முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத்தலைவர் 2024 பத்ம விருதுகளை.வழங்கினார்

2024 பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்


குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு  ஏப்ரல் 23 முதல் 24 வரை உத்தராகண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 23 ஆம் தேதி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அன்று மாலை ரிஷிகேஷில் நடைபெறும் கங்கா ஆரத்தியில் அவர் பங்கேற்கிறார்.


ஏப்ரல் 24 அன்று, டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் இந்திய வனப் பணி (2022 தொகுப்பு) பயிற்சி அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.கலைத்துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திற்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது


திரு ஆர்.என்.ஜோ டி குரூஸ், திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம் ஆகியோர் முறையே இலக்கியம், கல்வி மற்றும் கலைத் துறைகளில் சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றனர்
கலைத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பத்ம விபூஷண் விருது வழங்கினார். திரு ஆர்.என்.ஜோ டி குரூஸ், திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம் ஆகியோருக்கு முறையே இலக்கியம், கல்வி மற்றும் கலைத் துறைகளில் சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் பணி பற்றிய விவரங்கள் வருமாறு-

1.  டாக்டர் பத்மா சுப்பிரமணியம்

டாக்டர் பத்மா சுப்பிரமணியம், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பரதநாட்டியக் கலைஞர், நடன இயக்குநர், ஆராய்ச்சியாளர், பாடகர், இசையமைப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர் ஆவார்.பிப்ரவரி 4, 1943-ல் பிறந்த இவர், தனது தந்தையால் 1942-ல் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனமான நிருத்யோதயாவின் தலைவராக உள்ளார். ஆசிய கலாச்சாரத்திற்கான பாரத இளங்கோ அறக்கட்டளையின் (பி.ஐ.எஃப்.ஏ.சி) நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலராகவும், புதுதில்லி இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (ஐ.ஜி.என்.சி.ஏ) அறங்காவலராகவும் உள்ளார்.

பாரதிய சாஸ்திரிய நடனத்தின் வரலாறு, கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியை முதன்முதலில் நிரப்பியவர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம். பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட "இந்திய நடனம் மற்றும் சிற்பக் கலைகளில் கரணங்கள்" குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நடனக் கலைஞர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவரது ஆராய்ச்சி, ஒரு தனித்துவமான கற்பித்தலுடன் தனது சொந்த நடன பாணியை உருவாக்க வழிவகுத்தது.  அதற்கு இவர் பரதநிருத்யம் என்று பெயரிட்டார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் பிராந்திய பாரம்பரிய நடன வடிவமான தேசி அங்கீகரிக்கப்பட்டாலும், இவரது படைப்பு,  மார்கம் அல்லது பாரதமுனி வகுத்த பாதை என்று அழைக்கப்படும் நுட்பத்தில் பொதுவான பாரதிய பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியாக இருந்தது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது சங்கராச்சாரியாரான காஞ்சி மகாசுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தி கொண்டிருந்த இவர், பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சமநிலையுடன் நோக்குவதும், தன்னலமற்ற தேசியம் என்ற தனது பார்வையில் உறுதியாக இருப்பதும் இவருக்கு அளப்பரிய வலிமையை அளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் இவரை "ஆக்கபூர்வமான கிளர்ச்சியாளர்" என்று குறிப்பிட்டார். இந்தியக் கலாச்சாரத்தின் மீதான இவரது உறுதியான பற்றுதலை இவரின் படைப்புகள் மற்றும் எழுத்துக்களில் காணலாம். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, காஷ்மீரி போன்ற மொழிகளை உள்ளடக்கிய வேதம் முதல் சுதந்திரப் போராட்டம் வரை, வேதாந்தம் முதல் காதல் கவிதைகள் வரை தனது அனைத்து நடனத் தயாரிப்புகளுக்கும் இவர் இசையமைத்துள்ளார். இவர் பல புத்தகங்களை எழுதியிருப்பதுடன் சில பல்கலைக்கழகங்களுடன் தொடர்பில் உள்ளார். 1992-ம் ஆண்டில் தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்ட இவரது தொலைக்காட்சித் தொடரான "பாரதிய நாட்டிய சாஸ்திரம்", பாரதத்தின் பொதுவான கலாச்சார வேர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐ.ஜி.என்.சி.ஏ தயாரித்து, விடுதலையின் அமிர்தப் பெரு விழாவின் போது வெளியிடப்பட்ட 10.5 மணி நேர ஆவணத் தொடரான "கரண உஜ்ஜீவனம்" மூலம் இவர் தனது முழு ஆராய்ச்சிப் பணிகளையும் தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளார்.

