கோயமுத்தூர் சரகத்தின் காவல்துறை டி.ஐ.ஜி விஜயகுமார் ஐ.பி.எஸ், அவரின் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கோயமுத்தூர் சரகத்தின் காவல்துறை டி.ஐ.ஜி விஜயகுமார் ஐ.பி.எஸ், அவரின் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செய்து கொண்டார். அவரது உடல் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு பிரேதப்பரிசோதனைக்காக கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் சரகத்தின் காவல்துறை டி.ஐ.ஜி. விஜயகுமார், 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியிலிணைந்ததனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை அண்ணா நகர் காவல்துறை துணை ஆணையராகப் பணியாற்றியவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் அடிப்படையில் 2023 ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்தார். குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பி.யாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதி வெற்றி பெற்றார், முதலாவது முறையாக வள்ளியூரில் ஏ.எஸ்.பி.யாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாகப் பணியாற்றி விசாரணையும் நடத்தினார்.
டி.ஐ.ஜி.யின் தற்போதய இந்தத் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக இருக்கலாமெனத் தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ரத்தினம் நகர் ஆகும்
நடந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் நேற்றிரவு தன்னுடைய பாதுகாப்புக்காக இருக்கும் துப்பாக்கி ஏந்திய காவலரிடம், ‘உங்களுடைய துப்பாக்கிகளை எங்கு வைப்பீர்கள்’ என்பது குறித்துக் கேட்டு அறிந்திருக்கிறார். அதை தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு தன்னுடைய கன்மேனை பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து கன்மேன், தனது துப்பாக்கியை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்போது, துப்பாக்கி வைத்திருந்த அறைக்குச் சென்ற டி.ஐ.ஜி. அந்தத் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் குடும்பத்தில் ஏற்பட்ட Thinking என்று முதல் கட்ட விசாரணையில் கூறப்படும் நிலையில் விசாரணை முடிவில் தான் உண்மை தெரியவரும் இங்கு மிகவும் கம்பீரத்துடன் தோற்றமளிக்கும் ஒரு காவல்துறை DIG தற்கொலை கொள்கிற அளவுக்கு சூழ்நிலை. சமுதாய நிலை காரணமா?
காவல்துறை அரசு செயல்படும் விதம் காரணமா?சமீபத்தில்தான் பதவி மாற்றம் செய்யப்பட்டு கோயம்புத்தூர் சரகத்தில் DIG ஆக பொறுப்பேற்றிருந்தார். 2009 பேட்ச் நேரடி IPS அதிகாரி.
செய்தியின்படி அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தூக்கம் சரியாக வருவதில்லை என்று சக அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது.
தற்போதைய வேகமான உலகில் மன அழுத்தம் நிறைய பேரின் உடல்நிலை மற்றும் மனநிலையை பாதிக்கிறது. இங்கே,சாதாரண தனி மனிதனின் நிலை என்னவாகும்?
அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது. மன அழுத்தத்தில் இருந்த அவரை சக மற்றும் மேலதிகாரிகள் கண்காணித்து அவரை காப்பாற்றியிருக்க லாம் என இப்போது விவாதிக்கப்படும் நிலையில் இனி காவல் துறையும், அரசும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் சிலரின் கருத்துஇறந்த விஜயகுமார் IPS அவர்களின் பழைய பதிவு.இது கண்கள் கலங்கும் தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் விசாரித்த வழக்குகளில் சென்னை ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கொலை முக்கியமானது சென்னை சி.பி.சி.ஐ.டி -பிரிவில் எஸ்.பியாக பணியாற்றிய நிலையில் தான் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சேலம் உமாமகேஸ்வரி 2014 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலைசெய்யப்பட்டார்.
அந்த வழக்கை விசாரித்தது விஜயகுமார் தலைமையிலான காவல்துறை தனிப்படை தான். எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் ஏ.டி.எம் மையத்தில் கிடைத்த சி.சி.டி.வி பதிவுகள் மூலம் அந்த வழக்கை திறம்பட புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்தது விஜயகுமார் தலைமையிலான தனிப்படை தான்.
2022-ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் தனியார் வங்கி ஒன்றில் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை சம்பவம் நடந்த போது விஜயகுமார், அண்ணாநகர் துணை காவல்துறை ஆணையராகப் பணியாற்றினார். இந்த வழக்கிலும் அவர் தலைமையிலான தனிப்படை சி.சி.டி.வி. காணொளிக் காட்சிப் பதிவுகள் மூலம் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்த போது காவல் ஆய்வாளர் ஒருவர், குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கருதிய விஜயகுமார் மற்றும் அவருக்கு மேலதிகாரிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட ஆய்வாளரைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்பினர்.
