காரைக்குடி வட்டம் அமராவதி புதூரில் மின் பழுது சரிசெய்த பணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதி புதூர் பாலகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி ஒராண்டாகிறது. ஒன்றரை மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. இவர் மின்சார வாரியத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிகிறார். நேற்றிரவு அமராவதி புதூர் காந்திநகரில் மின்சாரம் வராததால் இன்று காலை அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரை நிறுத்தம் செய்து விட்டு அப்பகுதியில் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்த போது எதிர்பாராத விதமாக அவர் தலைக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் தலை உரசியதால் மின்சாரம் தாக்கியதில் தலைகீழாகத் தொங்கிய நிலையில் பலியானார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரது உடலைக் கைப்பற்றிய சோமநாதபுரம் காவல்துறையினர் உடல் கூறு ஆய்விற்கு காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர் அரசு ஊழியராக பணி செய்யும் மின் கம்பியாளர்கள் யாரும் மின்சார வேலை செய்வதில்லை பாவம் இந்த அப்பாவிகள் வேலை செய்து அவர்களுக்கும் வாங்கும் இலஞ்சத்தில் பங்கு கொடுக்கும் அவலம் வேறு நடக்கிறது யாவரும் அறிந்ததே பேச வேண்டுமானால் அது ஒரு பெரிய கதை அய்யோ பாவம் அரசு ஊழியருக்கு உதவிய தனி நபர் இந்தக் கொடுமை இன்னும் பல ஊர்களில் தெரிந்தே தொடர்கிறது அதை அரசு அனுமதிக்கலாமா அல்லது வேடிக்கை பார்க்கலாமா! கூடாது உடனே நடவடிக்கை தேவை இதுவே மக்களின் கோரிக்கை
கருத்துகள்