முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நகர திக் விஜயமும் சிறப்பாக நடந்தது.மதுரை விழாக்கோலம்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன்  பட்டாபிஷேகம்


நகர திக் விஜயமும் சிறப்பாக நடந்தது நாளை திருக்கல்யாணம்.மதுரை விழாக்கோலம் 


ஸ்ரீ.மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பகலும் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் மெய்யன்பர்கள்  புடைசூழ பட்டத்தரிசியாக பாண்டிய நாட்டரசி ஸ்ரீ மீனாட்சி அரசியாக முடிசூட்டிக் கொண்டு பாண்டியர்களின் வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்


மீனாட்சி அம்மன். இன்று எட்டு திக்கும் விஜயம் புறப்பட்டார்.


நாளைய தினம் ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முதலில் வசந்த விழவாக 13 ஆம் நூற்றாண்டு வரை  சைவர்கள் விழாவாக நடந்த வசந்த விழா திருக்கல்யாண வைபபம்





காலப்போக்கில் பின் விஜயநகர நாயக்கர்கள் ஆட்சி துவங்கியது முதல் சித்திரைத் திருவிழாவாக வைணவக் கலப்புடன் நடந்தது  அதில் கடந்த வாரம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவதில் எட்டாம் நாளான நேற்று ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதியிலுள்ள 6 கால் பீடத்தில் இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோலை வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு சிறப்பு பூஜைகளும்  நடைபெற்றது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் சித்திரைப் பெருவிழாவின் எட்டாம் திருநாளில்  மதுரையில் மீனாட்சி பட்டாபிஷேகம் காலை ஸ்வாமியும் அம்பாளும் பல்லக்கில் அமர்ந்து மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபம் எழுந்தருள அங்கே மதியம் அபிஷேக அலங்கார தீபாராதனைகளாகி மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி திருக்கோவிலை நோக்கிப் புறப்படுவர்  மாலை அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இதற்கென்றே உள்ள வெள்ளிசிம்மாசனத்தின் மேல்  அதிகம்பீரமாக மீனாட்சி அம்மன் அமர்ந்திருக்க  மணிமுடி சூட்டி வேப்பம்பூத்தொடை சாற்றி செங்கோல் கொடுத்து சாம்ராஜ்ய பட்டாபிஷேக வைபவம் நடைபெற்ற


பின் இரவு ஸ்வாமியும் அம்பாளும் வெள்ளி சிம்மாசனங்களில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்  இன்றைக்கு நடக்கும் பட்டாபிஷேக வைபவத்தை நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி, youtube உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவோ  நேரலை வாயிலாகவோ நம்மால் காண முடிகிறது ஆனால் இதே வைபவம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் எவ்வாறு நடந்திருக்கும் என்று நாம் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா.




மன்னர்கள் காலத்தில் நடந்த மீனாட்சி பட்டாபிஷேக வைபவத்தை ஸ்ரீதலா புஸ்தகம் மிகவும் அற்புதமாக விவரிக்கின்றது பட்டாபிஷேகத்தன்று காலையில் மதுரை கோவில் ஸ்தானீகர்கள் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்து பட்டாபிஷேகம் பற்றி அறிவிப்பர் ! அதனைத் தொடர்ந்து மன்னரும் ஸ்நானம் பூஜை முதலாகிய அனுஷ்டானங்களை செய்து விரதம் மேற்கொள்வார். அது ஒருபுறம் இருக்க இங்கே திருக்கோவிலில் ஸ்வாமியும் அம்பாளும் கோலாகலமாக பட்டாபிஷேக வைபவத்திற்கு தயார் ஆவார்கள் . அபிஷேகம் அலங்காரம் முதலியவை நடைபெற்று அம்பிகை அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் சிம்மாசனத்தின் மீது அமருவார். பின்னர் ஏழு ஸ்தானீகர்களும் தேவஸ்தான திருக்கோவில் கருவூலத்தை திவான் பேஷ்கார் முன் திறந்து பட்டாபிஷேக கிரீடம், செங்கோல், மகர முத்திரை, மகரக்கொடி, பொன்னெழுத்தாணி, ரிஷப முத்திரை, நாக முத்திரை ஆகிய ஐந்து முத்திரைகளையும் வெளியே எடுத்து சகல மரியாதைகளோடு அவைகளை உலவாக சுமந்துகொண்டு வந்த





பின்னர் நம்பியாரின் தலைமையில் பூஜைகள் நடைபெற்று சகல வாத்தியங்களும் முழங்க வேத கோஷத்துடன் பட்டர்கள் அம்பிகையின் திருமுடியில் கிரீடத்தை சூட்டி செங்கோல் கொடுத்து பட்டாபிஷேகம் செய்து வைப்பர். 




