இராயல் தாய் கடற்படைத் தளபதி அட்மிரல் அடூங் பான்-இயாம் வருகை
2024 ஏப்ரல் 01 முதல் 03 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ராயல் தாய் கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் அடூங் பான்-இயாம், 2024, ஏப்ரல் 01 அன்று புதுதில்லியில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாருடன் கலந்துரையாடினார். கடல்சார் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, பயிற்சி பரிமாற்றத் திட்டங்கள், தகவல் பகிர்வு ஆகியவை குறித்த விவாதங்கள் இதில் மையமாக இருந்தன.
முன்னதாக தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அட்மிரல் அடூங் பான்-இயாம் இன்று மலர் வளையம் வைத்தார். இதைத் தொடர்ந்து புதுதில்லி சவுத் பிளாக்கில் இந்திய கடற்படையின் வழக்கமான அணிவகுப்பு மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்டார்.
பாதுகாப்புப் படைகளின் தலைவர், விமானப் படைத் தலைவர், பாதுகாப்புத் துறை செயலாளர், தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, அட்மிரல் அடூங் பான்-இயாம் புதுதில்லியில் இந்திய பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, கப்பல் கட்டுமானத்தில் தற்போதைய போக்குகளை ஆராயவும், இந்தியாவில் கப்பல் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு உள்ளிட்ட எதிர்கால வாய்ப்புகளை அடையாளம் காணவும் இந்தியக் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் அமர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ராயல் தாய் கடற்படை தலைமைத் தளபதியின் இந்திய வருகை வலுவான இருதரப்பு உறவுளகள் மற்றும் இரு கடற்படைகளுக்கு இடையேயான நீடித்த நட்புறவுக்கு ஒரு சான்றாகும்.
கருத்துகள்