷங்களில் ஒன்று சித்ரகுப்த வழிபாடு. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால் அவருக்குச் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.





இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால் அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. இந்த நாளில் அந்தக் காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், ‘சித்ரகுப்தன் படி அளக்க...’ என்றும் 'சித்திரனார் புத்திரனார் சிவனார் திருக்கணக்கர் அத்தி சூழும் அந்நாட்டிற்கு அவரே திருக் கணக்கர் '' என எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடியில் எழுதி பொங்கல் வைத்து அதை  எழுதி வைத்து மதுரை மாவட்டங்களில் மக்கள் இன்றும் வழி வழியாக வழிபடுவதை நாம் அறிவோம் . இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து மாலையில் பூஜை செய்வதும் விசேஷம்.





இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.காஞ்சிபுரம் ராஜவீதியில் சித்ரகுப்தர் கோவில் கயிலாச நாதர் கோயிலுக்கும் வைகுண்டப் பெருமாள் கோயிலுக்கும் இடையில் அமைந்திருப்பதே ஒரு குறிப்பு என்பார்கள் அடியவர்கள். அதாவது, அவரவர் செய்யும் பக்திக்கேற்ப கயிலாயத்துக்கோ வைகுண்டத்துக்கோ அனுப்பி வைப்பவர் இவரே என்கிறார்கள். அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது கையில் எழுத்தாணியும் ஓலைச் சுவடியும் கொண்டவர் சித்ரகுப்தர் என்று சுட்டப்படுகிறார். இவரது மனைவி  கர்ணாம்பாள்  காஞ்சிபுரம் கோயிலில் இவர் கர்ணாம்பாள் சமேதராகக் காட்சிகொடுக்கும் உற்சவ மூர்த்தியாக உள்ளார். கர்ணம் என்றால் கணக்குப்பிள்ளைகளைக் குறிக்கும் என்பார்கள். கர்ணத்தின் மனைவியாதலால் இவர் கர்ணாம்பாள்.






திருவண்ணாமலையில் சித்ரகுப்தன் - விசித்ர குப்தன் ஆகிய இருவருக்கும் சந்நிதி உள்ளது. மதுரை  ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதகமான பக்தர்கள் கூட்டத்தால்  கலைகட்டியது. சித்திரை திருவிழாவில் விருந்தும் கோவிலில் வடக்கு - மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   காலை 08.35 மணி முதல் 08.59 வரை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு வருகை தந்த பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருள, அம்பாளும், சுவாமியும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தது சிறப்பாக நடந்தது 







மதுரை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து அனுப்பி வைத்து கொடுத்ததாக ஐதீகம் கூறப்படும் பெருமைக்குரிய திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றதிதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண வைபவம் காரணமாக காலை முதல் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வெகு விமர்சியாக திருமண வைபவ விழா தொடங்கியது. மீனாட்சி அம்மன் பச்சைப் பட்டு உடுத்தியும் சொக்கநாதர் – பிரியாவிடை, பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு கோவில் திருமண மேடையில் காட்சியளித்தனர்.




தொடர்ந்து சொக்கநாதர் – மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவமும் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சொக்கநாதர் – மீனாட்சியாக மேடையில் நின்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க 08.40 மணிக்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் கழுத்தில் மாங்கல்யம் சூட்டும் விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றதில் பலலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த பழைய திருமாங்கல்யத்தை மாற்றி புதிய திருமாங்கல்யத்தை சூட்டிக் கொண்டனர்.அம்பாள், சுவாமிக்கு புதிய வஸ்திரம் அணிவித்தல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. பிறகு 08.45 மணிக்கு மேல் பிரியாவிடை அம்மன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டும் வைபவம் நடைபெற்றது. இந்த சமயத்தில் திருக்கல்யாண வைபவத்தை காண வந்திருந்த பெண்கள் பலரும் தங்களின் தாலி கயிற்றை மாற்றி, புதுக்கயிறு அணிந்து கொண்டனர். இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அன்னை மீனாட்சி அருள்வாள் என்பது அவர்கள்  நம்பிக்கை. அறநிலையத்துறை சார்பில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5000 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன், கட்டணம் இல்லாமல் திருக்கல்யாணத்தில் காண வந்த பக்தர்கள் குறிப்பிட்ட அளவிலும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாண வைபவத்தை நேரில் காண கோவிலைச் சுற்றி பல பகுதிகளிலும் காத்திருந்த பக்தர்களின் வசதிக்காக LED பெரிய திரைகளில் திருக்கல்யாண வைபவத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு திருமண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மதுரை சேதுபதி பள்ளி உள்ளிட்ட இடங்களில் திருக்கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 01 ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி உள்ள வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன்  திருக்கோவில் 1432 ஆம் பசலி சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் கட்டளை மூலம் சிறப்பாக நடைபெற்றது. கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பில்

மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். அம்மன் பெயர் தடாதகைப்பிராட்டி

1752 ஆம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்குக் கிடையாது.

