புதுக்கோட்டை மாவட்டத்துக்கு
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை
காரணமாக இலுப்பூரில் கட்சியினர் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் மேலும்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் னும் யாத்திரை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து சிறப்புரையாற்றுகிறார் இன்று மாலை
முன்னதாக விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாலுகா மேலப்பட்டி கிராம பெட்ரோல் பங்க் அருகில் இன்று மாலை யாத்திரையைத் துவங்கி மாலை ஏழு மணி அளவில் இலுப்பூர் பேரூராட்சி சின்னக் கடை வீதியில் சிறப்புரை ஆற்றினார்
தொடர்ந்து ஆறாம் தேதி மாலை 3 மணிக்கு கந்தர்வகோட்டையில் அக்கட்சி சார்பில் ஊர்வலம் துவங்கி கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார்
பின்னர் மாலை ஆறு முப்பது மணியளவில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சாவூர் சாலை மச்சுவாடி அண்டக்குளம் பிரிவு சாலையில் ஊர்வலம் மற்றும் யாத்திரை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு பொதுமக்களைச் சந்தித்தவாறு பிருந்தாவனம் வழியாக அண்ணா சிலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் மாலை 8 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்
இந்த்நிகழ்ச்சியில் அரசியலில் மாற்றத்தை எதிர்நோக்கும் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பொதுமக்களுடன் சில மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் நிலையில் கூட்டத்த்தில் பாஜக நிர்வாகிகள் மாநில விளையாட்டு திறன் மேம்பாட்டு பாஜக துணைத் தலைவர் என் ராமச்சந்திரன் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் மாவட்ட பொருளாளர் வி.முருகானந்தம் ஆகியோரும்
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை வருகை தருவதை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் பல்வேறு அணி நிர்வாகிகள் மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் அவர் வழியெங்கும் கொடி மற்றும் பிளக்ஸ் டிஜிட்டல் பேனர்கள் பதாகைகள் ஆகியவை வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.பாஜக வின் தரவு மேலாண்மைப் பிரிவின் மாநிலச் செயலாளர் குரு. கார்த்திகேயன்,
அன்னவாசல் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் இலுப்பூர் எஸ்.வி. இரவிச்சந்திரன், அன்னவாசல் வடக்கு ஒன்றியத் தலைவர் பொன். முருகையா, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் எம். நாகேந்திரன், ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த போதிலும் பாஜகவின் இப்பகுதியில் வளர்ச்சி குறித்து கவலை கொண்ட கட்சிகள் பயம் காரணமாக டிஜிட்டல் பதாகைகளை கண்டு ஆளும் திமுகவில் சிலரும் அதிமுகவில் சிலரும் மிரண்ட காரணத்தால் அதை காவல்துறை அகற்றியதாக பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்தனர் அந்தப் பதாகைகளில் திராவிட அரக்கனை அழிக்க வந்த அவதாரமே எனக் குறிப்பிட்டாதற்காக காவல்துறை சார்பில் அகற்றினார்கள், அதுகுறித்து வினவிய செய்தியாளர்களிடம் டி எஸ பி அகற்றச் சொன்னதாகக் கூறி இலுப்பூர் நிலையத்தில் பணி செய்யும் காவலர்கள் அகற்றி அதை காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள். எனத் தெரிவித்தார்கள்
கருத்துகள்