முன்னால் குடியரசுத் தலைவர் நினைவு நாளில் மதர் சிறப்புப் பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம்
இன்று காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதர் தொண்டு & கல்வி அறக்கட்டளை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் மதர் சிறப்பு பள்ளியில் நடத்திய நிகழ்வின் துவக்கத்தில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் அருண்குமார் வரவேற்றார். முகாமில் டாக்டர்.அருள்தாஸ் தலைமை தாங்கினார்.
மேலும் பல் மருத்துவர். D.K. பிரபு, டாகடர். நிஷா டாக்டர் .பூவேந்தன் டாக்டர் சிங்காரம் ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்குடி வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார், காரைக்குடி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியை டாக்டர் அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கத்தின் பிரபாகரன், விஜயகுமார் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை நிர்வாகி, G. முத்துக்குமார் முன்னாள் துணை ரோட்டரி கிளப் ஆளுநர் காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சங்கம், மற்றும் காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சங்கத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் செயலாளர் முருகப்பன் மற்றும் பிரதீப் கார்னர் பேக்கரி உரிமையாளர் கலந்து கொண்டாகள். அந்த நிகழ்வில் 30 குருதி கொடையாளர்கள் வருகை புரிந்து தன்னார்வத்துடன் குருதிக்கொடை அளித்தனர். டாக்டர் அருள்தாஸ் குருதிக் கொடை அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். விழாவில் பிரபாகரன் டாக்டர் அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கம் சார்பில் நன்றி கூறினார்.
கருத்துகள்