பலூன் மீன்கள்
தற்காத்துக்கொள்வதற்கு கடல் நீர் மற்றும் காற்றை உள்வாங்கி அதன் உடலை பத்து மடங்காக ஊதிப் பெருக்கும் ஆற்றல் கொண்டதனாலேயே, இதற்கு பலூன் மீன் எனப் பெயர். அதில் ஒருவகை மீன்களின் உடல் முழுவதும் முள்ளம் பன்றியைப் போல முட்கள் காணப்படுவதனால் முள்ளம் பன்றி மீன் எனவும் அழைக்கும் நிலை
தமிழ்நாட்டின் மீனவர்கள் அதைப் பேத்தை அல்லது பேத்தையன் என அழைக்கின்றனர். கொழுகொழுவென இருக்கும் மீனவக் குழந்தைகளை கடலோரப் பகுதி மக்கள் பேத்தை என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கும் பழக்கமுண்டு. பேத்தை மீன்களின் கல்லீரல், கருப்பை, தோல் மற்றும் தசைகளில் டெட்ரோடோ டாக்ஸின் எனும் விஷப்பொருள் உள்ளதால் அந்த நச்சுப் பகுதிகளை நீக்கி விட்டு கைதேர்ந்த சமையல் காரர்கள் மூலம் சமைத்து உண்பது நடக்கிறது ஜப் பான், சீனா, கொரியா நாட்டு மக்கள் இம்மீன் களை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக இராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துக்கால் மன்னார் வளைகுடா பகுதியில் பேத்தை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இது குறித்து மீன்வளத் துறை மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் கூறியதாவது: வெப்ப மண்டல கடற்பகுதியான மன்னார் வளைகுடாவில் பத்துக்கும் மேற்பட்ட பேத்தை மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் கோடை காலங்களில் இனப்பெருக்கத்துக்காக பேத்தை மீன்கள் கரைப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும்,
சமீப காலமாக கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களால், பேத்தை மீன்கள் அதிக எண்ணிக்கை கொண்ட குழுக்களாக கரை ஒதுங்குவது உலகளவில் அதிகரித்து வருகிறது. மன்னார் வளைகுடா கரை யோரம் அதிகளவில் பேத்தை மீன்கள் இறந்து ஒதுங்குவது இதுவே முதல் முறையாகும் எனக் கூறினர்.
கருத்துகள்