முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடைக்காலப் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

 இந்த பட்ஜெட் வெறுமனே இடைக்கால பட்ஜெட் அல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட் : பிரதமர்


"வளர்ச்சியடைந்த பாரத பட்ஜெட் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த உத்தரவாதம் அளிக்கிறது"

"இந்த பட்ஜெட் தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது"

"இந்த பட்ஜெட் இளைய இந்தியாவின் விருப்பங்களின் பிரதிபலிப்பாகும்"

"நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம், அதை அடைகிறோம், இன்னும் பெரிய இலக்கை நாங்களே நிர்ணயிக்கிறோம்"

" ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது"

நாடாளுமன்றத்தில்   இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் "வெறுமனே இடைக்கால பட்ஜெட் என்றில்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட்" என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். "இந்த பட்ஜெட் தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் திரு மோடி உறுதிபடக் கூறினார். "இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவின் தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்" என்று பிரதமர் மேலும் கூறினார்.




நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டிய பிரதமர் திரு மோடி, "நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட்" என்று கூறினார். இந்த பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள்  வளர்ச்சியடைந்த பாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

"இந்த பட்ஜெட் இளைய இந்தியா விருப்பங்களின் பிரதிபலிப்பாகும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துரைத்த அவர், "ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், பட்ஜெட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.




நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், மொத்த செலவினம் இந்த பட்ஜெட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.11,11,111 கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "பொருளாதார நிபுணர்களின் மொழியில், இது ஒரு வகையான இனிமையான இடம்" என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் 21-ம் நூற்றாண்டின் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் அவர் கூறினார். வந்தே பாரத் ரயில் தரத்தில் 40,000 நவீன பெட்டிகளைத் தயாரித்து அவற்றைப் பயணிகள் ரயில்களில் இணைப்பதற்கான அறிவிப்பு குறித்தும் அவர் தெரிவித்தார். இது நாட்டின் பல்வேறு ரயில் பாதைகளில் கோடிக்கணக்கான பயணிகளின் வசதி, பயண அனுபவத்தை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.


லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, "நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம், அதை அடைகிறோம், பின்னர் இன்னும் பெரிய இலக்கை நாங்களே நிர்ணயிக்கிறோம்" என்று கூறினார். ஏழைகள், நடுத்தர மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், கிராமங்கள், நகரங்களில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்படுவது குறித்தும், மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்திய பிரதமர் திரு மோடி, " 2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். தற்போது, இந்த இலக்கு 3 கோடி 'லட்சாதிபதி'களாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.




ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கியதற்காகவும், அதன் பயன்களை அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு விரிவுபடுத்தியதற்காகவும் பிரதமர்  திரு மோடி பாராட்டினார்.

இந்த பட்ஜெட் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார். மேற்கூரை சூரியசக்தி மின்சாரத் தகடு இயக்கத்தின் மூலம் 1 கோடி குடும்பங்கள் இலவச மின்சாரத்தைப் பெறுவார்கள் என்றும், அதிகப்படியான மின்சாரத்தை அரசுக்கு விற்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை வருவாய் ஈட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.




நடுத்தர வகுப்பைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி தள்ளுபடித் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நானோ டிஏபி பயன்பாடு, விலங்குகளுக்கான புதிய திட்டம், பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்ட விரிவாக்கம், தற்சார்பு எண்ணெய் வித்து இயக்கம் ஆகியவை விவசாயிகளின் வருவாயை அதிகரித்து செலவுகளைக் குறைக்கும் என்று குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் அறிக்கையையொட்டி மக்கள் அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சகம்

இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-25-ன் சிறப்பம்சங்கள்

அனைவரையும் உள்ளடக்கிய அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை என்ற தாரக மந்திரத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அனைவரது முயற்சியுடன் கூடிய அணுகுமுறையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறி 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:




பகுதி- ஏ

சமூக நீதி

ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியமான வகுப்பினரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏழைகள் நலனே நாட்டின் நலன்

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு  விதமான வறுமை நிலைகளில் உள்ள 25 கோடி மக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது.

பிரதமரின் ஜன்-தன் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வரவு வைக்கப்பட்ட 34 லட்சம் கோடி ரூபாயில் அரசுக்கு 2.7 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பு கிடைத்துள்ளது.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 2.3 லட்சம் சாலையோர வியாபாரிகள் 3-வது முறையாக கடனுதவி பெற்றுள்ளனர்.




பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், குறிப்பாக அதிகம் பாதிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

18 வகையான  கைவினை கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வர்த்தகத்தில்  ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் பிரதமரின் விஷ்வ கர்மா திட்டம் வகை செய்கிறது.

விவசாயிகள் நலன்

பிரதமரின் வேளாண் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், 11.8 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை 1361 மண்டிகளை ஒருங்கிணைத்துள்ளதுடன், 1.8 கோடி விவசாயிகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சேவைகளை வழங்கியுள்ளது.

