காவலுக்குச் சென்ற வயது முதியவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு தேனி மாவட்டம் குள்ளப்பக் கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு.
இரவில் வயல் காவலுக்குச் சென்ற ஈஸ்வரன் என்ற வயது முதியவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு நடந்ததாகத் தகவல். அனுமதியின்றி காப்புக்காடு வனப்பகுதிக்குள் வந்ததாகக் கூறி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல். உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசினர் மருத்துவமனை அருகில் குவிந்தனர். தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குள்ளப்பா கவுண்டன்பட்டியை ஈஸ்வரன் என்ற முதியவர் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டது.காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்த நிலையில் வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது ஈஸ்வரன் பதிலுக்குத் தாக்கியதாக வனத்துறை தகவல் கூறுகிறது. கத்தியால் தாக்க வந்த ஈஸ்வரனை தங்கள் பாதுகாப்புக் கருதி வனவர் திருமுகன் துப்பாக்கியால் சுட்டதில் பலியானதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதியவர் ஈஸ்வரன் உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஈஸ்வரன் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளித்த நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்தனர்.
கருத்துகள்