தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்கச்செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவனைக் கைது செய்தனர்.
விசாரணையில் செட்டிபாளையம் பகுதியில் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்ததால். கைது செய்யப்பட்ட சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
பின்னர் சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
கருத்துகள்