பெண் சக்திக்கான  உத்வேகம்




பெண் தொழில் முனைவோருக்கு  30 கோடி கடன்கள் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

உயர்கல்வியில் சேர்ந்துள்ள மகளிரின் எண்ணிக்கை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஸ்டெம் (stem) பாடத்திட்டத்தில் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) உலகிலேயே மிக அதிகளவாக 43 சதவீத மகளிர்  சேர்ந்துள்ளனர்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 70 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (கிராமப்புறம்)

கோவிட் தொற்று பாதிப்பின் சவால்கள் இருந்தபோதிலும், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு விரைவில் எட்டப்படும்.

மேலும் 2 கோடி வீடுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கூரைகளில் சூரியசக்தி மின்உற்பத்தி மற்றும் இலவச மின்சாரம்

வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 300 அலகுகள் மாதந்தோறும் ஒரு கோடி இல்லங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.




இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வரும் சுகாதாரா சேவைகள் அனைத்து ஆஷா பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள்  மற்றும் உதவியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல்

பிரதமரின் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதுடன், 10 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்துதல் நிறுவன கட்டமைப்புத்திட்டத்தின் மூலம் 2.4 லட்சம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 60 ஆயிரம் தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்படிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல். வேலைவாய்ப்பு மற்றும்  மேம்பாடு

ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 50 ஆண்டு கால வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுவதன் மூலம் நீண்ட கால முதலீடு மற்றும் மறுமுதலீடு தொடர்பான நடவடிக்கைளில் நீண்ட கால மற்றும் குறைந்த அல்லது வட்டியில்லா கடனுதவிகள்

பாதுகாப்பு துறையில் தற்சார்பு நிலையை எட்டும் வகையில், தொழில்நுட்ப பயன்பாடுகளை வலுப்படுத்துவதற்கான புதியத் திட்டம் தொடங்கப்படும்.


உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகள் 11.1 சதவீதம் வரை உயர்ந்து 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாக உயரும்.

ரயில்வே

பிரதமரின் விரைவுச்சக்தி பெருந்திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சரக்குப் போக்குவரத்துக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 3 மிகப்பெரிய பொருளாதார ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான  திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி, கனிம வளம் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றுக்கான ரயில் வழித்தடங்கள்

 துறைமுகங்களை  இணைக்கும் வகையிலான ரயில் வழித்தடங்கள்

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளுக்கான ரயில் வழித்தடங்கள்

40 ஆயிரம் சாதாரண வகை ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திலான ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்.

விமானப்போக்குவரத்துத் துறை

நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரிக்கப்பட்டு இரு மடங்கு உயர்த்தப்படும். 

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 517 விமான வழித்தடங்கள் மூலம் 1.3 கோடி விமானப் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை இந்திய விமானம் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.

பசுமை எரிசக்தி

நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் உற்பத்திக்கான திறன்  வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 மெட்ரிக் டன் அளவுக்கு  மேம்படுத்தப்படும்.

வீட்டு உபயோகத்திற்கான குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் போக்குவரத்திற்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவுடன் உயிரி எரிவாயுவை கலப்பதற்கான கட்டாய நடைமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும்

சுற்றுலாத்துறை

முக்கிய சுற்றுலா தலங்களில்  விரிவான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட அதனை சர்வதேச தரத்தில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தரமான வசதிகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில், சுற்றுலா மையங்களை தரவரிசைப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்.

 சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான மாநில அரசு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்.

முதலீடுகள்

2014-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடாக 596 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் பெறப்பட்டுள்ளது.  இது 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மறு சீரமைப்புத் திட்டங்கள்

மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சிக்கான முக்கிய  சீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரத்திற்கான 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுக்ள 2023-24

கடன்கள் தவிர திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாய் மதிப்பீடு, 27.56 லட்சம் கோடியாக உள்ளது. அதில் 23.24 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் ஆகும்.

திருத்தியமைக்கப்பட்ட மொத்த செலவினத் தொகை 44.90 லட்சம் கோடி ரூபாயாகும்.

வருவாயின வரவுகள் 30.03 லட்சம் கோடி ரூபாய் அளிவிற்கு பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்,  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளதை பிரதிப்பலிக்கிறது.

2023-24-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உள்ளது.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25

கடன்கள் தவிர மொத்த வருவாய் மற்றும் மொத்த செலவினத்தொகை முறையே 30.80 லட்சம் கோடி மற்றும் 47.67 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரிவருவாய் 26.02 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களின் முதலீட்டு செலவினங்களுக்கான 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் 1.3 லட்சம் கோடி ரூபாய்  அளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் .

2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாகுறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடப்பட்டுள்ளது.

