செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை அமலாக்கத் துறையின் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
அமலாக்கத் துறையின் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
அமலாக்கத் துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் மாதம்15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்கத் துறையின் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு மத்திய அரசு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதில் இந்தாண்டு நவம்பர் மாதம் வரை அவர் பதவியில் தொடர்வாரென அறிவிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானதென ஜூலை மாதம் 11-ஆம் தேதி அறிவித்தது. மேலும், ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் எஸ்.கே.மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டதுடன் அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது அவரது பதவிக்கான காலக்கெடு முடிய சில தினங்களே உள்ள நிலையில், அவரை அக்டோபர் 15-ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 12 பக்கத்திலான மனுவை தாக்கல் செய்தார். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள்
விசாரணையிலுள்ளதால், அவர் பதவியில் தொடர அனுமதியளிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டது மேலும் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு துஷார் மேத்தா கோரிக்கை விடுத்ததையடுத்து, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத் துறையின் இயக்குநராக செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்கலாமென்று உத்தரவிட்டனர். அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா (வயது 63) 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.இரண்டாண்டு பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு முடிந்த பின் அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பும் வழங்கியது. அப்போதே இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு வரும் நேரத்தில் அவரது பதவிக் காலம் முடிய இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் பதவி நீட்டிப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கியது. அப்போதே அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது எனவும் கூறியிருந்த நிலையில்,
மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம் மற்றும் டெல்லி சிறப்புக் காவல்துறை அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததன்படி அமலாக்கத் துறை, சிபிஐ தலைவர்களுக்கு இரண்டாண்டு பதவி காலத்துக்குப் பின்பு மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதன்படி மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
அந்த வழக்கின் பின்புலத்தைப் பார்த்தால் : அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து ஜூலை மாதம் 11-ஆம் தேதியில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறுகையில், “அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 3-வது முறையாக அளிக்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம். அவர் ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் பதவியிலிருந்து விலக வேண்டும்” நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் இப்போது அனுமதி அளித்துள்ளது.
சஞ்சய் குமார் மிஸ்ரா 1984-ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி. அமலாக்கத்துறையில் நியமனத்திற்கு முன் அவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் பொருளாதார நிபுணரானவர் பல வழக்குகளை திறம்பட விசாரித்துள்ளார். இவர் அமலாக்கத் துறை இயக்குநரான பின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விசாரணையில் சிக்கினர். அதனால் அமலாகத் துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறதென அவர்கள் குற்றம்சாட்டினர்.
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்