மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை துவங்கிய பங்காரு ஆசிரியராக வாழ்க்கை துவங்கி 80 களில் நிறுவியவர்
பங்காரு அடிகளார் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
பங்காரு அடிகளாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆன்மிகமும், இரக்கமும் நிறைந்த அவரது வாழ்க்கை, என்றென்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கும். மனித குலத்திற்குத் தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவிற்கான விதைகளை விதைத்தவர். அவரது பணி பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமும், வழிகாட்டுதலும் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி." எனத் தெரிவித்துள்ளார். சைவ மடத்தில் பல்லக்குத் தூக்குவதை விமர்சனம் செய்த திராவிட வாதம் செய்தவர்கள் ஒரு மனிதனின் காலைக் கழுவி பூப் போட்டு இலட்சம் கோடி வாங்கின ஒரு நபரை தூக்கிக் கொண்டாடுவதைக் காணும் நிலை .
எந்தச் சாமியானாலும் எந்த வகை ஆன்மீகமானாலும் அது சார்ந்த ஆசாமி அல்லாது யாரும் தெய்வத்தைப் போய் எளிதாக வணங்கி விட முடியாது, தொட்டுக் கும்பிட முடியாது மேல், கீழ் பாகுபாடும் சுரண்டலும் ஏமாற்றுதலும் இருந்தே தீரும். ஏனெனில் மதத்தின் அடிப்படையே நீயும் நானும் ஒன்றல்ல எனச் சொல்வது தான். ஆதிபராசக்தியைப் பெண்களால் தொட்டு வணங்க முடிந்தது, கருவறைக்குள் செல்ல முடிந்தது, எளிய மனிதர்களால் ஒட்டி உறவாட முடிந்தது என்கிறார்கள். அதுவொரு சாதனை, ஜனாதனத்திற்கு எதிரான அறைகூவல் என இட்டுக்கட்டுகிறார்கள். அம்மனைத் தொட்டு வணங்க முடிந்ததற்கான காரணம், மேல்மருவத்தூரில் உண்மையில் தெய்வமாக வீற்றிருந்தது பங்காரு என்ற அடிகளார் என்பதாலேயே. அவரை அத்துனை சுலபத்தில் அணுகிவிட முடியாது. நிறையச் செலவாகும். உங்களது பலநாள் சேமிப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். ஈஷா யோக மையத்திலும் இதே கூத்துகள் தான் நடக்கிறது.
ஆதியோகியை யார் வேண்டுமானாலும் நெருங்கிச் சென்று பார்த்துவிடலாம். ஜக்கி வாசுதேவை அப்படி யாரும் சந்திக்க முடியாது. இதுபோன்ற கடவுள் சார்ந்த மனுடர்களை உருவாக்குகிற அமைப்புகளில் தெய்வம் சக்தி வாய்ந்ததல்ல, காட்மேனே சாமி. அந்தச் சாமியின் அருட்பார்வை எக்காலத்திலும் எந்த சாமானிய எளியோர் மீதும் விழுந்ததில்லை. படித்தவன் படிக்காதவன் தானய்யா... வாக்கரசியல் அதிகாரம் மண்ணாங்கட்டினு உளறாமல் தெளிவான பார்வை இங்கு ஒன்றுண்டு .
பாரதிய ஜனதா கட்சி பங்காருவை மரியாதை செய்வதிலிருந்து திமுக வினர் முந்திக்கிட்டாங்களா என விவாதம் தான் நடக்கிறது.
உங்களது பகுத்தறிவும், பெரியார் மண்ணும் அத்தனை மோசமாகவும், பலவீனமாகவுமா இருக்கிறது என்பதை மக்கள் ஏற்கிறீர்களா என்ற வினா எழாமல் இல்லை
அதை விட சந்தர்பத்தை தனக்குச் சாதகமாக ஆக்கிரமிப்பு செய்வது தான் ஈரோட்டு வே.ராமசாமி நாயக்கர் எனும் பெரியார் பாதை வகுத்த அரசியல் என்பதையும் நிறுவி விட்டீர்கள்.
பாஜக பூந்துரும்னு இன்னும் ஏமாற்றிப் பிழைப்பதற்கு பேர் எதுவானாலும் சரி விடுங்க. பங்காரு : தெலுங்குத் தங்கம்: தமிழ் திரு. பங்காரு அடிகளின் தாத்தா திரு .பங்காரு நாயக்கர் பிறந்தது கண்டமனூர் ஜமீன் எல்லையிலுள்ள நல்லிடைச்சேரி என்ற பாலசமுத்திரம். 1928 முதல் 1932 வரை உள்ள காலம் எனக் கணக்கிட முடிகிறது.
வேளாண்மை உற்பத்திப் பொருள்களை வாங்கி விற்றவர். இவரிடம் விதைப்பிற்கு வாங்கிய சோளம், கம்பு, குதிரைவாலி.. போன்றவை முளைக்காமல் போனதால் வேளாளண் குடிகளுக்கு நஷ்டஈடு கொடுத்து பெரும் நட்டமடைந்துடன், பெரும் அவப்பெயரும் ஏற்பட்டதாம். இதனால் வடக்கு நோக்கி பயணப்பட்டு படையாச்சிகளுடன் நட்பு ஏற்படுத்திப் பிழைப்பு நடத்தினார். அவரது பேரன் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே.
ஆவுடை வழிபாடு, ஒளவை வழிபாடு, கூபக வாழிபாடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே கூடி வழிபாடு நடுத்தும் முறை இருந்தாலும் இதை ஒரு மித்த இயக்கமாகக் கொண்டுவர எடுத்த முயற்சி தற்போது பாராட்டுக்குறியது வார வழிபாட்டு மன்றம். இதனால் என்ன சமூக மாற்றம் நடந்ததெனச் சொல்ல முடியாது. ஆனால் பெண்கள் குழுவாக, தனித்து இயங்கும் தன்மையை ஆதிபராசக்தி மன்றங்கள் வலிமை கொடுத்தது என்பதை மறுக்க இயலாது.
இவரது ஆன்மீகச் செயல்களை சமூக விடுதலை பேசும் அனைவரும் வரவேற்றது போலவே நாமும் வரவேற்கிறோம்.
குறிப்பு: (இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற சட்ட திருத்தத்தின்படி, மைய புலனாய்வு அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்தற்காக முதன் முதலாக வழக்கு பதியப்பட்டது அம்மா என்ற திரு. பங்காரு அடிகள் குடும்பத்தார் மீது. இவ்வழக்கை யாரும் பெரிதுபடுத்தி எழுதவில்லை.) என்பதும் உண்மை
முன்னால் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சி எம் சி பாலயோகி முதல் பாமக மருத்துவர் ச.ராமதாஸ் வரை பல அரசியல் அவருள் மறைந்திருந்தது என்பதே உண்மை தற்போது வாரிசு அரசியல் பார்த்தவர்களுக்கு வாரிசு ஆன்மீகம் பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளது. மன மாச்சரியங்கள் தவிர்த்து ஒரு வெகுஜன ஆன்மீக வாதி காலமானதால் அது ஒரு தாக்கத்தை ஒரு தரப்பில் காணும் நிலை ..எப்படி ஆனாலும் இறை நிழலில் அவரது ஆன்மா இளைப்பாகட்டும்
கருத்துகள்