முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி சரியான வேட்பாளர் யார் என குழப்பத்தில் மக்கள்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1984 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் மாவட்டமாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டில் சிவகங்கை எனப் பெயர் மாற்றமானது.

1967 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பாக இந்தத் தொகுதியின்  திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடனை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிருந்தன.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி என மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியாகும்.


துவக்கத்தில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில், முதல் இரண்டு முறை திமுகவின் காலமான  தா.கிருட்டிணன் வெற்றி பெற்றார். பின் அதிமுக ஒரு முறை வென்றது. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற 11 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


இதில் ப. சிதம்பரம் 1984, 1989, 1991, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் 5 முறை தேசிய காங்கிரஸ் சார்பிலும், 1996, 1998 ஆகிய இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ்  சார்பிலும் களமிறங்கி வெற்றி பெற்றார். மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலைச் சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 முறை தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சிவகங்கை தொகுதியில்  2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி ப.சிதம்பரம் 5,66,104 வாக்குகளைப் பெற்று 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகள் மட்டுமே பெற்றார். அமமுக சார்பில் பேட்டியிட்ட வி.பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றார்.



இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டி இருந்த போது முதல் முறையாக கார்த்தி ப. சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.





திமுக வேட்பாளர் சுப.துரைராஜ் 2,46,608, பாரதிய ஜனதா கட்சியின்  ஹெச்.ராஜா 1,33,763 வாக்குகளைப் பெற்றிருந்தார். காங்கிரஸின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட தொகுதியில் நான்காவது இடம் தான் கிடைத்தது. கார்த்தி ப. சிதம்பரம் அந்தத் தேர்தலில் 10,4678 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

அதிமுக அல்லது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் போது அந்தக் கட்சிக்கே கொடுக்கப்பட்டதால் சிவகங்கை காங்கிரஸ் தொகுதியாக மாறிப் போனது. இந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார்

அந்த நேரத்தில் சிவகங்கையில் வங்கிகள் பரவலாகத் திறக்கப்பட்டு, மகளிருக்கு தொழில் செய்ய கடனுதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவில்லை என வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் நிலவுகிறது.

அதிமுக சார்பில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட 40 பேர் விண்ணப்பித்திருந்ததில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனின் ஆதரவாளரான கல்லல் ஒன்றியச் செயலாளரான மணல் அந்தோனியின் சகோதரர் அ.சேவியர் தாஸ்-க்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



புது முகமாக இருந்தாலும் அதிமுக மாவட்டச் செயலாளர் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியைச் செய்து வருவதாகத் தொகுதி மக்கள் கூறுகின்றனர்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் நிற்கிறார்.பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் பேசியதாவது,"தேவநாதன் என்பவர் சிவகங்கைக்குப் புதியவர் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்திருக்கிறார். நான் சிவகங்கைக்குப் புதியவன் என்றால் ஏன் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.என்னை புதியவர், வெளியூர்க்காரர் என்று விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம், எத்தனை முறை தொகுதிக்கு வந்தார் என்பது தெரியாது. உங்களை விட சிவகங்கைத் தொகுதியில் அதிகம் பயணம் செய்தவன் நான். எனது தேசிய மக்கள் கல்விக் கழகத்தில் இருந்து 2011ல் வேட்பாளர்களை நிறுத்தி சிவகங்கை, காரைக்குடி, திருமயம் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் பெற்றேன்.இது ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடக்கின்ற தேர்தல். இதில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். சிவகங்கை தொகுதியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட எந்த ஒரு பணியையும் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்படுத்தவில்லை.அதேபோல்தான் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை, இருவரும் ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றிவிட்டனர்" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், மகளிர் உரிமைத் தொகை குறித்து கொச்சைப்படுத்தியும் பேசியுள்ளார்.அதேபோல், அமைச்சராக உள்ள பொன்முடி 'ஓசி பஸ்' என பெண்களை கொச்சைப்படுத்தி பேசினார். இந்த திட்டங்களுக்கான பணத்தை கோபாலபுரம் வீட்டை அடகு வைத்து செய்தீர்களா? இது மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம்.திமுக ஆட்சியில் தமிழகம் கஞ்சா உள்ளிட்ட போதைகளில் திளைத்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை அதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் கஞ்சா பறிமுதல் என்ற செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழை வளர்க்கிறோம் என்று கூறி அழித்து வருகின்றனர்" என்றார்.