2024-25-ம் நிதியாண்டில் காலவரையறையுடன் கூடிய பங்குசந்தைகள் மூலம் பெறப்படும் மொத்த மற்றும் நிகர கடன்தொகை முறையை 14.13 மற்றும் 11.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பகுதி- பி

நேரடி வரிகள்

நேரடி வரிவிதிப்பு விகிதங்கள் எவ்வித மாற்றமுமின்றி அதே வரி விகிதங்களாக தொடரும் என்று நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரிவசூல் முன்பணம் மும்மடங்காகவும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2.4 மடங்காகவும் அதிகரித்துள்ளது.

வரிசெலுத்துவோருக்கு அளிக்கப்படும் சேவைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

2009-10 ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் 25 ஆயிரம் ரூபாய் அளவிலான நேரடி வரி நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும்.

2010-11-ம் நிதியாண்டு முதல் 2014-15-ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் அளவிலான நேரடி வரி நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும்.

இதன் மூலம் ஒரு கோடி எண்ணிக்கையிலான வரிசெலுத்துவோர் பயனடைவர்.

புத்தொழில் நிறுவனங்களுக்கான வரிப் பலன்கள்,  தங்கபத்திரம் மீதான சொத்து உருவாக்க நிதி அல்லது ஓய்வூதிய நிதி மீதான முதலீடுகள் 2025-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி சார் சேவைகள் மையத்தின் ஒரு சில அலகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிசார் சேவைகளுக்கான வரி விலக்கு 2025-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைமுக வரிகள்

முறைமுக வரிகள் மற்றும் இறக்கும் தீர்வைகளுக்கான விகிதங்களில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்று நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையின் அமலாக்கம் மறைமுக வரிவிதிப்பின் கட்டமைப்பை ஒருங்கிணைத்துள்ளது.       

மாதாந்திர சராசரி மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்து நடப்பாண்டில் 1.66 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது

ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அமலாக்கத்திற்கு பிறகு மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாய் (மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை உட்பட) 1.22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக்கத்திற்கு முந்தைய காலத்தில் (2012-13 முதல் 2015-16 வரை) 0.72 லட்சம் கோடியாக  இருந்தது.

94 சதவீத தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அமலாக்கம் குறித்து சாதகமான எண்ணங்களை கொண்டுள்ளனர்.

விநியோக சங்கிலியை மேம்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமைந்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரின் சுமைகளை குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி இணக்க நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறைவான சரக்குப் போக்குவரத்து கட்டணம் மற்றும் வரிகள்  சரக்கு மற்றும் சேவைகளுக்கான விலைகள் குறைய உதவியதுடன், நுகர்வோருக்கும் பயனளிப்பதாக அமைந்துள்ளது.

சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் வரி சீர்திருத்தத்திற்கான முயற்சிகள்

2013-14-ம் நிதியாண்டில் 2.2 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரியில்லை என்ற நிலையில் இருந்து தற்போது 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்திற்கான அனுமானத்தின் அடிப்படையில் செலுத்தப்படும் வருமான உச்சவரம்பு 2 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை சார்ந்த வருமானத்திற்கு அனுமானத்தின் அடிப்படையிலான உச்சவரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிதாக  ஏற்படுத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரிசெலுத்துவோரின் சேவைகளின்  சாதனைகள்

வருமான வரி அறிக்கை மீதான மதிப்பீட்டு காலம் 2013-14ம் நிதியாண்டில் சராசரியாக 93 நாட்களாக இருந்த நிலையில் தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வரி மதிப்பீடுகளில் சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில், நேரடி மதிப்பீடு  மற்றும் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

வருமான வரி அறிக்கைக்கான படிவங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், 26AS படிவத்தின் புதிய வடிவம் மற்றும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான முன்கூட்டி நிரப்பப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்.

இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் குறைந்த காலத்தில் விடுவிப்பதற்கு ஏதுவாக  சுங்கத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள்.

உள்நாட்டு கொள்கலன் நிலையங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம்  71 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது (47 சதவீதம்)

விமான சரக்கக வளாகங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 44 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது (28 சதவீதம்)

துறைமுகங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 85 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது( 27 சதவீதம்)

பொருளாதாரதம் -தற்போதையை மற்றும் எதிர்கால நிலை

2015-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் சீரமைக்கப்பட்டு, சரியான நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருந்தது. இந்த தருணத்தில்;

முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்,

 மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை கட்டமைப்பதற்கான ஆதரவு அளிப்பது

 மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“தேசமே முதலில்” என்ற  வலுவான நம்பிக்கையுடன் அரசு வெற்றிப்பெற்றுள்ளது

 2014-ம் ஆண்டு வரை இருந்த நிலை மற்றும் தற்போது இருந்த நிலை குறித்து தெளிவாக காணமுடியும்- நிதியமைச்சர்

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.  இடைக்கால மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு; 2023-24 நிதியாண்டை விட 4.72% அதிகம்

தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், தற்சார்பு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இரட்டை நோக்கத்துடன், பாதுகாப்பு பட்ஜெட் 2024-25 நிதியாண்டில் ரூ .6,21,540.85 கோடியை எட்டியுள்ளது. இது பிப்ரவரி 01, 2024 அன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மொத்த மத்திய பட்ஜெட்டில் 13.04% ஆகும்.

