மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வரை உள்ள மொத்தம் 45.85 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது.
அதற்கு 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் (NHAI) கீழ் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. தற்போதுள்ள சாலையில் மேலூரிலிருந்து காரைக்குடி வரை செல்ல ஒரு மணி நேரம் 10 நிமிடங்களாகிறது.மேலூரிலிருந்து பிள்ளையார்பட்டி வரையிலான 36 கிலோமீட்டர் தூரத்திற்கு
புதிதாக நிலம் கையகப்படுத்தி கிரீன்ஃபீல்டு (Greefield) வகையிலான சாலையாக கட்டமைத்து வருகின்றனர். பிள்ளையார்பட்டியிலிருந்து காரைக்குடி வரையிலான 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே இருக்கும் சாலையை (Brownfield) அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
மேலூரிலிருந்து காரைக்குடி வரையிலான நான்கு வழிச் சாலை திட்டத்தில் 9 பெரிய பாவங்களும், 19 சிறிய பாவங்களும், 22 சுரங்க வழி குறுக்குச் சாலைகளும் அமையவுள்ளன. மேலும் ஓய்வெடுக்கும் பகுதி 1, ட்ரக்குகள் நிறுத்துமிடம் 4, பேருந்து நிறுத்துமிடம் 2, பேருந்து நிழற்கூடங்கள் 16 என அமைக்கப்படுகின்றன. தற்போது வரை 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்