பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதுகளை வழங்கினார்.
கீழ்க்கண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்:
பி.வி.நரசிம்மராவ் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த பி.வி.நரசிம்மராவ் சார்பாக, பாரத ரத்னாவை அவரது மகன் திரு பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த சௌத்ரி சரண் சிங் சார்பில் அவரது பேரன் திரு ஜெயந்த் சௌத்ரி பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் டாக்டர் நித்யா ராவ், பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.
*கர்பூரி தாக்கூர் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த கர்பூரி தாக்கூர் சார்பில், அவரது மகன் திரு ராம்நாத் தாக்கூர் பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் இல்லத்தில் 30.03.2024 அன்று நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்நிலையில் அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.பாரதிய ஜனதா கட்சியின் தலைமகன் இலால் கிருஷ்ண அத்வானி அவர் வாழும் காலத்திலேயே "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது தான் மிகச் சிறப்பு.
பாரதிய ஜனதா கட்சியினர் சிலரது பாஷையில் சொல்வதென்றால்.கட்சியில் இன்று உயர் பதவிகளில் மிடுக்காக வலம் வரும் பலருக்குத் தெரியும்... அது அவர்களுக்கு அத்வானி இட்ட பிச்சை என்று...
அத்வானி ஆசியில் உயர்ந்தவர்கள் ஓராயிரம் பேருக்கு மேல் உண்டு. ஆனால் வீழ்ந்தவர் ஒருவர் கூட கிடையாது. அது தான் அவரது மகா சிறப்பு.
இந்த நேரத்தில்
சிறுவயதில் நான் கேட்ட ஒரு நீதிக் கதையின் சாரமும் ஏனோ நினைவுக்கு வருகிறது.
தன்னை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்க்கு அவர்கள் வீழும் போது தான் அந்த ஏணியின் மகிமை புரியும்.
தன்னை எட்டி உதைத்தவரை ஒருவேளை அந்த ஏணி மறக்கலாம்.
மன்னிக்கலாம். ஆனால் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்க்கு இறைவனின் இறுதித் தீர்ப்பில் மன்னிப்பு கிடையாது.
கருத்துகள்