தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
செய்து உத்தரவு. சென்னை மதுரை கோயமுத்தூர் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் உள்ள முக்கியப் பொறுப்பு அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்த உத்தரவில், இலஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார்.குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக வன்னியபெருமாளும்
சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக ராஜீவ்குமாரும்,பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக, பால நாக தேவியும்,
மாநிலக் குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக்கும்,
காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக வினித் தேவ் வான்கடேவும்,
திருச்சிராப்பள்ளி காவல் ஆணையராக காமினியும்,
திருச்சிராப்பள்ளி காவல் ஆணையரான சத்யப்பிரியா சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாகவும்
வடக்கு மண்டல இணை ஆணையரான ரம்யா பாரதி மதுரை டிஐஜியாகவும்,
புதிய வடக்கு மண்டல இணை ஆணையராக தலைமையிடத்து இணை ஆணையர் சாமுண்டேஸ்வரியும்,
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராகவும்,
பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிடத்து ஐஜியாகவும்,
சென்னை தலைமையிடத்து கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராகவும்,
கோயமுத்தூர் ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்துக் காவல் ஆணையராகவும்,
மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாகவும்,
காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சந்தோஷ் குமாரும் ,
மேற்கு மண்டல ஐஜியாக புவனீஸ்வரியும்
மேலும் 27 Object அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்