முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒழுக்கமும் கல்வியும் போதிக்காத கல்விநிலையங்கள் தான் நான்குநேரி சம்பவத்தின் காரணகர்த்தா

1990 ஆம் ஆண்டு வரை நடந்த கல்விச்சாலைகள் ஒழுக்கமும் கல்வியும் போதித்தன, 


பள்ளிக்கூடங்கள் ஜாதி வன்மக் கூடங்களாக மாறி வருகிறது சமீப காலமாக வரும் வரலாறு அறியாத பிரச்சணைகள் கலந்த திரைப்படங்கள் தான் மக்களின் இந்தத்  துயரத்தின் ஆணிவேர்.


திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரை பதினேழு வயது ஹரிஜனப் பட்டியலினச்   சிறுவன். இரண்டு கைகளும் அரிவாளால் வெட்டப்பட்டு எலும்புகள் நொறுக்கப்பட்டு பெரிய கட்டுடன் படு மரணத்தின் விளிம்பிலிருந்து பிழைத்தவன்.அவனது ரத்தம் அவனது வீட்டிலும் தெருவிலும் கதவிலும் பாத்திரங்களிலும்  படிந்து கிடக்கிறது. அவனை வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். பதினேழு வயது, பதினாரு வயது உள்ளவர்கள்.

ஜாதி ஒருவனை மரணத்தின் விளிம்பில் தள்ளியிருக்கிறது. சிலரை அரிவாள் எடுக்க வைத்து கொலைகாரர்களாக்கியிருக்கிறது.

களத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்ட நமது செய்தியாளர்கள் தரும் தகவல் இது:- நாங்குநேரியில் வசிப்பவர் அம்பிகாபதி (வயது 54).ஹரிஜன பட்டியலினத்தவர் அவருக்கு இரண்டு குழந்தைகள். பதினேழு வயதான  சின்னத்துரை, பதிமூன்று வயதான சந்திராசெல்வி. வீட்டு வேலை செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறார்.

 சின்னத்துரை வள்ளியூரில் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன்.


கடந்த 10 நாட்களாக சின்னத்துரை பள்ளிக்கு வரவில்லை. அவனது தாயார், ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டதற்கு, என்னை வேறு பள்ளியில் சேர்த்துவிடு, இல்லையென்றால் சென்னைக்கு அனுப்பி வை, நான் அங்கு ஏதாவது வேலை செய்கிறேன் எனக் கூறியிருக்கிறான்.

அதற்கு  அம்பிகாபதி ஒப்புக் கொள்ளவில்லை. கடந்த 09.08.2023 அன்று அவனது  பள்ளி ஆசிரியை, அம்பிகாபதிக்கு  உடன் தொலைபேசி மூலமாக அழைத்திருக்கிறார். ஏன் உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை, அவனுக்கு என்ன பிரச்சனை. எதுவாயினும் சரிசெய்யலாம் பள்ளிக்கு கூட்டி வாருங்கள் எனக் கூறியிருக்கிற நிலையில் 09.08.2023 அன்று காலை  10.30 மணியளவில் சின்னத்துரையும் அவனது அம்மா அம்பிகாபதியுடன் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அங்கு வகுப்பு ஆசிரியையிடமும்  தலைமை ஆசிரியையிடமும்  சின்னத்துரை கூறுகையில், தன்னுடன் படிக்கும் செல்வரமேஷ், சுப்பையா ஆகிய இருவரும் தன்னை ஜாதிய ரீதியாக ஆபாசமாகப் பேசி வருகின்றனர். என்னிடம் வைத்திருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்கின்றனர். சிகரெட் வாங்கி வரச்செல்லி அடிக்கின்றனர். பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். பரிட்சையில் நான் எழுதுகிற விடைத்தாள்களை வாங்கி காப்பி அடிக்கின்றனர் என்று கூறியதைக் கேட்ட இரண்டு ஆசிரியைகளும் என்ன நடந்தது என்பதை எழுதிக் கொடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூற சின்னத்துரையும் எழுதி கொடுத்திருக்கிறான்.


தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை முன்னரே அறிந்த சுப்பையாவும் செல்வரமேசும் அன்று பள்ளிக்கு வரவில்லை. மாலை 6.00 மணியளவில் செல்வரமேஷின் பாட்டியும் சித்தப்பாவும் சின்னத்துரையின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவனது அம்மாவிடம் இருவரும் என்ன நடந்தது என்று கேட்க, உங்க பேரனும் சுப்பையாவும் என் மகனை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி சித்திரவதை செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார். அதனைக் கேட்டுவிட்டு இருவரும் அமைதியாகச் செல்கின்றனர்.

