கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீன குருமகாசந்நிதானம் நம் மீது அன்புடையவர்கள்
திருக்கோவில்களில் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் காணும் போதெல்லாம் நலம் விசாரிப்பார்கள். அவர்கள் பரிபூரணம் அடைந்தது சமூகத்தில் பலருக்கும் இழப்பாகும், அண்ணாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் பிரார்த்திக் கிறோம் கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் குருமகாசன்னிதானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருமேனி பரிபூரணம் செய்யப்பட்டது, இரண்டாம் குருமகாசன்னிதானமாக சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தற்போது
பொறுப்பேற்றுக்கொண்டார்,பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலாகக் குரல் கொடுத்தவர்.
ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர்.
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (வயது 55) உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டெல்லியில் நடந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவில் காமாட்சிபுரி ஆதீனமும் கலந்து கொண்டார். விழாவில் பிரதமரிடம் செங்கோல் வழங்கிய போது ஆசி வழங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துக் கூறுகையில், கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பங்கு கொண்டு பிரதமருக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர். சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனக் கூறினார். தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆதினங்கள் சைவப் பிள்ளைகள் தான் சிவலங்கேஸ்வர சுவாமிகள் இறுதி ஊர்வலத்தில் கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிகமான அகமுடையார் சமூகத்தவர்கள் கலந்து கொண்டுள்ளது தெரிகிறது.
கருத்துகள்