தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பிரிக்ஸ் அமைப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்
ஆப்பிரிக்க தலைவர்களின் அமைதி முன்முயற்சி குறித்து பிரதமருக்கு அதிபர் ராமபோசா விளக்கம்
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான இந்தியாவின் நிலையான அழைப்பே முன்னோக்கி செல்லும் வழி என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கு அதிபர் ரமபோசா தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தென்னாப்பிரிக்கா அதிபர் திரு மாடெமேலா சிரில் ராமபோசாவுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
மக்களுக்கிடையிலான வலுவான உறவைப் பிரதிபலிக்கும், இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 சிறுத்தைகளை இந்தியாவுக்கு அளித்தமைக்கு தென்னாப்பிரிக்க அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா தலைமைப் பதவிக்கு வரும் சூழலில் பிரிக்ஸ் அமைப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஆப்பிரிக்க தலைவர்களின் அமைதி முயற்சி குறித்து அதிபர் ராமபோசா பிரதமருக்கு விளக்கினார். உக்ரைனில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான இந்தியாவின் நிலையான அழைப்பே முன்னோக்கி செல்லும் வழி என வலியுறுத்தினார்.
தற்போதைய ஜி20 தலைமைத்துவத்தின்ஒரு பகுதியாக இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் அதிபர் ராமபோசா தெரிவித்தார்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டனர்
கருத்துகள்