இவ்வைபவம் திருக்கோவிலில் நடைபெற்ற. பின்பு அரண்மனையில்  மன்னருக்குச் செய்தி அனுப்ப, மன்னர் தமது படை பரிவாரங்களும், 72 பொலிகர்களும், நாட்டியப்பெண்களும், தீவட்டிகளும், சகல விருதுகளும் புடை சூழ யானையின் மீது தங்க அம்பாரியில் ஏறி திருக்கோவில் ஆறுகால் பீடத்தை வந்தடைவார், உடனடியாக அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்று அவருக்கு பட்டர் கையால் விபூதி பிரசாதம் வழங்கப்பெற்று மீனாட்சி சாற்றிக்கொண்டிருக்கும் இரட்டை பூ மாலையும் சாதராவும் அவருக்கு அணிவித்து பரிவட்டம் கட்டி சங்கல்பம் செய்து அம்மன் திருக்கரத்திலிருந்து செங்கோலை அவரிடம் ஒப்படைப்பர் !



அதனைப்போலவே ஐந்து முத்திரைகளையும் அந்தந்தந்த அதிகாரிகளிடம் ஒப்படைப்பர் !அதனை தாங்கிக்கொண்டு மீண்டும் அம்பாரியில் ஏறி பிரம்மாண்டமான முறையில் நகர்வலம் வருவார் மன்னர் ! கூடவே மீனாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர்க பட்டர்களும் பல்லாக்கில் வருவர் ! ஆம் மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஸ்தானீகர்கள் பட்டர்களுக்கு அப்போது அத்தனை மரியாதை உண்டு. ஊர்வலம் முடிந்த பின் அரசர் அந்த செங்கோலை அவர் அமரும் அரண்மனை ஆஸ்தான மண்டப சிம்மாசனத்தில் வைத்து அதன் அருகில் கீழே மன்னர் நிற்பார் !

பின்னர் அச்செங்கோலுக்கு பட்டர்கள் பூஜை செய்வர் ! அம்பிகையின் செங்கோலை முன்னிட்டுக்கொண்டு உடனே ராஜ தர்பார் நடைபெறும் ! அத்தனை பொலிகர்களும் மந்திரி பிரதானிகளும் சேனாதிபதிகளும் வந்து அதற்கு காணிக்கை மற்றும் பரிசுகளைத் தருவர் ! உடனே மன்னரும் பிரதி சம்பாவனை செய்வார் !!

அன்று இரவு முழுவதும் அம்பிகையின் செங்கோல் மன்னரின் சிம்மாசனத்தில் அவருக்கு பதிலாக அமர்ந்திருக்கும் ! மறுநாள் காலை தக்க மரியாதைகளுடன் மீண்டும் திருக்கோவிலைச் சென்றடையும் ! மதுரை பாண்டிய நாட்டில் அன்னை ஸ்ரீ மீனாட்சியே அரியாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆளுவதாக ஐதீகம் ! இதே வைபவம் ஆவணியில் சுவாமி பட்டாபிஷேகத்தன்றும் நடைபெறும் !! இது தான் விஜய நகர நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது, அனால் அதில் சின்ன வித்தியாசம் மறுநாளே செங்கோல் திரும்பவும் திருக்கோவில் செல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து சுவாமி பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடைபெறும் போது பிரம்பால் அடிக்க இதுவே பயன்படும் !திருமலை நாயக்கர் காலத்திலிருந்து இப்படித்தான் பாண்டிய மன்னர்கள் காலத்திய முறை மாறுபட்டு மதுரையில் பட்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது ! ஆமாம், மன்னர் ஆட்சி என்பது பின்னாளில் இல்லாது போனாலும் மேலே கூறிய அத்தனையும் சுதந்திரம் பெற்ற பின் மக்களாட்சி ஜநநாயகத்தில் இன்றும் ஒன்று விடாது நடைபெறுவது ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலின் பெருமையே ! மன்னர் என்பதற்கு பதிலாக இன்று அறநிலையத்துறை சார்பிலஹ திருக்கோவில் அறங்காவலர் தக்கர் விளங்குகிறார் ! திருக்கோவில் மணியக்காரர் பொன்னெழுத்தாணி விழுப்பாதராயராக திகழ்கிறார் !நகர்வலம் என்பதற்கு பதிலாக சுவாமி சன்னதி இரண்டாம் பிரகார வலம் நடைபெறுகிறது ! மதுரை பட்டர்கள் இன்றும் செவ்வனே இவ்வைபவத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர் ! அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்பிகையும் பாண்டிய நாட்டின்  மஹாராணியாக இன்றும் மதுரையில் வருவோர் அனைவருக்கும் அருளை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றார்.

