இராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து
இராம நவமி விழாவையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ராம நவமி விழாவையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், "ராம நவமி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீ ராமர் பிறந்த புனித தருணத்தில் கொண்டாடப்படும் ராம நவமி, உண்மை மற்றும் நீதியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது. மதிப்புமிகு புருஷோத்தம் பிரபு ஸ்ரீ ராம் பணிவு, மனோபலம் மற்றும் துணிவின் கொள்கை கொண்டவர். பகவான் ஸ்ரீ ராமர் தமது உபதேசங்களுக்கு ஏற்ப தன்னலமற்ற சேவை, நட்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தார்.
பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள் மூலம், ராம ராஜ்யம் என்ற கருத்துக்கு ஏற்ப, அனைவரும் கண்ணியத்துடன் வாழும் ஒரு நாட்டை உருவாக்க உறுதியேற்போம் என்று கூறியுள்ளார் மேலும் இராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ராமரின் வாழ்க்கை நீதி, ஒருமைப்பாடு மற்றும் சகிப்புத்தன்மைக்கு காலத்தால் அழியாத உதாரணமாக விளங்குகிறது. அவரது கொள்கைகள் பலருக்குப் பல யுகங்களாக வழிகாட்டியுள்ளன; நல்லொழுக்க வாழ்க்கையை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இன்று ராமபிரான் ஏற்றுக்கொண்ட நிலைபேறுடைய மாண்புகளை நாம் சிந்தித்து, அவர் காட்டிய பாதையில் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.
வளமான மற்றும் வலுவான பாரதத்தை உருவாக்க நாம் உறுதியுடன் பணியாற்றும் அதே வேளையில், ஸ்ரீ ராம பிரானின் நிலைபேறுடைய கொள்கைகளால் நமது வாழ்க்கை வழிநடத்தப்படட்டும்.
இன்று ஸ்ரீ ராமநவமி. சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் நவமி திதியில் ஸ்ரீராமபிரான் அவதாரம் செய்தார். மட்டுமல்ல, அவர் பட்டாபிஷேகம் செய்ததும் சித்திரை மாதம் தான்.. சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் “கரந்து எங்கும் பரந்து உளன்’’ என்பது போல், எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். ஸ்ரீராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவக்கிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது, அவதரித்தார். ஸ்ரீராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால், அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஸ்ரீராமபிரானைப் போலவே அவரது ஜாதகத்தை வைத்து வழிபடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. ஸ்ரீராம ஜெயம்
கருத்துகள்