காஞ்சி மகாசுவாமிகள் விருப்பத்தின் பேரில் மகாராஷ்டிராவின் சதாராவில் கட்டப்பட்ட உத்தர சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கான கரண சிற்பங்களில் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் வடிவமைப்புகள், இந்தோனேசியாவின் பிரம்பானனில் உள்ள சிவன் கோவிலில் இவர் கண்டுபிடித்த 9-ஆம் நூற்றாண்டு சிற்பங்களுடன் ஒத்துப்போகின்றன. இது ஆசிய கலாச்சாரத்திற்கான பாரத இளங்கோ அறக்கட்டளை (பி.ஐ.எஃப்.ஏ.சி), ஆசிய ஆராய்ச்சி மையத்தை நிறுவ இவருக்கு உத்வேகம் அளித்தது, இதில் பரதமுனிக்கு ஒரு நினைவு ஆலயம், ஆசிய நிகழ்த்துக் கலைகளின் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அகாடமி ரத்னா உள்ளிட்ட 150-க்கும் அதிகமான விருதுகளை டாக்டர் பத்மா சுப்பிரமணியம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, மத்தியப் பிரதேச அரசின் காளிதாஸ் சம்மான் போன்று மாநில அரசுகளின் பல விருதுகளையும் பெற்றுள்ளார். "ஆசியாவில் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியில் இவரது பங்களிப்புக்காக" ஜப்பானின் ஃபுகுவோகா ஆசிய கலாச்சார பரிசைப் பெற்ற ஒரே இந்திய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விப் பங்களிப்புக்காக மும்பையின் 'ஃபெல்லோ ஆஃப் ஆசியாடிக் சொசைட்டி' என்ற அங்கீகாரம் பெற்ற ஒரே கலைஞரும் இவர்தான்.

2. திரு ஆர்.என். ஜோ டி' குரூஸ்

சென்னை சசி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி / ஆலோசகரான திரு ஆர்.என்.ஜோ டி’ குரூஸ், கடந்த 35 ஆண்டுகளாக வர்த்தகக் கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். வர்த்தகக் கப்பல் துறையில் பரவலாக அறியப்பட்ட இவர், தீபகற்ப இந்தியாவில் கடலோரக் கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளார்.

1963, மே 17 அன்று ஒரு பாரம்பரிய மீனவக் குடும்பத்தில் பிறந்த திரு டி’ குரூஸ் தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலிருந்தே கடலோர இந்தியாவின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் நலனில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதோடு, கடலோர சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பணியாற்றத் தொடங்கினார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்தில் அறிவியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். கடலோர இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் என்ற அவரது ஆரம்ப முயற்சி,  இறுதியில் அவரைக் கடலோர வாழ்க்கையின் வரலாற்றாசிரியராக மாற்றியது. சாதி, இனம் மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால், தேசக் கட்டமைப்பில், தேசத்தின் முதல் தர கடலோரப் பாதுகாப்பு, சமூகங்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பிற்காக அவர்களுடன் பணியாற்றினார்.

முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் பத்தி எழுத்தாளராக, திரு டி'குரூஸின் எழுத்துக்கள் கடலோர வாழ்க்கையைச் சுற்றி அமைந்துள்ளன, இது மீனவர்களின் வளமான பாரம்பரியம் பற்றி பரவலான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் நிலையான நீலப் பொருளாதாரத்தின் ஆதரவாளர் இவர். சிந்தனைக் குழுவான பாரத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனரான இவர், இரு தரப்பினரின் நலனுக்காக இணக்கமான தீர்வுகளுக்கு கடற்கரைக்கும், அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்.

