முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு மனுவில் மூத்த வழக்கறிஞர் வாதம்

முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த  வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ளார்.



அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையிலிருந்து வருகிறார். இதற்கிடையே சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை எனவும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு  மனுவை ஜூன்  15 ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தாலும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த (எச் சி பி) ஹேபியஸ் கார்ப்பஸ் மனு விசாரணையில்  பழைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் செய்தார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில்  நடிகர் சஞ்சய் தத், நக்கீரன் ராஜகோபால் வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோளுடன்



பல தீர்ப்புகளை சுட்டிக் காட்டினார் என்.ஆர்.இளங்கோ அதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதமுள்ளதென்றும் கைது சட்டவிரோதமில்லை என்றால் தான் ஆட்கொணர்வு வழக்குத் தேவையில்லையென்றும் நேற்றைய உச்சநீதிமன்ற விசாரணையை மேற்கோள் காட்டி  வாதாடினார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக  உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றைச் சுட்டிகாட்டினார் .வழக்கறிஞர் அப்பாஸ் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு, இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதை இளங்கோ குறிப்பிட்டார். தொடர்ந்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால் ஆட்கொணர்வு மனு தொடரலாம் என நடிகர் சஞ்சய் தத் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார்  சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென்று நக்கீரன் ராஜகோபால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15 ஏ பிரிவை சேர்ந்திருக்கிறார்கள் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அடிப்படை உரிமை. நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாகக் கருத முடியாது. அரசியல் சட்டத்தின் 226 வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.



எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நவ்லகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக் காட்டி செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

 ஆட்கொணர்வு மனு ஜூன் 14 காலை 10.30 மணிக்கே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிபதி மாலை 5.30 மணிக்கே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இயந்திரத்தனமாக நிராகரித்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.   

  என்.ஆர்.இளங்கோ மேற்கோள் காட்டிய பல்வேறு வழக்கின் தீர்ப்புகளால் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் அதிர்ந்து ஒருகட்டத்தில் ஆட்கொணர்வு வழக்கில் இவ்வளவு நீண்ட வாதம் அவசியமா என்ற கேள்வியை முன்வைத்தது அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,        வழக்கிற்கு அவசியம் என்பதாலேயே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவை அமலாக்கத்துறை பின்பற்றவில்லை எனவும் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் முன்னாள் தமிழ்நாடு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  இருதயக் குழாய் அடைப்பு நோய் காரணமாக இருதயத்  தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாக காவேரி மருத்துவ மனையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது 

Coronary artery bypass surgery :- 

"It aims to bypass narrowings in heart arteries by using arteries or veins harvested from other parts of the body, thus restoring adequate blood supply to the previously ischemic (deprived of blood) heart" 

இருதயக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய உடலின் வேறு பகுதியிலிருந்து நரம்புகளை வெட்டி எடுத்து இருதயத்துக்குச் செல்லும் அடைப்பான நரம்புகளுக்க மாற்றாக இரத்தம் செல்லும் வழியை உருவாக்குவார்கள் .

அரசு மருத்துவ மனை செய்திக் குறிப்பில்  - 

triple vessel disease  எனச் சொல்லி 

 triple vessel disease, as its name suggests, affects all three of the heart's major blood vessels (left anterior descending, left circumflex, right coronary artery). 

கிட்டதட்ட அவரது இருதயதுக்குள்  செல்லும் மூன்று பெரிய ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறது  அரசு மருத்துவமனையின் செய்திக் குறிப்பு 

காவேரி மருத்துவமனையின் சார்பில் வந்த தகவலில்  Revascularization - refers to a group of medical treatments that restore blood flow to parts of your heart when that flow is limited or blocked.

இதில் அதிர்வு தரும் செய்தி யாதெனில் காவேரி மருத்துவ மனை அவருக்கு நான்கு தமணிகள் எடுத்து பயன்படுத்தி இருதய ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பதாகச் சொல்லி இருப்பது நிச்சயம் இது மிக மிக ஆபத்தான ஒரு ஆபரேஷன் எனத் தெரிகிறது .. 

(நமது மருத்துவ நண்பரிடம் பேசியதை முன்பே கேட்டு விட்டுப் பதிவிடுகிறேன்) 

அபண்டிஸ் ஆபரேஷன் செய்ததாக காசு பிடுங்குவது   போல இதைச் செய்ய முடியாது - மிக சாதாரன முறையில் இந்தத் தமனி மாற்று ஆபரேஷன் கண்டு பிடிக்க முடியும் ஆனால் ஏமாற்ற முடியாது என்று சொல்லுகிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்