1710 ஆம் ஆண்டில் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோவில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 



1898 ஆம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று இப்போது நாம் குறிப்பிடும் பெயர் காணப்படுகிறது.

இது தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கருத்து 

விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் நாயக்கர் வழி கடைசி அரசி மீனாட்சி என் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் இதனை மாற்றி மீண்டும் "அருள்மிகு நாச்சியார் கோவில்"என்று இன்றும்  அழைப்போர்கள்  உண்டுஇதை வெறும் சைவ - வைணவ சமயங்களின் விழாவாக சுருக்கி விட முடியாது. மீனாட்சி கோவில் கொடியேற்றத்தில் துவங்கி அழகர் மீண்டும் மலைக்கு திரும்பும் வரை மொத்தம் 22 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பெரும் பொருளாதார சுழற்சியும், சமூக தொடர்பும் நிகழ்கின்றன.திருவிழாவிற்கு முன்னதாக அழகர் வேடமிடுவதற்கான பிரத்யேக உடைகளை, உபகரணங்களை புதுமண்டபத்தில் வாங்குவது, தேர் முட்டி அருகே ஆட்டுத் தோலில் செய்யப்பட்ட பையை வாங்கி துருத்தி நீர் தெளிக்க பயன்படுத்துவது, திரியெடுத்து ஆடுவது, நீர் - மோர் பந்தல்கள் அமைப்பது, குழந்தைகளுக்கு தலைமுடி மழித்து காது குத்துவது, சாதி பேதமில்லாமல் எல்லா மக்களும் அழகரை காண ஒன்றாக திரள்வது என இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தை உயிர்ப்பிக்கின்றன.மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவது தான் அழகரின் மதுரை பயணத்தின் நோக்கம் என கோயில் திருவிழா அழைப்பிதழ்

கூறுகிறது.பாண்டிய நாட்டில் சைவ - வைணவ எதிர்ப்பு போராட்டம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. எனவே, சைவ - வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவே இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன.




மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதியில் நடப்பது இதற்கான சான்று.

சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மாற்றப்பட்டுள்ளது. வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் (நாரைக்கு முக்தி) கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயர் 'தேனூர் மண்டபம்'. தேனூரை சேர்ந்தவர்களே இங்கு கோயில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்றாக அமைந்துள்ளது.

இந்த இரண்டு விழாக்களையும் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 - 1659) தான் இணைத்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமைத்த தேர்களை இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடை சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் இதை செய்துள்ளார். திருவிழாக்களை மாற்றக்கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமண சீர் கொண்டு வருவதாகவும் நம்பி மக்கள் தங்கள் கதைக்குள் சேர்த்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.திருமலை நாயக்கர் காலத்திற்கு பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதன் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1706 - 1717) ஊருக்குள் புகுந்து தாக்கும் அளவிற்கும், அழகர் கோவில் பகுதியில் உழவுத்தொழில் நடத்த இயலாமல் தொல்லை தருமளவும் கள்ளர் சாதியினர் வலிமை பெற்றிருந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அழகர் ஊர்வலத்தை ஒருமுறை கள்ளர்கள் மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது.




மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் அழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.அழகர் ஊர்வலம் மதுரையை சேர்ந்த உயர்சாதியினரால் (சைவர்களால்) தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம். பிராமண பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களை போல வேடமணிந்து வந்தது இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.

"அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டதாகவும், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பனை நினைத்ததாகவும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும்" என தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் வழக்கில் இருக்கிறது.மதுரை தங்கச்சி பூமி; அழகருக்கு அக்கரையும் மீனாட்சிக்கு இக்கரையும் தீந்திட்டு; அழகருக்கு எல்லை அவ்வளவு தான்" எனும் புழங்குமொழிகள் அழகருக்கும் மீனாட்சிக்கும் எல்லைகள் வரையறுக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன.



அழகருக்கு வைகையாற்றின் தென்கரையில் நகர்ப்பகுதிக்குள் ஒரே ஒரு திருக்கண் உண்டு. யானைக்கல் பகுதியில் திருமலைராயர் படித்துறையை அடுத்து (கல்பனா திரையரங்கம் இருந்தவிடம்) ஐயங்கார் தோப்பு மண்டகப்படி எனும் திருக்கண் உண்டு. இந்த மண்டகப்படிக்கு அழகர் பல்லக்கு வருவதில்லை. மாறாக, வைகையின் வடகரையில் ஒரு மண்டகப்படியில் அழகரின் பல்லக்கு இருக்க, அழகரின் திருவடியாக கருதப்படும் சடாரியை மட்டும் ஒரு சிறிய பல்லக்கில் எடுத்து வந்து பூசை செய்து திரும்பவும் கொண்டு செல்கின்றனர். அழகர் வர முடியாத காரணத்தால் தான் அவரது திருவடியை மட்டும் அங்கு எடுத்து செல்கிறார்களோ என்ற எண்ணம் அழகரின் வருகை நகருக்குள் தடுக்கப்பட்டதை உறுதி செய்கிறது.வழியாக தெய்வீகச்சாயலுடன் ஒரு உறவுமுறையை கற்பித்துக்கொண்டு, வலிமையான எதிரிகளான இஸ்லாமியர்களின் பகையுணர்ச்சியை தமிழ்நாட்டு வைணவம் மழுங்கச்செய்திருக்கிறது. இதுவே, வண்டியூரில் தன் காதலி துலுக்கநாச்சியார் வீட்டில் அழகர் இரவு தங்குவதாக கூறப்படும் கதைக்கு காரணம்.மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா மதுரை நகருக்குள், வைகை நதிக்கு தென்புறத்திலேயே முடிந்து விடுகின்றன.

அழகர் திருவிழா வைகை நதி படுகையிலும், நதிக்கு வடகரையிலுமே நடைபெறுகின்றன. மீனாட்சி திருவிழாவில் நகர மக்கள் பெரும்பகுதியினரும், அழகர் விழாவில் நாட்டுப்புற மக்கள் பெருமளவிலும் பங்கேற்கின்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னது நாட்டுப்புற மக்களின் விழா.

அழகர் விழாவில் பங்குபெறும் மக்களிடம் பக்தி உணர்வுடன் சுற்றுலா உணர்வும் நிறைந்து காணப்படுகிறது. எளிமையினையும், ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை இவர்களிடம் தெரிகிறது. இவ்வகையான மக்களே சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பூட்டுகிறார்கள். திருவிழா கூட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்  என்பதை பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' எனும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வு நூலில் உள்ள கருத்துக்கள் உண்மையில் சிறப்பானவை                                     அதே போல் தேனி மாவட்டம் பளியங்குடி பழங்குடி மக்கள் இடுக்கி மாவட்டத்தில் மன்னர் சேரன் செங்குட்டுவனால் உறுவான மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா பளியங்குடியில் நடைபெற்றது.

மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா நாளை  மே மாதம் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை  அன்று கொண்டாடப்படுகிறது.

பளியன் குடியிருப்பு பகுதியில் சித்ரா பவுர்ணமி கொடியேற்றும் விழா நடைபெற்றது.

தமிழக கேரளா எல்லையில் கூடலூரின் 21-வது வார்டு பகுதியான பளியங்குடியிருப்புக்கு மேலே மங்கல தேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இதை மங்கல தேவி கண்ணகி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதல் நூற்றாண்டில்  ஆண்டுகளுக்கு சேர மன்னர் செங்குட்டுவன் இமயமலையில் இருந்து கனகதிவிஜயனை  வென்று கொண்டுவந்த கல் மூலம் வடித்த கண்ணகி சிலை  உள்ள கோட்டம் அல்லது கோவிலில்  ஆண்டுதோறும் கண்ணகி தெய்வம் பூந்தேரில் கோவலன் அழைத்துச் சென்ற தினமான சித்ராபவுர்ணமி நாள் அன்று விழா நடத்தப்பட்டு வருகிறது. கால மாற்றத்தால் இந்தக் கோவில் பழுதடைந்து தற்போது சேதம் அடைந்திருக்கிறது.

தமிழ்நாடு கேரளா எல்லையில் இடுக்கி மாவட்ட மழை உச்சியில்  கோவில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் இருந்து தமிழ்நாடு கேரளத்தின்  வனப்பகுதிச் செழுமையையும் , முல்லைப் பேரியாறு இணைந்த அணையின் அழகான தோற்றத்தையும் குமுளியில் காணலாம்.

கடந்த காலங்களில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் ஆண்டு தோரும் முதல் நூற்றாண்டு முதல் பக்தர்கள் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியங்குடியிருப்பு பகுதியில் இருந்து 6 கி.மீ. தூரம் கோவிலுக்கு நடந்து சென்று வழிபட்டனர். அவர்களுடன் கம்பம் பகுதிக்கு வந்து தமிழகத்தின் மக்களும் மேலும் கேரள மாநிலம் குமுளியிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் வனப்பகுதி வழியாகச் செல்வர் அதற்கு  சாலை வசதி உள்ளது. ஜீப்களும் செல்கிறது 

ஆனால் இரு மாநில வனத்துறையினர் இந்த சாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் திருவிழா தற்போது சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா நாளை மே மாதம் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை  கொண்டாடப்படுவதையொட்டி பளியன் குடியிருப்பு பகுதியில் சித்ரா பவுர்ணமி கொடியேற்றும் விழா நடைபெற்றது.

பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த மஞ்சள் நிறம் கொண்ட கொடி ஏற்றப்பட்டது முன்னதாக கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர் கம்பம் மங்கலதேவி கண்ணகி கோட்ட அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கற்கண்டு, பொங்கல், அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.  வனத்துறையினர் இந்தச் சாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதியளிக்கின்றனர். ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் திருவிழா தற்போது சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில்.

இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது.

இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. 

இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது.

2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. 

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள புதையுண்ட  மிகப்பழமையான கோயிவில்களில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான்.

அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. 

 அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது.

இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க காலக் கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது.  பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. 

அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. 

இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.



கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது.

சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது.

இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த