நியோ மேக்ஸ் நில மோசடியில் பணம் முறைகேடு தனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமித்து விசாரணை தீவிரம்
நியோ மேக்ஸ் நில மோசடியில் பணம் முறைகேடு வழக்கில் தனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமித்து விசாரணை தீவிரம்: ஒரு காவல் அதிகாரியின் சகோதரர் சிக்குகுவாரா ?.
விருதுநகர் மாவட்டத்தில் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் விற்பணை நிறுவனம் செயல்பட்டது. அது வாடிக்கையாளர்களைத் தூண்டி ஆசைகாட்டி நம்பவைத்து கூடுதல் வட்டி மற்றும் செலுத்திய தொகைக்கு இரட்டிப்புத் தொகை தருவதாகவும், பல மாவட்டங்களில் சாமானியர்கள் உள்ளிட்ட பலரிடம் முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களின் புகார்களின் பேரில், மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றத்தடுப்புக் காவல்துறை ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (வயது 54), திருச்சி வீரசக்தி (வயது 49) மற்றும் முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்
இவ்வழக்கில் இயக்குநர்களாக செயல்பட்ட தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து, சகாயராஜ் மற்றும் மதுரை பைபாஸ் ரோடு எல்ஐசி அலுவலர் பத்ம நாபன், விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மாரிச்சாமி (வயது 50), சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி மலைச்சாமி உள்ளிடட ஒன்பது பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளநிலையில், சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோர் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நியோ- மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்காப்பட்டோர் புகார் அளிக்கத், தயங்கிய நிலையில், மதுரை, விருதுநகரில் புகார் மேளா நடத்தியும் புகார்களை வாங்கிப் பதிவு செய்த போதிலும் தொடர்ந்து பணம் வசூலித்த முகவர்களால் புகார் அளிக்கும் நபர்கள் தடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்ற நிலையில்,
இவ்வழக்கை ஏற்கெனவே மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் குப்புசாமி தலைமையில் ஆய்வாளர் கமர்நிசா விசாரித்த நிலையில், தற்போது, தனி துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு்ளதுதன்படி, புதிய துணைக் கண்காணிப்பாளராக மணிஷா என்பவர் தலைமையின் கீழ் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் குழுவாக வழக்கை விசாரிக்கின்றனர்.
காவல்துறையினர் தரப்பில் விசாரித்த போது, “இந்த வழக்கின் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவானவர்களை தனிப்படை மூலம் தேடி வருகிறோம். அதில் காவல் அதிகாரி ஒருவரின் சகோதரரும் இந்த நிறுவன முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கில் சிக்கிய நபர்களின் வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கியதில் பட்டியலில் அந்தக் காவல் அதிகாரியின் சகோதரரின் பெயருமுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் விதமாக நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த வித தயக்கமுமில்லாமல் புகாரளித்து ஒத்துழைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்