விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானார் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் காலமானார். நேற்று முதலமைச்சர் கலந்து கொண்ட விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி. 71 வயது. கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது மேடையிலேயே மயங்கி விழுந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. புகழேந்தி கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தகவல் சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து மருத்துவக் குழு விரைந்தது. காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து திமுகவினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
இவருக்கு நீண்ட காலமாக குடல் பிரச்சனைக்கும், கல்லீரல் தொடர்பான பிரச்சனைக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. மார்ச் மாதம் 21ஆம் தேதி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். அதன் பிறகு இவரது உடல்நிலை மோசமாகியுள்ளது.அதன் பிறகு தான் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று முதல்வர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகவே சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளிப்பதற்கு வரை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்த புகழேந்தி. அங்கு திமுக கிளைச் செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கி. பின்னர் மாவட்டப் பொருளாளராகி, தற்போது தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தார்.
2019 ஆம் ஆண்டு விக்ரவாண்டி இடைத்தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவரின் மரணம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்