ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"ஜென்மாஷ்டமி நன்னாளில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் எனது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகும். இந்தப் பண்டிகை மக்களிடையே அன்பு மற்றும் பக்தி உணர்வை ஊக்குவிக்கிறது. அநீதிக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், தர்மம் மற்றும் நீதியின் பாதையைப் பின்பற்றுவதன் மூலமும் ஒரு இலட்சிய சமூகத்தை நிறுவுவதற்கான வழியை பகவான் கிருஷ்ணர் காட்டியுள்ளார். கீதையின் போதனைகள் மூலம் 'நிஷ்கம் கர்மா' என்ற செய்தியை பகவான் கிருஷ்ணர் வழங்கியுள்ளார்.
மனித சமுதாயத்தின் நல்வாழ்வு உணர்வுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் நமது நாட்டையும் சமூகத்தையும் வலுப்படுத்த பங்களிப்பு செய்ய பகவான் கிருஷ்ணர் காட்டிய வழியைப் பின்பற்ற உறுதியேற்போம்" எனத் தெரிவித்தார். மற்றும் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
ஜென்மாஷ்டமி நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பையும் பக்தியையும் பிரதிபலிக்கும் பகவான் கிருஷ்ணர் பிறந்த தினத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம். அவரது போதனைகள் 'அதர்மத்தை தர்மம் வென்றது என்ற காலத்தால் அழியாத செய்தியை உறுதிப்படுத்துகின்றன. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த ஞானம், மனித குலத்தின் சத்தியத்தையும் நீதியையும் தேடுவதில் நித்திய வழிகாட்டியாக இருக்கும்.
நமது கடமைகளைச் செய்வதில் பகவான் கிருஷ்ணரின் தன்னலமற்ற செயல் என்ற செய்தியை ஏற்றுக்கொள்வோம். இந்த ஜென்மாஷ்டமி நம் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.என்றார்
கருத்துகள்