முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண்டைய மக்கள் நடத்திய ஏறு தழுவுதல் கலாச்சாரம் மாறிப்போன அரசே நடத்தும் ஜல்லிக்கட்டு

இந்தியாவின் வட பகுயியில் லோஹ்ரி என்றும், சில மத்தியப் பகுதிகளில் மஹர சங்கராந்தி


எனவும் தமிழ்  நாட்டில் பொங்கல் என்றும் இந்த விழாவை அழைக்க சூரியன் வடக்கே "ஏறும்" கொண்டாட்டமாகும். குளிர்காலத்தின் குளிர் காலம் முடிவு வரும்  நாளை (ஜனவரி 14) திருவிழா குறிக்கிறது, அதன் பிறகு  குளிர் குறையத் தொடங்குகிறது. வடநாட்டில், தீபங்களை ஏற்றி, இனிப்புகள், அரிசி மற்றும் பாப்கார்ன் ஆக பிரசாதமாக வீசுவதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது. தெற்கில் , சூரியக் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது, சூரியன் இல்லாமல் அறுவடை இருக்காது. திருவிழாவின் போது, ​​பொதுவாக உண்ணப்படும் உணவுகள் தானியங்களின் விதைகள் மற்றும் வெல்லம் இனிப்புகள், பால் நெய்யுடன் சமைத்த அரிசி, வெல்லம் கலந்த பொங்கல் தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், ஐங்குறுநூறும்

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் குறிப்பிடும் விழா      புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படும் நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி அல்லது பொங்கல் விழா எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கும் எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்படுகிறது உத்ராயணம் மற்றும் தட்ஷணாயனம் ஆகும் இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,  வானிலை மற்றும் பன்முகப் பண்பாடு காரணமாக பல பெயர்களிலும் பல வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.   இதில் தற்போது கால மாற்றத்திற்கு ஏற்றது போல வரலாறு தெரியாத பலர் வந்த நிலையில் அதை பலர் தங்கள் வசதிக்காக மற்றி அமைக்க ஆட்சி அதிகாரமும் ஒரு காரணமாக அமைகிறது. இதன் தொடர்ச்சியாக மாட்டுப்பொங்கல் அதில் திருவள்ளுவர் பிறந்த தினம்   தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 




புதிய அரங்கில் ஜனவரி மாதம் 23 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் முதல்வர் துவக்கி வைக்கிறார் அலங்காநல்லூர் அருகே ரூபாய்.44 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம், திறப்பு விழா காணும் நிலையில், பல சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. காரணம் 

பண்டைய ஏறுதழுவுதல் பண்பாட்டின் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் தனிச்சிறப்பு மிக்க மரபு அடையாளமாகத் திகழ்கிறது. விலங்கு வதை என விலங்குகள் நல வாரியம் மற்றும் அயல்நாட்டு பீட்டா போன்ற அமைப்புகளின் தலையீட்டின்  அடிப்படையில் தடை ஏற்பட்ட போது,  2016-ஆம் ஆண்டு, தமிழ்நாடு  முழுவதும் நடைபெற்ற தன்னெழுச்சியான போராட்டத்திற்குப் பின் நிரந்தரத் தீர்வு சட்டப் பாதுகாப்புக்  கிடைத்தது.   அது அரசாணையாகவும் வந்த நிலையில் அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூபாய்.44 கோடியில்  67 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வண்ணம் அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்டது.மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் போட்டிகளைக் காண வருகை தரும் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.





