தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியானது,
மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொண்டனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்புப் பயின்ற மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி பொதுத் தேர்வு நடந்தது. 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். அதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 83 விடைத்தாள் திருத்தும் மையங்களில்
ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நிறைவடைந்தது.தொடர்ந்து மதிப்பெண் சரிபார்த்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. அந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களிலும், EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகத் தேர்ச்சி பெற்றனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்ட நிலையில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44 சதவீதம், மாணவர்கள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவீதமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 2024-25. ஆம் கல்வியாண்டில் விண்ணப்பம் செய்ய அறிவிப்பு வெளியானது
கருத்துகள்