காவல்துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த விஜயகுமார், திடீரெனத் தற்கொலை செய்திருக்கிறார்.காவல்துறையில் பணியாற்றும் விஜயகுமாரின் நண்பர்களான காவல்துறை சார்ந்த அதிகாரிகள் ``விஜயகுமாரைப் பொறுத்தவரை ஒரு நல்ல மனிதர். மனித நேயமிக்கவர். பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பவர். அதற்காக அவர் காவல்துறையில் சந்தித்த அனுபவங்கள் அதிகம். ஆனால் எதையும் சுலபமாகவே கடந்துச் சென்று தன்னுடைய இலக்கை நோக்கிப் பயணித்தார்.
சி.பி.சி.ஐ.டியில் விஜயகுமார் பணியாற்றிய காலக்கட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளையும் விசாரித்தார். அந்த வழக்குகளிலும் திறம்படப் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது விஜயகுமார் தலைமையிலான தனிப் படையினர் தான் காவல்துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகுமார்
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மரியாதையுடனே வழிநடத்தி வந்தார். சிவ பக்தி அதிகமுள்ளவரை சிவன் கோவில்களில் அடிக்கடி பார்க்க முடியும். குடும்பத்தின் மீதும் மிகவும் அன்புள்ளவர். பதவி உயர்வு கிடைத்ததும் அவருக்கு கோயமுத்தூர் சரக டி.ஐ.ஜியாக பணியமர்த்தப்பட்டார். அங்கும் சிறப்பாகத்தான் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக ஏதோ ஒரு மனஉளைச்சலில் இருந்துவந்தார். அதற்கான காரணம், அவருக்கு மட்டுமே தெரியும். எதையும் எங்களிடம் வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. திடீரென அவர் இப்படியொரு முடிவை எடுத்தது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது" என்றனர். காவல்துறை சார்ந்தவர்கள்.
''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்தப் புள்ளியிலேயே சுதாரிக்க வேண்டும். அதில் இருந்து உடனடியாக மீளாவிட்டால், வாழ்க்கைப் பயணம் நாம் ஆசைப்பட்ட திசையில் இருக்காது!'' என்று அனுபவம் பகிர்ந்துள்ளார்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் விடாப்பிடி உறுதி முயற்சியுடன் 'ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர்.
''தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓ. என் அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில் தான் படித்தேன். ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும். அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவசாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம் தான். போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். 'மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும் தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அமையலை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை. ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம்னு முடிவு பண்ணி, ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்தேன். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு படிக்க முடியலை. நாலு மாசத்திலேயே வேலையை விட்டுட்டேன். ஏதாவது
ஓர் அரசு வேலையில் சேர்ந்துட்டு, படிக்கலாம்னு முடிவு பண்ணேன். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிச்சேன். ஏனோ தானோன்னு தான் படிச்சேன். தேர்வில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந்தேன். அந்தத் தேர்வுக்கு ஆறு மாசம் தீவிரமாப் படிச்சேன். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தேன். அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதினேன். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன்னு இரண்டு வருட நடை முறை முடிந்து 2002-ல் ரிசல்ட் வந்தது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆனேன்.
தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது எனது கடைசி ஏழாவது முயற்சி. வெற்றி!
ஆனால், தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு.
'இன்டர்வியூ போகணும்... மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்... ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம்!
சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் 'ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன். நேர்முகத் தேர்விலும் காவல் துறை பற்றிய கேள்விகள் தான் சுற்றிச் சுழன்றன. 'எப்படிங்க உங்க ளுக்கு நேரம் கிடைச்சது? எப்படிப் படிச் சீங்க’ன்னு நட்பாகத்தான் என்னை எதிர் கொண்டார்கள். சிவில் சர்வீஸில் தேறி ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து நான் உடனடியாக விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில் தான் பயிற்சிக்குச் சென்றேன். ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், 'ஐ.பி.எஸ். வேண்டாம்’னு சொல்லிட்டு, தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியத்தான் ஆசை.
நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும்போது தங்குவதற்குச் சிரமமாக இருக்கலாம். புத்தகங்களைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். வீட்டிலும், 'என்னப்பா படிச்சுட்டே இருக்கேன்னு சொல்ற. எப்பதான் பாஸ் பண்ணப்போற?’னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்துபோகவே கூடாது. நேர்மறை எண்ணம்கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள். வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால் தான் என் வெற்றி தள்ளிப்போனது. 'இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!'' ஆம் இந்தப்பதிவில் உள்ள அவரது நம்பிக்கை அவரிடம் இல்லாமல் போனது ஏனோ ஆழ்ந்த இரங்கல் மட்டுமே தீர்வா ?!.
கருத்துகள்