எடப்பாடி கே. பழனிசாமி 2017 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக. இருந்த நிலையில், டி.வி.& ஏ.சி.யால் நடத்தப்பட்ட விசாரணையானது
யாதெனில் அவருக்கு விருப்பமான அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதில் அவர் செய்ததான டெண்டர் முறைகேடு ஊழல் (Highway Tender Scam Case) வழக்கில் அவரது பங்கு குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த
சிறப்பு விடுப்பு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், சமீபத்தில், தமிழ்நாடு அரசு, ஒரு புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டதென சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்தாலும் இப்போது உச்சநீதிமன்றத்தில்
விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னால் அமைச்சருமான கபில் சிபல் ஆஜராகக் கூடாதெனவும் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்பட உள்ளது.
கருத்துகள்