1995 ல தேவநாதன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் இவர் கன்சிராமிடம் பணி செய்து வந்தார் பின்னர் அவர் காலமான நிலையில் தமிழ்நாட்டில் சொத்துகள் குவித்தது வரலாறு ஒரு தனிக்கதை

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் கடலூர்,திருவண்ணாமலை, திருநெல்வேலி என பல இடங்களில் கடந்த காலத்தில் வசித்தாலும் தற்போது சென்னையில் வசப்பவ்ர், தனியாக ஓர் அரசியல் அமைப்பை வைத்திருப்பவர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.




இந்த முறை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் மீது வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பார்வை மக்கள் மத்தியில் இருக்கிறது. உள்ளூரில் திமுக அமைச்சர்கள் இருவர் யாதவர் சமூகத்நவர்கள் என்ற பார்வை உள்ளது,

சிவகங்கைத் தொகுதியில் 15 வது முறையாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் மீண்டும் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.




 அதிமுக சார்பில் கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர் தாஸ், தனித்துக் களமிறங்குகிறார் இவர் மணல் மாஃபியா அந்தோனி தம்பி ஆவார் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் பணம் மணல் மூலம் சம்பாதித்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இவரது போட்டி இந்தத் தொகுதியின் உள்ள நிலையில் இவர் பிரிக்கப்போகும் சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கு இழப்பு ஆகும். நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார்.

இதில் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே தான் கடுமையான போட்டி தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் அதிமுக என இருமுனைப் போட்டியாகவே களம் இருக்கிறது. சிவகங்கை காங்கிரஸில் இருக்கும் பலருக்கு கார்த்தி ப.சிதம்பரத்தின் செயல்பாட்டில் உடன்பாடில்லை. "அவர் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தொடர்ச்சியாக எப்படி சீட் வழங்கலாம்" என எதிர்ப்புக் குரல் இருந்தது வரும் சூழலில்.


வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன், கங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி காங்கிரஸ் தலைமைக்கு கார்த்திக் ப.சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர்.



அதேபோல், திமுக சார்பிலும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே சிவகங்கைத் தொகுதியைக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டனர். ஆனால் காங்கிரஸ், திமுக-வினரின் எதிர்பார்ப்பை மீறிக் கொடுத்திருப்பதால் எப்படி வேலை செய்து வாக்கை வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர் முத்திரையர் பட்டியல் பிரிவினர், உடையர், சிறுபான்மையினக் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் சமூக வாக்குகள் இருக்கின்றன. அதில் உயர் ஜாதி இந்துக்கள் என்று பார்த்தால் அது பாஜக பக்கம் சென்று விடும் காரணம் அது பிரதமர் தரப்பு வாக்குகள்,


அதிமுக சார்பில் சேவியர்தாஸ் முக்குலதோர் சமூகத்தைச் சேர்ந்த மதம் மாறிய கிருஸ்தவர், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாஜக எதிர்ப்பு வாக்குகளும், கார்த்தி ப. சிதம்பரம் எதிர்ப்பு வாக்குகளும் அதிமுகவை நோக்கிச் செல்லும். அதோடு அதிமுக வேட்பாளர் தரப்பு பணம் செலவு செய்து வரும் நிலையில் அதுவும் சில வாக்குகள் பெற்றுத்தரும் கருவிகளாகும்

அமமுக ஆதரவு வாக்குகள் மட்டுமே பாஜகவிற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இதனால் காங்கிரஸ் அதிமுக-விற்கு இடையே கடுமையான போட்டி சிவகங்கையில் இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.

சிவகங்கையில் இருக்கும் வாக்காளர்களிடம் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்தால்.

காங்கிரஸ்_பாஜக.குறித்து ஒருவார்த்தை கூட ஒருவரும் பேசவே இல்லை.