பல்வேறு வசதிகளோடு இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டாலும், அலங்காநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து  மேற்கொண்ட ஒரு கள ஆய்வில், தங்களது குமுறல்களை பொது மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு அரங்கம் அவசியமற்றதென அலங்காநல்லூர் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கார்த்திக் கூறுகையில், 'மிகப் பெரிய பொருட்செலவில் ஜல்லிக்கட்டு அரங்கம் கீழக்கரை கிராமத்தில் அமைக்கப்படுகிறது. அவசியமற்றது. ஆண்டில் 12 மாதங்களில் ஜனவரி தொடங்கி மே வரை 5 மாதங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. தோராயமாகத் தமிழ்நாடு முழுவதும் 100-150 ஜல்லிக்கட்டுகள் நடைபெறுகின்றன. அவரவர் ஊரில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டை விட்டுவிட்டு இந்தத் திடலில் நடத்த மக்கள் எவ்வாறு ஒப்புக் கொள்வார்கள் ? பொதுவாக ஜல்லிக்கட்டு என்பது அந்த ஊரின் வரலாற்றுப் பாரம்பரியத்தோடு தொடர்புடையது.அந்தந்த ஊர்களில் உள்ள கோவில் மற்றும் அதன் திருவிழாவை ஒட்டி நடைபெறுவதாகும். குறைந்த பொருட்செலவில் வாடிவாசல் அமைத்து அந்தந்த ஜல்லிக்கட்டு விழாக்களை மக்கள் நடத்தி வருகிறார்கள். தற்போது முறையான தடுப்புகள் அமைத்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து நடத்துவதற்குக் குறைந்தது ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. அது போக பரிசுப்பொருட்களுக்கான செலவு. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிறுத்தி சொந்த, பந்தங்கள் ஊர்களுக்கு வருவதைத்தான் மக்கள் விரும்புவார்கள். பள்ளி விளையாட்டுப் போட்டிகளெல்லாம் மதுரையைப் பொறுத்தவரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இதனால் உள்ளூர் பள்ளிக்கூடங்களில் விறுவிறுப்பாக நடைபெறக்கூடிய அந்தத் தன்மை குறைந்துவிட்டது. அது போன்ற நிலை தான் இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கும் நிகழும். ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான செயல்திட்டங்கள் என்ன என்பதே இன்னும் தெளிவாக்கவில்லை. தேவையில்லாமல் வனப்பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம். இதனால் வன உயிர்கள் பாதிப்புக்கு ஆளாகும். ஒரத்தநாடு, நாமக்கல்லில் மட்டுமே கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளது. கால்நடை சம்பந்தமான ஜல்லிக்கட்டு, ரேக்ளா, கிடா சண்டை உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற கால்நடைப் பல்கலைக் கழகத்தை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்குப் பதில் அமைப்பதே சரியான தீர்வாகும் என்கிறார்.     அலங்காநல்லூரைச் சேர்ந்த மற்றொருவர் விக்ரம் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு மைதானமென்ற பெயரில் பாரம்பரியமாகக் கிராமங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களை முடக்கும் முயற்சி இது.






ஒரு குழப்பமான சூழலில் தான் ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படுகிறது.     சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலைக்கல்லூரி வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல், மக்கள் கேட்காத ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதை எவ்வாறு ஏற்பது? ஐபிஎல், கபடி லீக் போன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இந்த அரங்கில் நடத்தலாம். ஆனால், மாறாகப் பாரம்பரியங்களில் தமிழக அரசு தலையீடு செய்வதை ஏற்க முடியாது' என்கிறார்.மேலும் அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் இதே போன்ற உணர்வு மக்களிடையே இருப்பதைக் காண முடிகிறது. மேலும் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு எளிதாகச் செல்வதற்கு வசதியாக தனிச்சியம்-அலங்காநல்லூர் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வகையில் ஏறக்குறைய 3 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை இழப்பீட்டுப் பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கிடையே ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கம் எனப் பெயரைச் சூட்டியிருப்பதற்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டும் என்ன தொடர்பு?இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் கதிர் நிலவன் கூறுகையில், 'அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பெயரைச் சூட்டியிருப்பதாகத் தகவல் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைத்ததையே அந்தப் பகுதி மக்கள் விரும்பாத நிலையில், கருணாநிதியின் பெயரை அந்த அரங்கத்திற்குச் சூட்டுவது கண்டனத்திற்குரியது. கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டும் என்ன தொடர்பு உள்ளது? 1965 மொழிப்போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டமே மிகப் பெரிய எழுச்சிக்குரியது.




ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி திமுக.கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக இன்று ஜல்லிக்கட்டு உரிமை நிலை நிறுத்தப்பட்டது. திமுக, காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி அமைச்சரவையிலிருந்த போது தான் விலங்குகள் வதை சட்டத்தில் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் ஜல்லிக்கட்டு காளையைச் சேர்த்து சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தக் காலகட்டங்களில் திமுக ஜல்லிக்கட்டு உரிமைகளுக்காக என்ன செய்தது என்பது தான்  கேள்வி. பாண்டிய மாமன்னர்களின் நினைவாக மதுரையில் எந்தவித அடையாளமும் இல்லாத நிலையில், மன்னர் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்குச் சூட்டுவது  தான் சரியானது' என்றார்



மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாக்கள் முறையே ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடந்து முகூர்த்தக்கால் நடப்பட்டு வாடிவாசல் தயாரான பின் நேற்று முன்தினம்  அவனியாபுரத்தில் நடந்து முடிந்தது. அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருடன் கலந்து ஆலோசித்து நிரந்தரமாக அந்த இடத்தில் வாடிவாசல் அமைக்க முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார். உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூர் மாடுகளைக் கொண்டு வந்து உள்ளூர் மாடுகள் என கூறுவதால் பிரச்சினை ஏற்படுகிறது,


மாடுபிடி வீரர்கள், காளைகள் போலியாக ஜெராக்ஸ் எடுத்து களமிறக்கும் பிரச்சினை இந்த முறை நடக்காது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக முன்னின்று நடத்துவார். எந்த ஒரு தவறும் நடக்காது எனக் கூறினார். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதில். மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி.10,11ஆம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட.காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஜனவரி 10 பகல் 12 மணி முதல் ஜனவரி 11 பகல் 12 மணி வரை முன்பதிவு செய்தனர்  madurai.nic.in என்ற இணையதளத்தில் வீரர்கள், காளைகளுக்கு முன்பதிவு செய்து ஒரு மாட்டிற்கு தகுதிச் சான்றிதழ் பெற்று, வேறு நபரின் ஆதார் மூலம் முன்பதிவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

ஒரு ஊரில் விளையாடும் மாடும், வீரர்களும் வேறு ஊர்களில் போட்டியிட அனுமதி இல்லை. முறைகேடுகளை தவிர்க்க QR Code இணைப்புடன் டோக்கன் வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால்.ஆதார் எண்ணை பயன்படுத்தி கால்நடை துறையினரை ஏமாற்றி தகுதிச்சான்று பெறுவதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

கால்நடைத் துறையினரால் இந்த ஆள்மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியாது. அதனால், ஒரே காளை ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் டோக்கன்  வழங்கும் போது இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று காளை உரிமையாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.    இதே போல அவனியாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு

நடந்து வருகின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால்

பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில், இந்த போட்டியினை நடத்தியவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம்

குழுக்களை அழைத்துப் பேசியும் சமாதானமாகாத நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு

முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன் பின்னர் வருடந்தோறும் தை மாதம் 15 ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

போட்டியை மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமே நடத்தி

வருகிறது. இருவரை ஊர் விழா நடத்தும் அரசு வேடிக்கை பார்த்த காலம் போய் தற்போது அரசே நடத்தக் காரணம் இது மக்கள் தெளிவில்லாத நிலை தான். 

2024 ஆம் ஆண்டில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான்

நடத்துவோம் என்று பல தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால் அவனியாபுரத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினர்களுக்குள் பிரச்னை மற்றும்

வாக்கு வாதங்கள் ஏற்படுகிறது. இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மீது வெறுப்பு உண்டாகும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்ட நிலையில் மதுரை  மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவனியாபுரம் கிராமத்தில் நடைபெற இருக்கிற ஜல்லிக்கட்டை, மதுரை மாவட்டநிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு

முன் விசாரணைக்கு வந்த போது, எந்தவிதமான ஜாதி, மதச் சாயல்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவிடனர். அதன்படியே நடந்து முடிந்துள்ளது , மதுரை,அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது,மதுரையில், அலங்காநல்லூர், பாலமேடு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் தினத்தில் (ஜனவரி 15) நடைபெற்று முடிவுற்றது. இதற்கான ஏற்பாடுகள் விழா மேடை அமைத்தல், கம்பி வலை தடுப்புகள் அமைத்தல், வாடிவாசல் பணி உள்ளிட்ட விழா முன்னேற்பாடுகளை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து ஆட்சியர் சங்கீதாவும்  கண்காணித்தார்.

