தேவைப்பட்டால் நியோமேக்ஸ் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை
நியோமேக்ஸ் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்! சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்தது,
நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி மோசடி செய்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து உயர் நீதிமன்றம் , தேவைப்பட்டால் அவர்களின் தொலைபேசித் தொடர்புகள் ஆய்வுக்குட்படுத்தப்படுமெனவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவில்லை என்றால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, முக்கியக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் சிவகங்கை, உள்ளிட்ட கிளைகளை நிர்வகித்த 17 நிர்வாகிகள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகிய ஐந்துபேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சார்ந்த கௌதமி தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். நான் ஒரு கோடி ரூபாய் நியோமேக்ஸில் முதலீடு செய்தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வைத்துள்ளோம். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் அக்கு வர உள்ளது. எனவே இதில் இணைந்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினர்.
கூறியபடி பணமோ, நிலமோ திரும்ப வழங்கவில்லை. இவர்கள் முதலீட்டாளருகளின் பணத்தை கல்லூரிகள், வெளிநாடுகளில் பதுக்கி முதலீடு செய்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. தற்போது மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மோசடியில் ஈடுபட்டவர்களோடு, இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளில் சிலர், உறுதுணையாக உள்ளதாக எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கியக் குற்றவாளிகளை கைது செய்வதில், கால தாமதமும் ஆகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் கருதி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் CBI க்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அவரது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கானது நீதிபதி K.K.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் முக்கியக் குற்றவாளிகளை இது வரை கைது செய்ய வில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமினில் வெளி வந்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பானது எனவே இந்த வழக்கை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென்றார்.அப்போது அரசு தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
நியோமேக்ஸின் முக்கிய இயக்குநரான கமலக்கண்ணன், அவரின் சகோதரரும் மற்றொரு இயக்குநருமான சிங்காரவேலன் ஆகியோர் சென்னையில் தலைமறைவாக இருந்த போது, பொருளாதாரக் குற்றப்பிரிவு தனிப்படையினர் அவர்களைக் கைதுசெய்தனர். இவர்கள் மதுரைக்கு அழைத்துவரப்பட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி தமிழரசி, இருவருக்கும் செப்டம்பர் மாயம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம். இது வரை 5000 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய DSP நியமிக்கப்பட்டுள்ளார். உரிய முடிவு எட்டப்படுமென வாதிட்டார். இதைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்படடவர்களை விரைவாகக் கைது செய்ய வேண்டும். தேவைப்பட்டால், இந்த வழக்கை விசாரிக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு, விசாரணை அதிகாரிகள் தொலைபேசித் தொடர்புகளைச் சோதனை செய்ய நேரிடுமென எச்சரிக்கை விடுத்த நீதிபதி,
இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளை இது வரை ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியதுடன், உரிய நடவடிக்கை எடுத்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையேல், CBI விசாரணைக்கு வழக்கை மாற்ற நேரிடும் எனக் கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் நியோ- மேக்ஸ் மோசடி விவகாரத்தில் முதலீட்டாளர்களுக்குப் பணம் மற்றும் நிலம் வழங்குவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி நிறுவன இயக்குனர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். முதலீட்டாளர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
நியோ - மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நியோ-மேக்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
நியோ-மேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில்
அதில், வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டுள்ளது. அதற்கு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. நிலங்கள் விற்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 16 லே-அவுட்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடி பரப்பளவு நிலங்களுக்கு (2,249.565 ஏக்கர்) அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடி பரப்பரளவு நிலங்கள் பத்திரப்பதிவுக்குத் தயாராக உள்ளது. பல மாவட்டங்களில் நிலங்கள் உள்ளன. எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறோம். இதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும். என அவர்கள் தப்பிக்க வழிதேடி மனுவில் கூறப்பட்டிருந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. வழக்கு விசாரணை முழுமையடைய ஆறு மாதங்கள் ஆகும். இதுவரை 557 பேர் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள், நிர்வாகிகள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். 9428 சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது தேவையற்றது என்றார். மனுதாரர் தரப்பில், நிறுவனம் தொடர்பான முழுத்தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவிடம் உள்ளது. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிலங்கள், வீட்டுமனை விவரங்களும் காவல்துறையினரிடம் உள்ளன. பணப்பரிவர்த்தனை, வங்கிகணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார். அதையடுத்து நியோ-மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் முழு பட்டியலையும் நியோ-மேக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் மாதம். 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கருத்துகள்