மதுரை கே.கே.நகர் வித்யா காலனி தமீம் அன்சாரி, (வயது 57); பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரியாகும் அவரது வீட்டில் போதைப்பொருட்கள் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்து.
நேற்று மதியம், நடத்தப்பட்ட சோதனையில் மாவு மற்றும் திரவ வடிவிலான 20 கிலோ பொருட்களைப் பறிமுதல் செய்து, ஆய்விற்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
அது குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது:
தமீம் அன்சாரிக்கு சென்னை அன்பு நண்பர். சமீபத்தில் மதுரை வந்த அன்பு, 'கெமிக்கல்' எனக்கூறி போதைப்பொருளை வைத்துவிட்டு சென்றதாக தமீம் அன்சாரி தெரிவிக்கிறார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் 'மொத்தமும் பெட்டமைன்' மாதிரி தெரிகிறது. அதன் சர்வதேச மதிப்பு 1 கிலோ 5 கோடி ரூபாய். அன்பு என்பவனைத் தேடி தனிப்படை சென்றுள்ளது
பள்ளி மாணவர்களையும் சீரழிக்கும் இந்தப் போதைப் பழக்கம் மிகப் பெரிய சமூகப் பிரச்சனைகளைக் கொண்டுவரும். ஏற்கனவே போதை பழக்கம் காரணமாக ஒரு சில அமெரிக்க நகரங்கள் வாழத் தகுதியில்லாத இடங்களாக மாறி பெருத்த சமூக பிரச்சனையையும் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
நாம் பொருளாதாரத்தில் முன்னேறுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் சமூகத்தின் சட்ட ஒழுங்கைப் பேணுவதாகும் போதை வஸ்து கடத்தலை அடியோடு ஒழிக்க வேண்டும்.
மேலும் மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறை சோதனை மேற்கொண்டதில் பயணி ஒருவரிடம் மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு. அவரிடமிருந்து 30 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பல கோடி மதிப்பை பெறும் எனக் கூறப்படுகிறது.போதைப்பொருள் கொண்டுவந்த நபரைக் கைது செய்து காவல்துறை விசாரிக்கையில், அவர் சென்னையைச் சேர்ந்த சிலமன் பிரகாஷென்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள்