காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியின் மாணவர் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் மதர் சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் மாணவர் எஸ். பாலச்சந்திரன். இவர் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 63 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். மாணவரின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்று பல்வேறு சிறப்பு குழந்தைகள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுவதற்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து அவர்களை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார்கள்.
கருத்துகள்