இரவு 10.00 மணிக்கும். அம்பிகாபதிவும் சின்னத்துரையும் சந்திராசெல்வியும் சாப்பிடும் நேரம்  வீட்டிற்குள் சுப்பையா செல்வரமேஷ் 11ஆம் வகுப்பில் படிக்கும் சுரேஷ் வானு என்கிற சிறுவனும்  வந்து அவர்களை அரிவாளால் வெட்ட. சின்னத்துரை தடுத்திருக்கிறான். அண்ணன் வெட்டப்படுவதை அறிந்த சந்திராசெல்வி தடுக்க முயற்சிக்க செய்ய அவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்த ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு தான் இந்த மூவரும் வெட்டியிருக்கின்றனர்.

அதனைப் பார்த்த பாத்திமா என்ற பெண்ணும் அம்பிகாபதியும் வெட்டுப்பட்ட சின்னத்துரையும் சந்திராசெல்வியும்சத்தமிட அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிவர அந்த 3 கொலைவெறிச் சிறுவர்களும்  அங்கிருந்து தப்பித்து ஓடியதாகத் தகவல் .வெட்டப்பட்ட இரண்டு பேரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை கடந்து, அந்த 3 பேரும்  வெட்டுவதற்கு உதவி செய்ததாக செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய 3 பேர் என்று 6 பேரும் சிறார்கள்  காவல்துறை  10.08.2023 அன்று கைது செய்து  செய்துள்ளனர்.


திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பாதிக்கப்பட்ட சின்னத்துரையை பார்த்தார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாகவும் இருக்கிறார் எனத் தெரிகிறது.

சேரிப் பகுதிக்குள் வந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு அப்பகுதியில்  இருந்து வெளியேறி இருக்கின்ற இந்த போக்கு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெவ்வேறு கட்டிடங்களில் முதல் தளத்தில் சின்னத்துரையும் மற்றொரு கட்டிடத்தின் 7வது தளத்தில் சந்திராசெல்வியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செல்வரமேஷின் பெரிய தந்தை  தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். சுப்பையாவின் தாத்தா ம.தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர். இவர்களது அரசியல் குறுக்கீடு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பயத்தில் உள்ள நிலை என அந்த சமூகம் சார்ந்த சிலர் இப்போது இந்த பிரச்சணைகளை வேறு திசை நோக்கி நகர்த்தும் நிலை தான் தற்போது காண்கிறோம்,  விதைத்ததே வி(னை)ளையும்!

நாங்குநேரி ஹரிஜன பட்டியலின மாணவனை வெட்டியவர்கள் கூலிப்படைகளோ ஜாதிய அமைப்பைச் சார்ந்தவர்களோ அல்லர்.

அனைவருமே சிறுவர்கள் தான்.மேல் கீழ் என்கின்ற மனநோய் இத்தனை இளம் வயதில் முற்றிப் போய் இருக்கின்ற தென்றால் அந்தச் சிறுவர்களுக்கு இதனைக் கற்பித்தது யார்?

தான் கற்றதையும் பெற்றதையுமே அச்சிறுவர்கள் சமூகத்தில் நடைமுறைபடுத்தியுள்ளனர் என்பது எளிதில் விளங்கும்.

இங்கு சாதி இல்லையென்று சொன்னாலும் சாதி இருக்கின்றது. இங்கு சாதி இருக்கின்றது என்றாலும் சாதி இருக்கின்றது என்பதே நடைமுறை

உண்மை. சலுகை பெறச் சாதி வேண்டும் என்ற நிலை உண்டு தானே

தமிழ் எனக் கூறும் தேசிய அமைப்புகள் தமிழ் தேசிய ஓர்மைக்கு தடையாக இருக்கும் ஜாதியத்தைத் தான் அவர்கள்  பயன்படுத்தும் நிலையைக் காண்கிறோம் அக்ரஹாரமும் சேரியும் இணைவதில்லை அதை அழித்தொழிக்கவும் இயலாது அது அவரவர் வாழ்வியல் முறை புதிய கொள்கை முடிவுகளை உருவாக்கி அதன் அடிப்படையில் அமைப்புகளை வலுப்படுத்தி ஊரும் சேரியும் ஒன்றிணையும் திட்டங்களையும் போராட்ட வடிவங்களையும் மேம்படுத்திட வேண்டும் என கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அரசியல் இயக்கங்கள் பேசி வந்தாலும் நடைமுறை சாத்தியமில்லை 

போலியான ஜாதி ஒழிப்பையும், போலியான ஜாதிய சமத்துவத்தையும் முதலில் ஆலய நுழைவுஒ் போராட்டம் நடத்தியவர்களையே ஜாதியத் தலைவராக்கிய தற்போதய அரசியல் வாதிகளும் 2001ஆம்  ஆண்டுக்குப் பின் வந்த திரைப்படக்களுமே அதை மாற்றத் தொடங்குபவரே

சரியான தமிழ் தேசியராவார்!அகத்தில் சகதியைச் சுமந்த அரசியல் தலைவர்கள் ஜாதியைச் சுமந்து,

புறத்தில் தமிழர் வேடம் போடுபவர்கள் ஜாதி வெறியர்களைவிட மிகவும்  ஆபத்தானவர்கள்.

