ஹிமாச்சல் பிரதேச விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மூளை பாகம் கிடைத்தது, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,
ஹிமாச்சல் விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மூளை உள்ளிட்ட உடல் பாகங்கள் கிடைத்ததால் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு காவல்துறை அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.
ஹிமாச்சல பிரதேசத்துக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கோபிநாத்துடன் சுற்றுலா சென்றார். பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகிலிருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.
சைதை துரைசாமி மகன் வெற்றியை மட்டும் காணாமல் தேடும் பணியில் கடந்த 3 நாட்களாக அந்த மாநிலக் காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், பகுதிப் பழங்குடியின மக்கள் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான வாகனத்தின் சில பகுதிகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள், மூளை உள்ளிட்ட உறுப்புகள் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்தார். மேலும், பழங்குடியின மக்களைச் சந்தித்து மகனை மீட்க உதவுமாறும் கோரிக்கை வைத்தார். ஹிமாச்சல் பிரதேசத்திற்கு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர் கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்த போது இவர்களுடைய கார் நேற்று முன் தினம் மாலை விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் காரில் பயணம் செய்த திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும் காணவில்லை. அதையடுத்து இந்த விபத்துக் குறித்து ஹிமாச்சலப் பிரதேச. காவல்துறையினர் சென்னைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இமாச்சல் பிரதேச போலீஸார் வெற்றியை தேடி வருகிறார்கள்.
எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். சென்னைக்கு 48 ஆவது மேயராக சைதை துரைசாமி 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் ஆவார் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி எ நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி்த் தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்துகிறார். பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சிக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்குமிடம், உணவையும் சைதை துரைசாமி வழங்கி பயிற்சியையும் இலவசமாகவே வழங்குகிறார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில் அவர் 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்துதஹ தான் அவர் மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. சைதை துரைசாமி மனைவி மல்லிகா வெற்றி என்ற மகனும் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இநத் திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு வருமான வரித் துறை 40 இடங்களில் சோதனை நடத்தியதில் வெற்றியின் வீடும் அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது.வெற்றி என்றாவது ஒரு நாள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் எடுக்கப்பட்டது. இதில் விதார்த், ரம்யா நம்பீஸன் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி இயக்கிய படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. அவர் தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாடமியையும் கவனித்து வருகிறார்.
கருத்துகள்