மஹாராஷ்ட்ரத்தில் சரியாக மூன்றில் இரண்டு மடங்கு NCP எனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அஜித் பவார் பக்கமாம். அதனால் NCP யின் அதிகாரப்பூர்வ தலைமை தற்போது அஜித் பவார் தான்.
அஜித் பவார் பக்கம்: 32 நபர்கள் மூத்த தலைவர்
ஷரத் பவார் பக்கம்:16 பேர் மட்டுமே உள்ள நிலை
ஒரு சட்டசபை உறுப்பினர் நவாப் மாலிக் ஜெயிலிலுள்ளார்.
மற்றொரு சட்டசபை உறுப்பினர் வெளிநாட்டிலுள்ளார்.
ஒரு பெண் சட்டசபை உறுப்பினருக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவரால் வரமுடியவில்லை. ஆனால் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளனர்.
ஒரு காலத்தில் இந்தியத் திருநாட்டில் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த தலைவர் ஷரத் பவார் அவர்களின் தற்போதைய நிலைமை. காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதன் அடையாளம் கடந்த மாதம் ஷரத் பவார் தலைமை பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்த போது அவர் நாடகமாடுகிறார் அஜித் பவாரைச் சமாளிக்கத்தான் என்று தான் நினைத்திருந்தோம். பின்பு அவர் ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கிய போதே ஏதோ நடக்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது.
காலம் எவ்வளவு தான் வழிகாட்டினாலும் அரசியல்வாதிகளால்.
வேறுவழி இல்லை... அரசியல்வாதிகளால் பதவி இல்லாமல் ஜீவித்திருக்க முடியாது.சாகும் தருவாய் வரை மட்டும் அவர்களுக்கு பதவி வேண்டும்.
இதில் பாஜக தலைவர்கள் விதிவிலக்குத் தான் இரண்டு முறை பதவி வகித்தால் ஒருமுறை இடைவெளி அல்லது ஓய்வு அப்படித்தான் மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானியும், யஷ்வந்த் சின்ஹாவும்,ஜஸ்வந்த் சிங்கும், இது அக்கட்சியின் இயக்கம் ஆர் எஸ் எஸ் தலைமையின் கொள்கை முடிவு, அது போல மற்ற கட்சிகளில் இல்லை,இச் செய்திக்கு முன் சரியான நிலவரம் அறிய நம் தொடர்பில் எப்போதும் உள்ள புதுடெல்லியில் உள்ள சரத்பவார் அவர்களின் தலைமை நிலையத்தின் செயலாளர் அண்ணன் திரு சுவாமிநாதன் அவரகள் தொலைபேசி இரண்டு தினங்களாக இணைப்புக் கிடைக்கவில்லை கிடைத்தால் கூடுதல் தகவல்களுடன் நமது இதழ் செய்திதரும்
கருத்துகள்