மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் ரூபாய்.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது கைதானார்.
மஞ்சக்குழி ஊராட்சியில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் கைது.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்றத் தலைவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான 15வது நிதிக்குழுத் திட்டத்தின்படி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மஞ்சக்குழி ஊராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் எனும் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பணிகளை மேற்கொண்ட பி.சந்தோஷ், வயது 33 இவர் நெம்பர். 503, நாகவள்ளி அம்மன் கோயில் தெரு. பி.முட்லூர் அஞ்சல், புவனகிரி வட்டம், கடலூர் மாவட்டம் என்ற முகவரியில் வசித்து வருகிறார் மேற்சொன்ன மஞ்சக்குழி ஊராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள
மஞ்சக்குழியில் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தவர் எஸ்.சற்குருநாதன் மேற்சொன்ன பணிகளை செய்தமைக்காக தனக்கு 2 சதவீதம் கமிஷனாக இலஞ்சப் பணம் ரூபாய். 30 ஆயிரம் தனக்குத் தர வேண்டும் எனக் கேட்டாராம். அதற்கு சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் எனும் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான சந்தோஷ் அவ்வளவு பணம் என்னால் ஒரே நேரத்தில் புரட்டித்தர முடியாது எனக் கூறியுள்ளார்.
அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதன். தலா ரூபாய்.15 ஆயிரம் இரண்டு தவணையில் கொடுக்கும்படி கூறியுள்ளார். மேற்சொன்ன ஊராட்சி மன்றத் தலைவர் சற்குருநாதனுக்கு இலஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரரான சந்தோஷ், 14. மே.2024 ஆம் தேதியன்று கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகார் மனு மீது கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறையில் ஊ.த.க. பிரிவு கு.எண்.5/2024, பிரிவு 7 of The Prevention of Corruption (Amendment) Act, 2018 மற்றும் 145 ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று 15. மே .2024 ஆம் ஆண்டு சந்தோஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அறிவுரைப்படி பினாப்தலின் இரசாயனப் பொடி தடவியே ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு வந்த சந்தோஷிடமே கொடுத்து அனுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் சற்குருநாதனிடம். இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.15 ஆயிரத்தை இலஞ்சமாகக் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் ந.தேவநாதன் தலைமையிலான காவலர்கள் இலஞ்சப் பணத்தை வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சற்குருநாதனை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
பிறகு மஞ்சக்குழியிலுள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட போது பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநர், தணிக்கை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சற்குருநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள்