முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பழங்காலத் தமிழரின் வரலாற்றுச் சுவடு

பொற்பனைக்கோட்டை தமிழ்நாட்டின்  சங்க காலத்
ஸ்தளங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பெரிய கோட்டை மற்றும் குடியிருப்புகளைக் கொண்ட முக்கியமான ஸ்தலமிது,

இப்போது  நடத்தும் கண்டுபிடிப்புகள் இப்பகுதியின் வரலாற்றுக் கலாச்சாரப் பன்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகும், நாம் நேரில் சென்ற போது "அகழாய்வு அறிவியல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் தோண்டுவதற்குச் சிறந்த இடம் என்பது அரண்மனை இருந்தற்கான மத்தியப் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதுதொல்லியல் துறையின் கூற்றுப்படி, இந்தக் கோட்டையானது 17.75 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் மூன்று நுழைவு வாயில்களுடன் பரவியிருந்ததாக முன் நடந்த ஸ்தல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபுறமும் செங்கல் கற்களால்  சுவர்கள் உள்ளன. 1.26 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இரும்புக் காலத்திலிருந்து தொடர்ச்சியான குடியிருப்புகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு மேடு கோட்டைக்குள் இருந்ததாக இப்போதும் நம்பப்படுகிறது. சங்ககாலத்திற்கு முறபட்ட மக்கள் வாழ்வியலில் சம்பந்தப்பட்ட  புதைகுழிகள், கருப்பு மற்றும் சிவப்பு மற்பாண்டப் பொருட்கள் மற்றும் ஆரம்பகால வரலாற்று செங்கல்கள் தளத்திலிருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளன.

பழங்கால நிலப்பரப்பில், பொது ஆண்டு 3. முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலான நினைவுக் கல் வடிவிலுள்ள பழமையான கற்காலச் சான்றுகள் இந்த ஸ்தளத்திலிருந்து வெளிவந்துள்ளன. இது பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களுகு சமகாலமாக தெரிகிறது. இக்கிராமத்தில் பொன்கொங்கர் விண்ணகோன் மேற்கொண்ட கால்நடையாகவே நடந்த தரைப்படைத் தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரன் கனங்குமரனின் நினைவுக் கல் எழுப்பப்பட்டது.

சிதிலமடைந்த கோட்டை 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாமென்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாம் நேரில் சென்று பார்த்த போது இது சுற்றிலும் ஒரு பெரிய கோட்டை, தற்போதைய கோட்டையின் அளவு மற்றும் கட்டிடம் அரண்மனைப் பாரம்பரியத்தின் படி, இது 32 உட் கோட்டைகளைக் கொண்டிருந்தது. உள்ளே, கட்டிடங்களின் எச்சங்கள் மிச்சங்கள் ஒருவேளை மன்னரின் அரண்மனையாக இருப்பதில் உள்ளே அந்தப்புறத்தின் உப்பரிகை மூலமாக   ஒருவர் கவனிக்க முடியும். நான்கு முக்கிய புள்ளிகளில் கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

கோட்டைக்கு அருகில் ஒரு இரும்புக் கசடுகள் கொண்ட மேடு தெற்குப் பக்கத்தில் உள்ளது தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனைகள் பிற்காலக்  கோட்டை,  அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது, இக்கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமேயாகும். சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவி்ல் காணப்படும் இக்கோட்டையைச் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர்களின்  செங்கற்கற்கள் குவிந்து காணப்படுகிறது.கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்களும் நாமே கண்டு நிலையில்  கானப்படுகிறது.
கோட்டை உள்ளே அகழி இருந்ததற்கான அடையாளங்களும் ஒரு குளமும் காணப்படுகிறது.கோட்டையானது மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகளும் தெரிகின்றன. இது அரண்மனைத் திட்டு என்ற பெயரில் உள்ளூர் மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். கோட்டையின் வட்ட வடிவ அமைப்பானது  செயற்கை கோள் புகைப்படத்தில் தெளிவாகவே தெரிகிறது. அதை நாம் சுற்றி வந்தோம்  இக்கோட்டையில் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும் அது இங்கிருந்து 6 கி.மீ தொலைவிலிள்ள திருவரங்குளம் வரை செல்வதாகவும் உள்ளூர் மக்களால் இன்றும் நம்பப்படுகிறது. மதுரை போலவே தஞ்சாவூர் ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கார்குறிச்சி என்பது (திருக்கட்டளை), சிங்கமங்கலம் முதலான பகுதிகளில் படைகள் தங்கி இருந்ததாகக் கல்வெட்டுகள் (எண் 711, 683) தெரிவிக்கின்றன. தொண்டைமான்கள் புதுக்கோட்டை நகரைப் புதிதாக அமைத்த பின்பு புதுக்கோட்டை, பொற்பனைக்கோட்டை முதலான ஊர்கள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் மேலும் சோழ மன்னன்  மூன்றாம் இராஜராஜனும்கும் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் இடையே நடந்த பொன்னமராவதி யுத்தம் நடந்த காலத்தில் பாண்டியன் வெற்றி பெற்றது வரலாற்று நிகழ்வு,


சோழநாட்டின் படைகள் இங்கு தங்குமிடமாக இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் இக்கோட்டையில் இருந்த பனைமரத்தில் தங்கத்தாலான  பனம்பழம்  கிடைத்ததாகவும் அதனால் பொற்பனைக்கோட்டை எனவும்  அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இக்கோட்டையின் வரலாறாக உள்ளுர் மக்கள் செவிவழிச் செய்திகள் சிலவற்றையும் கூறுகின்றனர். 2012 ஆம் ஆண்டு இந்த கோட்டையிலுள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தக்கல் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனும் கொண்டுள்ளது. கோட்டைச் சுவருக்கு வெளியே சற்றுத் தொலைவிலுள்ள பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட சுடுமண் வார்ப்புக்குழாய்கள், உருக்குக் கலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இது 2500 ஆண்கடுளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்  இக்கோட்டையின் நான்கு திசைகளிலும் நான்கு திசைகாவல்  தெய்வங்களுக்கும் கோவில்கள் உள்ளன. அதில் சென்று நாமும் வழிபட்டடோம் கோட்டையின் கிழக்குப்பகுதியில் பெரிய வாரிக் கரையில் பழமை வாய்ந்த கீழக்கோட்டை ஆதி முனிஸ்வரர் ஆலயமுள்ளது.இந்த ஆலயம் அமைந்துள்ள பெரிய வாரியில் தாழம்பூ மரங்கள் கானப்படுகின்றன.மேற்குப் பகுதியில் மேலக்கோட்டை முனீஸ்வரர் ஆலயமுள்ளது. இந்த ஆலயத்தில் 8 அடி உயரமான  முனீஸ்வரர் சிலையுள்ளது. வடக்குப் பகுதியில் காளியம்மன் ஆலயம் உள்ளது.  இந்தக் கோவில்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழாவும் சிறப்பாகவே  நடைபெறும். ஆடி மாதக் கடைசி வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் பக்தர்களால் பால்குடம், காவடி எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையிலிருந்து சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்படுகின்றன. தெற்கே ஐயனார் ஆலயமுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கிறது முனீஸ்வரர் கோயில் குறித்த அப்பகுதி மக்கள் பேசும் செவி வழிச் செய்தியாக  நாம் கேட்டவை "புதுக்கோட்டை அருகில் ஒரு அடர்ந்த பாலை மரங்களடங்கிய காட்டில் முனிவர்  தவம் செய்து கொண்டிருந்தபோது காட்டிற்குள்  மனைவியுடன் வேட்டையாடிய வேடுவன், மனைவியை விட்டுப்  பிரிந்துவிட .எங்கும் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது முனிவர் வேடனைப் பார்த்து விவரம் கேட்க தன் நிலையை சொல்லி அழுத வேடன். முனிவர் தன் தவ பலத்தால் அந்தப் பெண் இருக்கும் இடத்தையும் கூற மனைவியை கண்ட  வேடன். தினம் தோறும் அந்த முனிவருக்கு கிழங்குகள், பழங்கள் முதலியவற்றை வழங்கியதாகவும் இந்தப் பகுதியில் ஒரு தங்கப் பனைமரம் தோற்றுமென்றும், அந்தப் பனை மரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்கப் பனம்பழம் விழுமென்றும், அதனை எடுத்து வாழ்க்கை நடத்தும் படியும்  அந்த வேடனுக்கு முனிவர் வரம் தந்த நிலையில் 

அதேபோல் பனைமரம் தோன்றி அதிலிருந்து தங்கப் பனம்பழங்கள் விழுந்தன. இதன் மதிப்பு தெரியாத  வேடன் அந்தப் பகுதியிலிருந்த ஒரு வணிகரிடம் தங்கப் பனம்பழத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்கி வந்தான் 

இத் தகவல் சோழ மன்னனுக்குக் சென்றது  வணிகரை அழைத்து விவரங்களை கேட்டவர், வேடனிடமிருந்து பெற்ற தங்கப் பனம்பழத்தைக் கொண்டு திருவரங்குலத்தில் சிவன் கோயிலை கட்டினார் என்பது ஸ்தல வரலாறு . தங்கப் பனைமரம்  பனம்பழம் கிடைத்ததால் இந்த பகுதி பொற்பனைக் கோட்டை என அழைக்கப்படுவதாக செவி வழித் தகவல் 


இந்த பொற்பனைக்கு காவல் தெய்வமாக பொருட்படை முனிஸ்வரர் விளக்குகிறார். 14-ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் ஐந்தாவது மன்னரான தொண்டைமான் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. முனீஸ்வரர் சிலை ஏழடி உயரம் இரண்டரை அடி அகலத்தில் நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் தெய்வமாதால் கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் இச்சிலையானது ஒரே கல்லால் அமைக்கப்பட்டது.

கோவிலிலுள்ள பொற்பனைக் காளியம்மனை வேண்டினால் திருமணம் மற்றும் குழந்தை பேறு உடனடியாகக் கிட்டும் என்பது மரபு வழி ஐதீகம். கோயிலில்  பல மத மக்கள் வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.

கோவிலின் பின்புறத்திலுள்ள கிணற்றில் எந்தக்காலத்திலும் தண்ணீர் வற்றாதமல் இருந்து கொண்டிருக்கிறது. கோவிலில் காளியம்மன் ஸ்தலம் காத்த முனீஸ்வரர், முத்தாள் ராவுத்தர், நாகம்மாள் ஆகிய உப தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

கோவிலின் அமைப்பு சிறியதான நிலையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பொருட்பனைக் கோட்டை அருள்மிகு  முனீஸ்வரர் விளங்குகிறார். ஆடி மாதத்தில் முப்பது நாட்களும் திருவிழாக்கள் நடைபெற.  திருவிழாவின் முடிவான நாளின் போது ஏழு அடி உயர முனீஸ்வரருக்கு சந்தனக் காப்பு அபிஷேகம் செய்து முடிக்கப்படுகிறது.பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தெரிந்த செங்கல் கட்டுமானம்; இனிமேல் மக்கள் கூட்டம்  குவியும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது தான் நமது பார்வை.

தமிழ்நாட்டில் அதுவும் பாண்டிய நாட்டில்  கீழடிக்குப்பின் சோழநாட்டின் எல்கையில் சிதிலமடையாத எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்  பொற்பனைக்கோட்டையிலுள்ளது. கனமான கோட்டை சுற்றுச்சுவர்களுடன் கொத்தலம், அகலி ஆகியவை காணப்படுவதுடன் சுற்றிலும் செங்கல், கருப்பு; சிவப்பு பானை ஓடுகள், கல்வெட்டு, இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள் வெளிப்பரப்பில் பரவிக் கிடக்கிறது. இதனை அகழாய்வு செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் பலரும் கோரிக்கை நீன்ட காலமாக வைத்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் அகழாய்வு செய்த போது, சில குறியீடுகள், தமிழ் வட்டெழுத்து  எழுத்துகளுடன் கருப்பு; சிவப்பு பானை ஓடுகள், மணிகள், வட்டச் சில்லுகள், ஆம்போரா உள்பட பல பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய அனுமதி தற்போது  கிடைத்துள்ள நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு  உத்தரவையடுத்துமே மாதம் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியராக இருந்த  கவிதா ராமு தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில். 'சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககாலக் கோட்டையை இங்கே காண முடிகிறது. இங்கு அரண்மனை  காணப்படலாம் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி, இணை இயக்குநர் இரா.சிவானந்தம், தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் க.ராஜன் ஆகியோர் வழிகாட்டுதல்படி பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை மற்றும் ஆய்வு மாணவர்கள் நீராவி குளத்தின் மேற்குப் பகுதியில் மேடாக உள்ள பகுதியில் செங்கற்கள், ஓடுகள் அதிகம் காணப்பட்ட அரன்மனைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வுப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே 7 செ.மீ முதல் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் வட்டச் சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், கெண்டி மூக்குகளும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் தகவல் வெளியான நிலையில் இளைஞர்கள் ஆர்வமாக அகழாய்வு நடக்கும் இடத்தைக் காண வந்து கொண்டிருக்கின்றனர். அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டிருப்பதால் இந்த கட்டுமானம் நீளமாகச் செல்வதால் இந்த இடத்தில் பெரிய கட்டடம் அரண்மனை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆய்வில் பெரிய அளவில் அகழாய்வு தகவல்கள் கிடைக்கும் கூறுகின்றனர். இனி பொற்பனைக் கோட்டைப் பகுதியில் மக்கள் மாணவர்கள் படைஎடுப்பு துவங்கும் ஆய்வுகளும் பல கட்டமாக நீளும் என்பதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்