மதுரை சுற்றுவட்டாங்களில், மோசடி ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் பொருளாதார குற்றத் தடுப்புக் காவல்துறை நடத்திய அதிரடியான சோதனையில் அசையும் அசையா சொத்து ஆவணங்கள், மற்றும் பொருட்களைக் கைப்பற்றினர்.
விருதுநகரில் தலைமையிடமாகக்கி ‘நியோ-மேக்ஸ்’ எனும் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கிய நிறுவனம் நிறுவனத்துக்குச் சொந்தமான பனிரெண்டுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் பல மாவட்டத்தில் இயங்கிய. நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டில் அசல் தொகைக்கு இரடிப்புத் தொகை வழங்குவதாகவும் ஆசை வார்ததைகளைக் கூறியும் , ஒரே இடத்தை பல நபருக்கு எழுதிக் கொடுத்து லாபம் திருப்பித்தருவதாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்தனர். ஆனால் நிலத்தில் யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை ஆனால் செபி அனுமதி இல்லாத முதலீடு மட்டுமே இதற்கு ரிசர்வ் பேங்கும் முன் அனுமதி இல்லை ஆனால் அதன் மூலம் சுமார் ரூபாய்.5,000 கோடிக்கு மேல் நில மதிப்பை விட கூடுதல் பணம் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறான புகார்கள் பலரால் எழுப்பப்பட்டன.
அதனடிப்படையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் அதிரடியாகச் சோதனை நடந்த நிலையில், சாத்தூர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரில், ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக் கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (வயது 54), திருச்சிராப்பள்ளி வீரசக்தி (வயது 49), மற்றும் அதன் தலைமை முகவர்களான காரியாப்பட்டி மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்ததில் இதுவரை திருநெல்வேலி நிறுவன இயக்குநர்கள் மற்றும் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன் உள்ளிட் 3 பேர் தொடர்ந்து தலை மறைவாகியுள்ள நிலையில் காவல்துறை தேடுகின்றனர்.இப்படி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்த நிறுவனங்களின் சில முகவர்கள், ‘முதலீட்டாளர்களிடம் காவல்துறையில் புகாரளித்தால் பணம் கிடைக்காதென மிரட்டியும், ‘நாங்கள் பணத்தை வாங்கித் தர ஏற்பாடு செய்கிறோம் அதுவரை காத்திருங்கள் எங்கும் போகாதீர்கள் ’ என செல்போன் மூலம் பேசியும், குறுந்தகவல்களை அனுப்பியும் வருவதனால், முதலீட்டாளர்கள் புகாரளிக்கத் தயங்கிய நிலையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பாதித்த நபர்களிடம், ‘புகார் மனு மேளா’ என நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்களும் பெறப்பட்டு விசாரிக்கின்றனர்.
இந்த நிலைக்கிடையில், ‘நியோ- மேக்ஸ்’ மற்றும் அதன் தொடர்புடைய மதுரையிலுள்ள ‘நியோ மேக்ஸ் ’ டெவலப்பர், லைவ் ஸ்மார்ட் பிராப்ரட்டி, ரியல்டர்ஸ், எக்ப்ரோ ரிடைல், லைவ் பிரைடு பிராப்ரட்டி, சென்சூரியன், வென்டுரா பிராப்ரட்டி ஆகிய நிறுவனங்களின் மீதும், விருதுநகரில் சபோரோ பிராப்ரட்டி, அட்லாண்டினோ டெவலப்பர் நிறுவனத்திலும், திண்டுக்கல் முத்து நகரிலுள்ள லூமை பிராப்ரட்டிஸ், காரைக்குடி 100 அடிச் சாலையிலுள்ள ரிபேகோ பிராப்ரட்டி, மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரீகேஷன் பிராப்ரட்டி, தேனி - பழைய ஸ்ரீராம் தியேட்டர் அருகில் அஸ்டோனீஸ் பிராப்ரட்டி, கம்பத்தில் மிலைனோ டெவலப் பர்ஸ், திருவாரூர் கீழ வீதியிலுளள லிபர்டைல்ஸ் நிறுவன அலுவலகங்களில் அந்தந்த மாவட்டப் பொருளாதாரக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் குழுக்களாகப் பிரிந்து ஒரே நாளில் சோதனை நடத்தினர்.
மதுரையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குப்புசாமி தலைமையில் நடந்த சோதனைகளில் மோசடி தொடர்பாக சொத்து பதிவு ஆவணங்கள், பொருட்களைக் கைப்பற்றியதாக காவல்துறைத் தகவல் தெரிவிக்கிறது.ரூபாய் 5000 கோடியை சுருட்டியதாக நியோமேக்ஸ் மீது புகார்! 30 இடங்களில் அதிரடி சோதனைக்குப் பின் தற்போது புகார்கள் குவிகிறது . இந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுக்க வசதியாக ஜூலை மாதம் 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு மனு மேளா நடைபெறுமென அறிவிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28 ஆம் தேதி நல்ல செய்தி வரும் என்பதால் யாரும் புகார் அளிக்க வேண்டாம் என நியோ மேக்ஸ் நிறுவனம் வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்கத் தயங்கியதாகத் தெரிகிறது. சுமார் ரூ 5000 கோடி மோசடி செய்துள்ள நிலையில் இந்த நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள். தென் தமிழ்நாட்டில் விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரே சொத்தை குறைந்த விலைக்கு வாங்கி இலஞ்சம் மூலம் அப்ரூவல் நகர் ஊரமைப்பு மூலம்பெற்று அதை அதிக விலைக்கு பலருக்கு விற்று சொத்து சுவாதீனம் இல்லாமல் மக்கள் முதலீட்டால் கைமுதலின்றி பல கோடிகளை வாரிச் சுருட்டிய இவர்கள் குறித்து நமது இதழ் ஏற்கனவே சந்தேகம் எழுப்பிய நிலையில் அது தற்போது நிரூபனமாகியுள்ளது. இனி புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அப்போது தான் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலையிடும், பின் முதலீட்டாளர்களுக்கு பி ஏ சி எல் நிறுவனத்தின் சொத்தை முடக்கி அதை விற்று முதலீடு செய்த நபர்களுக்கு உச்சநீதிமன்றம் வழி காட்டி லோதா கமிட்டி அமைத்த நிலையில் உள்ளது போல நியோ மேக்ஸ் நிலையும் வரும் ..
கருத்துகள்