மாறாக,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,உதயநிதி ஆகியோரை ஊழல் ஆட்சி என திட்டித் தீர்த்தனர். 

அதேபோல் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் அடிமை நிலை சோதனைகளை எடுத்துக்கூறினார்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று முன்தினம் மாலை 8.00 மணியளவில் காரைக்குடி ஹவுசிங் போர்டு வி.ஏ.ஓ காலனி திடலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் அ.சேவியர்தாஸை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து. 

மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.,

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக காரைக்குடிக்கு கழக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு இரவு சுமார்_8 மணியளவில் வருகை தந்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கழக அமைப்புச்செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரும் வந்தார் இருவர் அரசியலும் அந்தோனி தம்பி சேவியர்தாஸுக்கு உதவும் ,

பாஜக.வுடன் கூட்டனி வைத்துக்கொள்ளாமலேயே துணிச்சலாக போட்டியிடும் எடப்பாடியின் போக்கை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தான் காணலாம் பலரும் சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் பற்றி விவாதிக்க. இவருக்கு 

304 கோடி சொத்தில் 98 கோடி கடன் இருக்காம், சொத்தை கொடுக்காமல் ஏமாற்றிய வழக்கு கூட இருந்திருக்கிறதாம். அப்போ இவர் CMD யாக இருக்கும் நிறுவனத்தில் 300 கோடி முதலீடு செய்த மக்களுக்கு பயம் வருவது நியாயம் தானே..!

சிவகங்கை தொகுதியில் எந்த வேட்பாளர் மீது என்ன வழக்கு இருக்கு என்த் தெரிந்து கொள்ள வேண்டும் வாக்காளர்கள் அணைத்து தரப்பும், அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும்   சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரம் 1984, 1989, 1991, 1996, 1998,, 2004, 2009 ஆகிய ஆண்டுகள் என ஏழு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும்... 2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும் மொத்தம் உங்கள் குடும்பமே 8 முறை. கார்த்தி ப.சிதம்பரம் தந்தை காங்கிரஸ் ஆட்சியில் நிதித்துறை, உள்துறை அமைச்சர் என இருந்தும். ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர் அவர் தொகுதியை அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து எவ்வளவு உயர்வாக வைத்து இருக்கிறார்.

அத்தனை பெரிய அதிகாரங்களை வைத்து இருந்த ப.சிதம்பரம் கடைக்கண் பார்வை சிவகங்கை தொகுதியின் மீது பட்டிருந்தாலே இந்நேரம் சிவகங்கை தொகுதி ஒரு குட்டி சிங்கப்பூராகவே வளர்ச்சி அடைந்திருக்கும். வேலை வாய்ப்பு இல்லாமல் அதிகமான இளைஞர்கள் குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டை இளைஞர்கள் அதிகமாக சிங்கப்பூரில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் நிலை. குடிப்பதற்கு பல கிராமங்களில் குடிநீர் வசதி இல்லை... நல்ல சாலைகள் இல்லை... படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை குறிப்பாக தொழிற்சாலைகள் இல்லை... உங்களுக்கு வாக்களித்து வாக்களித்து சிவகங்கை தொகுதி மக்களின் ரேகை தேய்ந்தது தான் மிச்சம். அதனால்.கார்த்தி ப.சிதம்பரம் இந்த முறை மீள வாய்ப்பில்லை   இதில் பொதுவான நீதி யாதெனில் நடப்பது மக்களவை தேர்தல் இது பாரதப் பிரதமரை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல்.

ஒன்று மோடி அணி மற்றவை கார்கே அணி;  இதற்கு இடையில் அதிமுக  யாருக்கு ஓட்டு கேட்கிறது என்ற வினா உள்ளது.

கடலில் கரைத்த பெருங்காயமாக தமிழக மக்கள் இலைக்கு வாக்கு செலுத்துவது குறித்து சிந்திக்கிறார்கள் 

சிந்திப்பீர்! இல்லை சிதைத்து விடுவீர். மக்கள் முடிவு தான் அவர்களின் விடிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்