நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், அதே சமயம் நீதிமன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்: ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண ஆயுதப்படை தீர்ப்பாயத்தை (ஏ.எஃப்.டி) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார், அதே நேரத்தில் நீதிமன்ற செயல்முறை எந்த விதிமீறலும் இல்லாமல் தீவிரமாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 04, 2023 அன்று புதுதில்லியில் ஏ.எஃப்.டி எழுச்சி தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றைக் குறைக்க சிறப்பு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இத்தகைய எண்ணிக்கை மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்கப்படாமை சவாலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். நீதித்துறை செயல்முறையில் கவனம் செலுத்தாமல் விரைவாக தீர்ப்பது இன்னும் ஆபத்தானது என்றார் அவர்.
'தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி' என்று சொல்லப்படுகிறது. நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையும். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் போன்றவை. நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அவ்வப்போது நிறுவப்படுகின்றன. ஆனால், நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில்'நீதி புதைக்கப்படும்' அபாயம் உள்ளது. வழக்குகளை முடித்து, மக்களுக்கு நீதி வழங்க, நேரம் மற்றும் நடைமுறைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மனசாட்சி என்பது முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு காரணியாகும். நீதி இல்லாமல் எந்த சமூகமும் முழுமை அடைய முடியாது. சரியான நேரத்தில் சரியான நபருக்கு நீதி வழங்குவது நமது கடமை" என்று ராஜ்நாத் சிங் கூறினார்
ஏ.எஃப்.டி.யின் செயல்பாட்டில் ஒரு சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் தேவைகள், நலன்கள், வளங்கள் மற்றும் வரம்புகளை மனதில் கொண்டு வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் தேவைகளை சமநிலையைப் பேணுவதன் மூலம் பூர்த்தி செய்யும் ஒரு ஜனநாயக அமைப்பைக் குறிப்பிட்டு அவர் அதை விளக்கினார். 2047-ம் ஆண்டுக்குள் நாடு 'அமிர்த காலத்தில் நுழைந்து, வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளதால், சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் மலிவு விலையில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இந்த இலக்கை அடைய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார் அவர்.
ஆயுதப்படை தீர்ப்பாய சட்டம், 2007 இன் படி ஏ.எஃப்.டி நிறுவப்பட்டது. இது ஆகஸ்ட் 08, 2009 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இது முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் போர் விதவைகள் ஆகியோருக்கு விரைவான மற்றும் மலிவான நீதியை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்டது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, மொத்தம் 97,500 க்கும் மேற்பட்ட வழக்குகளில் 74,000 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில், ஏ.எஃப்.டி இதுவரை பதிலளித்த குறிப்புகள் அடங்கிய 'ஏ.எஃப்.டி சட்ட இதழின்' முதல் தொகுதியும் பாதுகாப்பு அமைச்சரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஏஎப்டி தலைவர் ராஜேந்திர மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்