மகளிர் சக்தியின் எல்லையற்ற வல்லமையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது: பிரதமர்
கடந்த 9 ஆண்டுகளில் பெண்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதற்காக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள் குறித்த கட்டுரைகள், வீடியோ மற்றும் வரைகலைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“மகளிர் சக்தியின் எல்லையற்ற வல்லமை குறித்த நமது நம்பிக்கையைப் பிரதிபலிக்க, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஒளிமயமான எதிர்காலத்தை உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவதே அவர்களது கனவு. 9 ஆண்டுகால மகளிர் மேம்பாடு குறித்து தெரிந்துகொள்ள, நமோ செயலியில் இடம்பெற்றுள்ள சிறப்பானப் பதிவுகளைக் காணுங்கள்”
கருத்துகள்