நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்.
அவருக்கு வயது 60. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவச் சிகிச்சை பெற்றவர் இன்று அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் போண்டா மணி,
1991 ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனு தான்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்பட 150 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். சென்னை பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டநிலையில்
நேற்றிரவு 10 மணிக்கு அவரது வீட்டில் மயங்கியதையடுத்து அவரைக் குடும்பத்தினர் குரோம்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு கலையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்