தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கவலைக்கிடம்
தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்
கணேசமூர்த்தியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குப் பின்னர் தான் உடல்நிலை பற்றி எதுவும் கூற முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த தகவல் வெளியானது. வைகோவின் மதிமுகவைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். குறிப்பாக மதிமுக சார்பில் ஈரோட்டில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 தேர்தலில் ஈரோடு தொகுதியில் தோல்வியடைந்தார்.இருப்பினும் 2019 தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டார். மீண்டும் மதிமுக வேட்பாளராக களமிறங்கிய கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது வயது 77.இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தயாரானார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படுமென நினைத்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடுக்குப் பதில் திருச்சிராப்பள்ளி தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு வைகோ மகன் துரை வையாபுரி போட்டியிடுகிறார்.
ஈரோடு தொகுதி கிடைக்காததால் கணேச மூர்த்தி மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி திடீரென்று கணேசமூர்த்தி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். வீட்டிலிருந்த சல்பாஸை தண்ணீருடன் சேர்த்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து அவர் கோயம்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கணேசமூர்த்தியின் உடல்நலம் குறித்து மதிமுக நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கேட்டு அறிந்து வருகின்றனர். மேலும் கணேச மூர்த்தியின் இந்த செயல் என்பது மதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரானவர் அக்கட்சியின் பொருளாளராக பதவி வகிக்கிறார். 1978- ஆம் ஆண்டில் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர் பின்னர் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். 1993 ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். மறுமலர்ச்சி திமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த இவர் 2016 முதல் மறுமலர்ச்சி திமுக பொருளாளராக உள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 2009, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்றவர்திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதிலும் எம்பி கணேசமூர்த்தி வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் கணேசமூர்த்தி மூர்த்தி தீடிரென மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அடுத்த 48 மணிநேரத்துக்கு பின்பு தான் உடல்நிலை பற்றி எதுவும் கூற முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் பொதநீதி யாதெனில் கட்சியில் இருக்கும் பலருக்கும் இதுவரை வாய்ப்புக் கிட்டியது இல்லை ஆனால் இவர் மூன்று முறை வாய்ப்பு பெற்ற நிலையில் தற்கொலை முயற்சி என்று பார்த்தால் அது அக் கட்சி ஜனநாயகத்தை காத்தது.. இனி அந்த வாய்ப்பை யாரும் பெறலாம்.
கருத்துகள்