தமிழ் வருஷம் வானியல் மற்றும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலப்பகுதியாகும்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி நேரம் 11 நிமிடம் 41 நொடிகளாகின்றன. இதுவே தமிழ் வருடத்திலும் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு மீன ராசியில் இருந்து வெளியேறும் போது முடிவடைகின்றது.சித்திரை (சைத்ர) மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கருத்தாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இது புதிய துவக்கங்களுக்கு மிகவும் நல்ல நேரமாகும். இந்த நாளில், சிவபெருமான் தாண்டவம் எனப்படும் பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்தினார், இது படைப்பின் துவக்கத்தைக் குறிக்கிறது. எனவே புத்தாண்டு புதிய துவக்கங்களின் கொண்டாட்டமாகும் சித்திரை மாதம் தமிழர்கள் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களில் வீடு வசிப்பிடம் வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதும், தலைவாசலில் மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளில் அலங்கரிக்கின்றனர்.
புத்தாண்டு வழிபாட்டில் வாசனை மிகுந்த மலர்கள், வெற்றிலை, பாக்கு, பொன் ஆபரணங்கள், நெல் முதலான மங்கலப் பொருள்கள் வைத்த தட்டை வழிபாட்டு அறையில் வைத்து அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாக கருதப்படுகிறது.
நாளேறுப் பூட்டுதல் விவசாய மக்கள் துவக்கம்,
மாங்காய் பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே.
வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் சிறப்பாக குரோதி வருஷத்தில் நமது வாசகர்கள், செய்தியாளர்கள், அச்சகப் பணியாளர்கள், கூகுள் நவ்ளீஹா டீம் அணைத்து நண்பர்களுக்கும் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கருத்துகள்