திரு டி'குரூஸ் தனது எழுத்துக்கள் மற்றும் ஆவணப்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2013 -ஆம் ஆண்டில் தனது கொற்கை புதினத்திற்காக இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். தேசிய கப்பல் வாரியம் மற்றும் கடற்பயணிகளின் தேசிய நல வாரியத்தின் உறுப்பினரான இவர், தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய கடல்சார் ஞானத்தைப் புரிந்துகொண்டு நிலையான மீன்பிடித்தல் மற்றும் கப்பல் செயல்பாடுகளில் பங்களிப்பு செய்து ஊக்கம் அளித்து வருகிறார்

3.  திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம்

திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம், புகழ்பெற்ற ஒரு நாதஸ்வர கலைஞர் ஆவார், இவர் இந்தப் பாரம்பரிய இந்தியக் கலையுடன் உலகை வளப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

1944-ம் ஆண்டு ஜூலை 7 அன்று பிறந்த திரு சிவலிங்கம், தனது 7 வயதில் தனது தந்தை திரு சேஷம்பட்டி பி.தீர்த்தகிரியிடம் பயிற்சியைத் தொடங்கினார். மேலும் அவருடன் கச்சேரிகளுக்குச் சென்றபோது, காருக்குறிச்சி அருணாசலம், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்ற சிறந்த கலைஞர்களுடன் அறிமுகமானார். கீவளூர் என்.ஜி.கணேசனிடம் பயிற்சி பெற தஞ்சாவூர் சென்றார். பின்னர் 1971 -ம் ஆண்டில் கர்நாடக இசைக் கல்லூரியில் வாத்ய விஷாரத் பட்டம் பெற சென்னை சென்றார். சென்னையில், திரு கீரனூர் ராமசாமி பிள்ளையிடம் பயிற்சி பெற்ற இவர், பின்னர் திருவாரூர் லட்சப்ப பிள்ளையிடம் இந்திய அரசு அறிஞராக  சிறப்புப் பயிற்சி பெற்றார். பாரம்பரிய முறைகளில் தேர்ச்சி பெற்ற திரு சிவலிங்கம், உண்மையான ராக ஆலாபனைகளுக்குப் புகழ்பெற்ற தனது சொந்த தனித்துவமான பாணியை உருவாக்கினார். பல தசாப்தங்களாக, இவர் ஒரு முன்னணி நாதஸ்வர வித்வானாக முக்கியத்துவம் பெற்றுள்ளார், புகழ்பெற்ற சபாக்களில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தவர்.

திரு சிவலிங்கம், தனது பண்டைய கருவியான நாதஸ்வரத்தை நியூயார்க், பிட்ஸ்பர்க், சிகாகோ, சான் டியாகோ, சிட்னி போன்ற நகரங்களிலும் இசைத்துள்ளார். மேலும், உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். பயிலரங்குகள் மூலமாகவும், கர்நாடக இசையில் சர்வதேச மாணவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலமும், இந்தியப் பாரம்பரிய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்று, டென்மார்க், சுவீடன், அமெரிக்கா, ஹங்கேரி போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

சங்கீதா, காஸ்மிக், மோசர்பேர் போன்ற நிறுவனங்களுடன் பாராட்டப்பட்ட பல இசை ஆல்பங்கள் உட்பட கணிசமான படைப்புகளையும் திரு சிவலிங்கம் தந்துள்ளார். ஏ-கிரேடு கலைஞராக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் பல மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். அகில இந்திய வானொலி போன்ற புகழ்பெற்ற அமைப்புகளுக்கான போட்டிகள் மற்றும் தேர்வுகளுக்கு நடுவராக அழைக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை உலகில் இவரது அந்தஸ்தை அங்கீகரிக்கும் வகையில் முன்னணி ஊடகங்களின் நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.

சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி, தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், மியூசிக் அகாடமியின் டி.டி.கே விருது போன்ற பல பெருமைமிகு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,