"நீலமாமிடற்று ஆலவாயிலான் 
பால தாயினார் ஞாலம் ஆள்வரே "

மீனலோசனி பாசமோசனி !






ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் எட்டு திக்கும் திக் விஜயமும் நடந்த நிலையில் .நாளை திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது 

ஸ்ரீ மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல்,







அறநிலையத்துறையின்  துணை ஆணையர் ஆ.அருணாச்சலத்திடம் வழங்கப்பட்டது. செங்கோலைப் பெற்றுக்கொண்டவர், சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் ஸ்ரீ மீனாட்சி அம்மனிடம் ஒப்படைத்தார். பட்டாபிஷேகத்தில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரலாற்றில் தொண்மையான புராணக் கதையின் படி  கடவுளின் அவதாரமாக ஸ்ரீ மீனாட்சி ( மீன்களைப் போன்ற கண்கள் கொண்ட) பாண்டியநாட்டில் கடலோரம்  மீனவர் தலைவரின்  மகளாகப் பிறந்தார். பாண்டியர்களின் இலச்சினைச் சின்னமான மீன் அவர்களின் நாணயம் உள்ளிட்டவற்றில் அவர்களின் மரபைக் காட்டும்விதமாக இடம்பெற்றது.









மீனாட்சி (மீன்+ஆக்ஷி ) அல்லது கயல்விழி என்ற சொல் இரண்டு சொற்களின் சேர்க்கை அதாவது தமிழ்ச் சொல்லான மீனும் ஆட்சி சொல்லான பின் அது சமஸ்கிருத உச்ரிப்பால்  ஆக்ஷி (கண்)யாக மாறியது .பாண்டியர்கள் மீன் (கயல்), சுறா (மகரம்), கடியால் (மகரம்) – மூன்று கடலுயிரிகளையும் தங்கள் குலச் சின்னமாக சங்க காலத்தில் இருந்து இலச்சினை உடையவர்கள் 






முற்காலப் பாண்டிய மன்னர்கள் துவங்கி கடைசி மன்னராக இருந்த வீரபாண்டியர், சுந்தரபாண்டியர் வரை வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். மாலிக்காபூர் படைஎடுப்பு நடந்த 1311 ஆண்டு வரை தொடர்ந்து நடந்து வந்த நிகழ்வாகும்  எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி ஒருவர் ஸ்ரீ மீனாட்சி அரசி  அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு அம்மன் கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்பட்டது.





ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம்..எட்டு திக்கும் திக் விஜயம் நடந்த நிலையில்..நாளை திருக்கல்யாணம்..மதுரையில் விழாக்கோலம் கொண்டு தடபுடல் விருந்தும் நடக்கிறது









மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரைத் திருவிழா  மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததை அடுத்து சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அம்மனின் ஆட்சி துவங்கியுள்ளது. பட்டத்து அரசி ஸ்ரீ மீனாட்சி இரவு 9 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று திக்விஜயம் சிறப்பாக நடந்த நிலைஇல்  நாளைய தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நாளை மறுநாள் திருத்தேரோட்டமும் நடைபெறுகிது.

மதுரையின் அரசி மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமண விழா  மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றவுடன் மதுரை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.





மீனாட்சி பட்டாபிஷேகம்..எட்டு திக்கும் திக் விஜயம்..நாளை திருக்கல்யாணம்..மதுரையில் விழாக்கோலம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக முடிசூட்டிக்கொண்டு வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மீனாட்சி அம்மன். இன்று எட்டு திக்கும் விஜயம் புறப்படுகிறார். நாளைய தினம் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

சிவபெருமானை முதன் முதலாக மீனவர் தலைவரின் மகளாக சந்தித்த ஸ்ரீ மீனாட்சியை   சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவரது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. சுராமீனிடம் இருந்து மீனவர் குலம் காக்கும் கடவுளாக சொக்கநாதர் காட்சி தர அப்போது தான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணம் வந்தது.ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமானுக்கு  உறுதியளித்தார். அதன்படியே கயிலாயத்தில் இருந்து மதுரைக்கு வந்த புரணக்கதையில் கண்டபடி . மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சொக்கநாதர் சுந்தரேசுவரராக மதுரை பாண்டிய நாட்டின் மாப்பிள்ளையாக வந்தார். நல்ல நேரம் வந்ததும் அரசி ஸ்ரீ மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுப்பது வரலாறாகவே இருந்து வருகிறது. அதனையொட்டி ஸ்ரீ மீனாட்சி அம்மன் அருளாட்சி புரியும் மதுரைக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலிருந்து இன்று மாலை 5 மணிக்கு மேளதாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.









திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான், தெய்வானையுடன் புறப்பட்டு அம்மை அப்பனின் திருமணத்தில் பங்கேற்க வருகிறார். திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமான் தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாளை வழிபடுகின்றனர்.

நாளைய தினம் காலையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிது. பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார். மீனாட்சி அம்மனுக்கும் பிரியாவிடைக்கும் சுந்தரேஸ்வரர் மங்கல நாண் பூட்ட அதை பார்த்த மகிழ்ச்சியில் மதுரையில் உள்ள சுமங்கலி பெண்களும் தங்களின் கழுத்தில் புதுதாலி மாற்றிக்கொள்வது திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடனும் மாமா பவளக்கனிவாய் பெருமாளுடனும் மதுரையில் 5 ஆம் தேதி வரை தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


சித்ரா பவுர்ணமி நாளில் திருமலை நாயக்கர் காலம் தொட்டு கள்ளழகரும் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  இதில் வேடிக்கை நிகழ்வு ஒன்று மதுரைக்கு அரசி அன்னை ஸ்ரீ மீனாட்சி மட்டுமே நாயக்கர் வம்சத்தில் கடைசி அரசி பெயர் மீனாட்சி ஆகும் அவர் ஆட்சியில் தானும் மீனாட்சி அரசி என இருக்க இறுதியில் தற்கொலை செய்ததே வரலாறு ஆனது அதோடு நாயக்கர் ஆட்சியும் மதுரையில் முடிவுக்கு வந்தது 


 ஸ்ரீ மீனாட்சி அம்மன் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்திலும் முத்து, மரகதகற்கள், வைரம், வைடூரியம், கோமேதகம், கெம்பு, பவளம், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரிய முத்து மேற்கட்டி இதில் இருதலையாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரிய காந்தியின் உருவங்கள் 71,755 முத்துக்கள் பதிந்துள்ளன. முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள். முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள்.மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் ஒற்றைக்கிளி பெரிய முத்துக்களால் ஆனது. பட்டாபிஷேக கிரீடம், இதன் எடை 134 தோலா. 920 மாணிக்கம், 78 பலச்ச வைரம், 11 மரகதம், 7 நீலம், 8 கோமேதகம் பகிக்கப்பெற்றது.

வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.ரத்தின செங்கோல், இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசுமாரை கிரீடம், தலைப்பாகை கிரீடம். அம்மன் தங்க கவசம் 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது.நீலநாயக பதக்கம் மன்னர் திருமலை நாயக்கமன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ள   ' வெள்ளாறு அதுவடக்கா            மேற்குப் பெருவழியாம்

தெள்ளார் புனற்கன்னி         தெற்காகும் - உள்ளார

  ஆண்ட கடல்கிழக்காம்                ஐம்பத் தறுகாதம்

  பாண்டிநாட் டெல்லைப் பதி

                                         --பெருந்தொகை  கூற்றில் கட்டியக்காரர்கள் கூறுவது பாகுபலி திரைப்படத்தில் வரும் பொய்யான எல்கை இல்லை என்பதே,    ''போற்றுவதும் இழைத்த படியிதுவோ வெங்கனா வென்றன்

றழைத்த வழுகுரலேயால் - தழைத்தகுடை 

மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த 

தென்னவர்கோன் போன திசை'

(Inscriptions of The Pudukottai State, No. 678) பேசுவதும் 


மாமதுரை வரலாறே,   அதேபோல் சின்னமனூர் செப்புப்பட்டயம் கூறும் 'மதுரைச் சங்கம் வைத்து மாபாரதம் தமிழ்படித்து' என்ற வாக்கியம் மதுரை பாண்டியர் தேச கொற்கை மீனவரான புலவர் நக்கீரர் துவங்கி வள்ளல்  பாண்டித்துரைத் தேவர் வரை பொருந்தும்.  தற்காலத்தில் வரலாறு அறியாத சமூகம் ஒரு தலைமுறையாக தங்கள் குடும்ப வரலாறே மறந்து போய நிற்க! நாம் கடந்த கால வரலாறு பதிவு செய்வது அவர்கள் தேடும் காலத்தில் இது தீர்வாகும் என்ற பொது நீதிக்கானது.   மதுரை மாநகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், அதற்கு முன் அது கூடல் நகராகும் "மங்களம்  அருள்வாள் மதுரைக்கு அரசி  அங்கையர்கன்னி மதுரை மீனாட்சி"க்கு நாளை திருக்கல்யாணம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த