அமைச்சகங்களில் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து அதிக ஒதுக்கீட்டைப் பெற்று வருகிறது. 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டை விட சுமார் ஒரு லட்சம் கோடி (18.35%) அதிகமாகவும், நிதியாண்டு 2023-24 ஒதுக்கீட்டை விட 4.72% அதிகமாகவும் உள்ளது. இதில், 27.67% மூலதன செலவினங்களுக்காகவும், 14.82% வாழ்வாதாரம் மற்றும் செயல்பாட்டு தயார்நிலைக்கான வருவாய் செலவினங்களுக்கும், 30.68% ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கும், 22.72% பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கும், 4.11% பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சிவில் அமைப்புகளுக்கும் செல்கிறது.

'தற்சார்பை ஊக்குவிக்கும் பாதுகாப்பு மூலதன செலவினங்களில் மேல் நோக்கிய போக்கு தொடர்கிறது.

உயர்த்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு, ஆயுதப் படைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் அபாயகரமான ஆயுதங்கள், போர் விமானங்கள், கப்பல்கள், தளங்கள், ஆளில்லா விமானங்கள், சிறப்பு வாகனங்கள் போன்றவற்றை வழங்க உதவும்.

ஒதுக்கீட்டின் பெரும்பகுதி உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு பயன்படுத்தப்படும், இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆயுத அமைப்பை நாட்டிற்கு வழங்கும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும், மூலதன உருவாக்கத்தை உறுதி செய்யும் மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்திற்கு ஒரு தூண்டுதலை வழங்கும்.

வருவாய் செலவினத்தின் கீழ் செயல்பாட்டு தயார்நிலைக்கு உயர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பளம் தவிர வருவாய் செலவினங்களுக்காகவும், விமானம், கப்பல்கள் உட்பட அனைத்துத் தளங்களையும் பராமரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு ஓய்வூதிய பட்ஜெட் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 32 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஸ்பார்ஷ் மூலமாகவும், இதர ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகள் மூலமாகவும் மாதாந்திர ஓய்வூதியமாக இந்தத் தொகை செலவிடப்படும்.

முன்னாள் படைவீரர்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்யும் முன்னாள் படைவீரர் நலத் திட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அச்சுறுத்தல் உணர்வை எதிர்கொண்டு வரும் நிலையில், எல்லை சாலைகள் அமைப்புக்கான மூலதன பட்ஜெட் ஒதுக்கீட்டில் தொடர்ந்து அதிகரிப்பு காணப்படுகிறது. 2024-25க்கான ஒதுக்கீடு ரூ.6,500 கோடி, இது நிதியாண்டு 2023-24க்கான ஒதுக்கீட்டை விட 30% அதிகமாகவும், நிதியாண்டு 2021-22 ஒதுக்கீட்டை விட 160% அதிகமாகவும் உள்ளது. எல்லைப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.

இந்திய கடலோர காவல் படை தலைமையிலான பல்நோக்கு சேவையை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் தற்சார்பின் அவசியத்தை பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கான (DRDO) பட்ஜெட் ஒதுக்கீடு 2023-24 நிதியாண்டில் ரூ.23,263.89 கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ .23,855 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில், பெரும் பங்கு ரூ.13,208 கோடி மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் டிஆர்டிஓவை நிதி ரீதியாக வலுப்படுத்தும்.

ராஜ்நாத் சிங் பாராட்டு

நம்பிக்கையான, வலுவான மற்றும் தற்சார்பு கொண்ட 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும். நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் 'இடைக்கால பட்ஜெட்'-ஐ தாக்கல் செய்ததற்காக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றத்தின் ஒரு பார்வையை இந்த பட்ஜெட் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, கட்டுமானம், உற்பத்தி, வீட்டுவசதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு பெரிய உந்துதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். "கொவிட் -19-ன் போது, உலகம் தடுமாறிக் கொண்டிருந்தபோது, இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்தது. இந்த பட்ஜெட் பிரதமரின் 'பஞ்சாமிர்த இலக்குகளுடன்' சரியாக ஒத்துப்போகிறது. மேலும் இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னோடியில்லாத வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது, "என்று அவர் கூறினார்.

மூலதன செலவின ஒதுக்கீடு அதிகரிப்பு குறித்து பேசிய திரு ராஜ்நாத் சிங், 2027 வாக்கில் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு இது ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்