இந்த் நிலையில், காலை 7 மணிக்கு போட்டி தொடங்குவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 10 கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மதுரை மாநகரக் காவல்துறை அறிவித்தது.            போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் காளைகளுக்கு நேற்று (ஜனவரி 14) நள்ளிரவு 12 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் சாலை, திருப்பரங்குன்றம் சாலை, முத்துப்பட்டி சாலை வழியாக காளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. காளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்தலாம்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்திற்குள் காளைகள், உரிமையாளர்கள் மற்றும் அவருக்கு உதவ ஒரு நபர் மட்டுமே வரிசையில் நிற்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்போர் புகைப்படம் மற்றும் உரிய மருத்துவச் சான்றிதழுடன் வர வேண்டும்6. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணம் கொண்டும் மது போதையில் இருக்கக்கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

காளைகளுடன் வரும் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மது போதையில் இருக்கக்கூடாது. காளைகளின் உரிமையாளர்கள் பசுவின் மூக்கை அறுப்பதற்கான கத்திகளையோ, கூர்மையான ஆயுதங்களையோ கொண்டு வரக்கூடாது.

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான உபகரணங்களுடன் உரிய பயிற்சி பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 ஜல்லிக்கட்டு பகுதியில் வீட்டின் மாடியில் வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வெளியாட்கள் வீட்டின் மாடியில் தங்க அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என அறிவிக்கப்பட்டது.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 10 மதுக்கடைகளையும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 மதுக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில்,  தங்கக்காசுகளை வழங்கி கவனத்தை ஈர்த்தார் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒரு காரும் வழங்குகிறார் . கடந்தாண்டு உதயநிதி பெயரில் 2 மோட்டார் சைக்கிள் வழங்கிய நிலையில் இந்தாண்டு கார் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஊழல் பணம் கொழிக்கும் பத்திரப்பதிவுத் துறை கையில் உள்ள நிலையில் இந்த பரிசு வழங்குவது பலரது பார்வையில் படுகிறது அது ED மற்றும் வருமான வரித்துறை பார்வையிலும் படும்அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 3,700 காவலர்கள் பாதுகாப்பு

 மாநகரக் காவல் ஆணையர், தென்மண்டல ஐஜி மேற்பார்வையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சுமார் 3, 700 காவலர்கள் ஈடுபடுத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்கள், திருச்சி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் உற்சாகமுடன் பங்கேற்கின்றன. 3 ஜல்லிக்கட்டு போட்டியிலும் மாடுபிடி வீரர்கள், ஏராளமான பார்வையாளர்களும் ஆர்வமுடன் பங்கேற்பது வழக்கம். காவல் துறை பாதுகாப்பும், வருவாய், கால்நடை போன்ற பிற துறையினர் பணிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்நிலையில், 3 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்புப் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பாதுகாப்புக்கான பட்டியல் தயாரித்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதன்படி,பொங்கல் தினத்தன்று ஜன.15-ல் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் மங்ளேசுவரன், பாலாஜி தலைமையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தொடர்ந்து 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயரின் ஆலோசனையின்பேரில், மதுரை டிஐஜி ரம்யா பாரதி மேற்பார்வையில், மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விரு ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்கென ராமநாதபுரம், தேனி காவல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். 2 நாளிலும் மதுரை எஸ்பி தலைமையில் சுமார் 2,200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்தார்.ஜல்லிக்கட்டு நடக்கும்போது ஜாதி பெயரை சொன்னா அது ஜாதி வெறி அதுவே சலுகை வாங்கும்போது ஜாதி பெயரை சொன்னா அது சமத்துவமா? என்ற வினா வருகிறதுஇதில் பொதுநீதி யாதெனில் நமது நாட்டில் தேவர்குளம் கவுண்டன்பட்டி பள்ளபட்டி ஜாதிக் கவுண்டன்பட்டி செட்டியபட்டி ரெட்டியபட்டி எருமை நாயக்கன் பட்டி வண்ணான் குளம் சக்கிலியன் குலம் ஆசாரிபட்டி அய்யர் பட்டி கொசவபட்டி

குறவ பட்டி முத்தப்பன் நாயக்கனூர் தொட்டப்ப நாயக்கனூர் ஜோதி நாயக்கனூர் லிங்கப்பநாயக்கனூர், வண்ணாரப்பேட்டை , இந்த ஊரு சொல்லும்போது எப்படி ஜாதி பெயரைச் சொல்லாமல்  அறிவிப்பு  வெளியிடுவாங்க சார் இந்த வினா நம் எல்லோர் காதிலும் விழுகிறதே... கடந்த காலப் பாரம்பரிய முறைகளை மாற்றி விட்டால் சமுதாய சமூகக் குமுகாயப் பண்பாடுகள் மாறிவிடும் என நம்பும் ஒரு அரசியல் கூட்டத்தின் செயலாகவே காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்