மணிப்பூருக்காக பொங்கியெழுந்த பலர் நாங்குநேரிக்காக பொங்க வேண்டியது தானே என்று எதிர்பார்ப்பது நமது மூடத்தனத்தின் உச்சமாகும்.

மேலும் தமிழ் குடிகளின் வரலாறு தொண்மையானது நந்தனாரும் பூசலாரும் நமது கடவுள்ர்கள் தான் ஆனால் வரலாறு தெரியாத,அறியாத பல  குடிகள்  தேசியம் பேசும் கோமளிக் கும்பல் இதற்கு

என்ன மாதிரியான விளக்கத்தை தரப்போகின்றார்களோ?! என்பதை நினைத்தால் நமக்கு மேலும் பதற்றம் தான் ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டில் நடக்கும் நல்லவற்றுக்கெல்லாம் காரணம் பெரியார் என அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தான் காரணம் என்று கொடிப்பிடிக்கின்ற கும்பலைச் சேர்ந்த ஒருவரும்.

ஜாதிய மோதலின் போதோ, அடுத்த ஜாதிப் பெண் எனத் தெரிந்து  திருமணம் செய்த பின் நடந்த 

ஆணவமோ, சுயநலமோ ஏதோ ஒரு  படுபாதகக் கொலை நடந்தாலோ

இது போன்ற பாதகச்செயல் நடந்தாலோ

இது எங்கள்  மண்!... என்று கூப்பாடு போட்டவன் எல்லாம் பள்ளிக் குழந்தைகளின் அதாவது பதினெட்டைத் தாண்டாத பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்திருக்கும் 

 அரசியலைப் புரிந்துகொண்டாலே நமது திசைவழி எதுவென்று புரிந்துவிடும்.

சான்றுகள் ஜாதிகளை  ஒழித்தல் நன்று அதற்கு சலுகைகள் ஒழிப்பும் தேவை, படிப்பவனுக்கு மட்டுமே சலுகை என்ற நிலை வேண்டும். 

நல்ல இணக்கம் ஒற்றுமை மற்றும் தமிழ் வளர்த்தல் மற்றொன்று! அதுவே தீர்வாகும்.

மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி இன்று அரிவாளாக மாறியிருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதி களமாகவே காட்சியளிக்கின்றன. அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமை கூடங்களாக உருமாறி வருவது கவலையளிக்கிறது.

இத்தகைய வன்முறையில் ஈடுபடுகிற குழந்தைகளை குற்றவாளி என்று சொல்லக்கூடாது, சட்டத்திற்கு முரண்பட்டவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று மனித உரிமை தளங்களில் அறிவுறுத்தப்படுவதும் உண்டு. ஆனால் இதுபோன்ற சாதி நோய் முத்திப்போய் இருக்கக்கூடிய இவர்களுக்கு கவுன்சிலிங் தாண்டி சட்டத்தின் மூலமாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

தன் மீது நடந்த கொடுமையை ஆசிரியரிடம் கூறியதற்காக இத்தகைய கொலை வெறியுடன் அரிவாள் தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இந்த சாதி வெறி பிடித்த சிறுவர்களின் நடத்தையை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

சின்னத்துரைக்கும் சந்திராசெல்விக்கும் இது சமத்துவமான சமூக நீதி சார்ந்த சமூகம் என்பதை உணர வைப்பதற்கு கண்டிப்பாக இரண்டு தலைமுறையாவது தேவைப்படும்.

சமூக நீதி என்கிற கருத்தியலை முன் வைத்துக் கொண்டே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடம் தென்படுகிற சாதி தெனாவட்டை திமிரினை கண்டிக்காமல் இது இந்த மண் அந்த மண் என்று உருட்டிக் கொண்டிருந்தால் சமூக நீதிக்கு அதை விட பெரிய துரோகம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.

இதை அங்கு இருக்கக்கூடிய குறிப்பாக சமூகநீதியை பேசக்கூடிய இயக்கங்கள் சின்ன பசங்க தகராறு என்று விவாதிப்பதாக அறிய வருகிறேன். எவ்வளவு கேவலமான மனநிலை. சின்னத்துரை மற்றும் சந்திராசெல்வி நீதிக்காகவும் யாரெல்லாம் களத்தில் இருக்கிறார்களோ அவர்களே சமூக நீதி போராளிகள். மற்றபடி பெயருக்காக சமூகநீதி பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். திருந்துவார்கள் என்று நம்புகிறோம்.                                அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி  செயல்பாடுகள் அடிதடிகள் இப்போது கொலை முயற்சிகள் வரை சென்றிருப்பதைத் தொடர்ந்து பேசா விட்டால் ஏழைபாழைகள், பஞ்சை பராரிகள் தவிர்த்தும், திராணியற்றவர்கள் தவிர்த்து வேறு யாருமே அண்டாத பள்ளி என்ற நிலையும் போய் அரசு கல்வியே இலவசக் கல்வியே அழிந்து போகும்.

இதில் எந்த இலட்சணத்தில் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வாருங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்த?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த