இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1963 ன் 4 வது பிரிவின் படி 15 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்ட நிலையில்
தற்போது 61 வயதான நீதிபதி எம்.வி. முரளிதரன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தற்போது பணியிட மாற்றத்திற்கான கொலீஜியத்தின் பரிந்துரை அவருக்கு வழங்கப்பட்டது தண்டனை மாதிரியே நீதித்துறை வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து அதற்கு மாறாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்பது இந்தியாவில் உத்தரவிடுவது அரிதாக நடைபெறும் சம்பவம். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடைபெற்றுள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருக்கும் எம்.வி.முரளிதரன், தன்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதியாக பணியமர்த்துமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் அக்டோபர் 11 ஆம் தேதி பரிந்துரை செய்துள்ளது.
அவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள கொலீஜியம், நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தாவிலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றுவதற்கான முந்தைய பரிந்துரையையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. விரைவிலேயே மத்திய அரசு இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியான கொல்கத்தா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிபதி முரளிதரன் கொலிஜியத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்ததன் படி தன்னை கொல்கத்தாவிற்கு மாற்றுவதற்குப் பதிலாக, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்பதே அவரது கோரிக்கை அப்போது நீதிபதி சித்தார்த் மிருதுல் நியமனத்தில் தாமதம் செய்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கட்ரமணி, கொலிஜியத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.ஆனால், அதனை செயல்படுத்துவதில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிற நிலையில் அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ”மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்பு தவறானது" என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் மணிப்பூர் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த ஜூலை மாதமே கொலீஜியம் பரிந்துரை செய்தது. இப்பேரணியில் குகியின மக்களுக்கெதிராக மெய்தி சமூத்தினர் ஈடுபட்ட மோதல் கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் அணையாத தீயாக உருவெடுத்து 150 க்கும் மேற்பட்ட மக்களை உயிர்பலி வாங்கி பெருங் கலவரமாக இன்று வரை நீடிக்கிறது. மணிப்பூரில் வாழும் குகி எனும் சிறுபான்மை பழங்குடியினரின் நிலங்களையும், உரிமைகளையும் பறித்து மெய்தி எனும் பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்குவதற்கு அடிகோலும் சர்ச்சைக்குரிய தீர்ப்பாக இது பார்க்கப்பட்டது.
அதை எதிர்த்துத் தான் மணிப்பூரிலுள்ள அனைத்துப் பழங்குடிகளின் மாணவர் சங்கம் கடந்த மே 3 ஆம் தேதி தலைநகர் இம்பாலிலிருந்து 60 கி.மீ தொலைவில் சுராக்சன்பூர் மாவட்டத்திலுள்ள டோர்பால் உள்ளிட்ட அனைத்து 8 மாவட்டங்களிலும் பேரணி நடத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பான
வழக்கில் தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன் விசாரித்துத் தீர்ப்பளித்தார். அதில் மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி முரளிதரன் வழங்கிய உத்தரவு மணிப்பூரில் கொந்தளிப்பைக் கிளப்பியது. அதைத்தொடர்ந்து 2023 பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் முரளிதரன் பொறுப்பேற்றார். அவர் கடந்த 30 வருடத்தில் வழக்கறிஞராக நீதித்துறையில் நுழைந்து அடுத்தடுத்து தனது திறமையால் நீதிபதியாக, தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அங்கு குற்றவியல், கிரிமினல், ரிட் மனுக்கள் சிவில் வழக்குகள் என பல்வேறு வகையான வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அங்கு மூன்றாண்டுகள் பணியாற்றியவர் எந்திரன் திரைப்படக் கதை உரிமை வழக்கு. நடிகர் வடிவேலு - சிங்கமுத்து நில மோசடி வழக்கு
போன்ற பல வழக்குகளில தீர்ப்பளித்துள்ளார். அதன்பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் மணியம்பட்டு கிராமத்தின் ஒரு விவசாய குடும்பத்தில் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் மணியம்பட்டு வஜ்ஜிரவேலு மகனான முரளிதரன், வயது 61 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையில் பணியாற்றுகிறார்,
முதுநிலை வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள முரளிதரன் தன்னை வழக்கறிஞராக 1990 ஆம் ஆண்டு பதிவு செய்தார். உயர்நிதிமன்றம் மதுரைக்கிளை, சென்னை உயர்நீதிமன்றம், DRT மற்றும் DRAT, சிட்டி சிவில், செஷன்ஸ் மற்றும் மாஜிஸ்திரேட் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் வழக்காடியுள்ளார் என்பதே அவர் கடந்து வந்த பாதை இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவாதப் பொருள் பல சட்ட வள்ளுநர்கள் பார்வையளவில் தற்போது பார்க்கப்படுகிறது.
கருத்துகள்