எதிர்நீச்சல் தொலைக்காட்சித் தொடரில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை நடிக்கவைக்க நடக்கும் பேச்சுவார்த்தை
எதிர்நீச்சல் தொலைக்காட்சித் தொடரில் நடித்த மறைந்த மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அடுத்து எழுத்தாளரும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது
அப்படி நடந்தால் அது மிகச்சரியான தேர்வு தான் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதை பட்டிதொட்டியெங்கும் பேச வைத்தவர் நடிகர் இயக்குனர் மாரிமுத்து
பல கனவுகளைத் தாங்கி வாழ்ந்து வந்த அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி தொடர் பார்த்த மக்கள் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சி தான்!
அடுத்து அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக்கூடியவர் சரியான தேர்வாக இருந்தாலும் அதற்கான சம்பளத்தில் ஒரு சிறு பங்கினை காலமான மாரிமுத்துவின் குடும்பத்திற்குக் கொடுக்க முன்வந்தால் அது பெரிய தர்மமாக இருக்கும் என்பது பலருடைய தனிப்பட்ட கருத்து
எழுத்தாளர் வேல ராமமூர்த்தி கூறுகையில்
"என்கிட்ட சேனல் தரப்பிலிருந்து அந்தக் கேரக்டர் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா, இப்ப நான் சினிமாவில் பிஸியா இருக்கிறேன். இப்பவும் ஒரு படப்பிடிப்பில் தான் இருக்கேன். சீரியலுக்கான நேரம் கொடுக்க முடியுமான்னு தெரியல. இந்த மாதம் 20-ஆம் தேதிக்கு மேல்தான் சினிமா ஷூட்டிங் முடியுது. அந்தத் தொடரில் நடிக்கிறதுக்கான பேச்சு வார்த்தை நடப்பது உண்மை தான். ஆனா, அது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை!" என்றார்.
மாரிமுத்து மறைவுக்குப் பிறகு பலருடைய மனதிலும் இனி ஆதி குணசேகரனாக நடிக்கப் போவது யார் என்கிற கேள்வி இருந்தது.
மாரிமுத்துவின் உடல்மொழிக்கும், கம்பீரமான குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவரவர். அவருடைய இழப்பு நிச்சயம் நடிப்புத் துறையில் மாபெரும் இழப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சினிமாவில் இத்தனை ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருப்பவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' தொடர் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. ஆதி குணசேகரன் எனப்படும் AGS என்கிற கதாபாத்திரம் அவருக்கு அத்தனை இயல்பாய் பொருந்தியிருந்தது.
அவர் மறைவுக்குப் பிறகு பலருடைய மனதிலும் இனி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற கேள்வியே இருந்தது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை சாய்ஸாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். மாரிமுத்துவின் ரசிகர்களோ நிச்சயம் அவர் உடல்மொழி, குரலை யாராலும் நிரப்ப முடியாது
இதற்கிடையில், நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. மாரிமுத்து மறைந்த செய்தி கேட்டு, வேல ராமமூர்த்தி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மாரிமுத்து குறித்துப் பதிவிட்டிருந்தார். அவரும், மாரிமுத்துவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அந்தப் படத்தில் இவருக்குச் சகோதரனாக மாரிமுத்து நடித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரனாக நடிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாக வருகிற செய்தி குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடமே பல பத்திரிக்கையாளர்கள் பேசிய நிலையில். ஆதி குணசேகரன் கேரக்டருக்கு என்னைக் கேட்டது உண்மைதான்! ஆனா..நேரம் இடம்தருமா காலம் முடிவு செய்யும் ." இதுவே வேல ராமமூர்த்தி தரும் பதிலானாலும் விரைவில் அறிவிப்பு வரும் அவர் ரோலா அல்லது அவர் மறைவைக் காட்டி மாற்றுக் கதாபாத்திரமா என்பது தொடரை இயக்கும் திருச் செல்வம் வழி தகவல் வந்து உறுதியாகும்
கருத்துகள்