பல்லடத்தில் இளம் பெண் கொலை செய்த பின் பினத்தைக் காரில் வைத்து மதுரை வாடிப்பட்டி அருகில் சுற்றிய கொடூரமான காதலன் கைது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய கொலையாளி கொலை செய்யப்பட்ட பெண்ணை காரில் வைத்து
திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சுற்றி வந்த கொலையாளிகள் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சிக்கினர். கடலூரைச் சேர்ந்த பெண் பிரின்ஸ் வயது 22 தன் கணவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர், அப்பகுதியில் வேலை செய்த திவாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது பிரின்ஸ் கணவருக்குத் தெரிய வர கள்ளக்காதலை விட்டு விடும்படி கூறி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது சம்பந்தமாக இனி கள்ளக்காதலனிடம் இனிமேல் என்னை விட்டு விடு என கூறியுள்ளார். கோபமடைந்த கள்ளக்காதலன் மதுரையைச் சேர்ந்த நண்பருக்கு போன் செய்து கார் ஒன்று எடுத்து வரச் சொல்கிறார் .உடனே மதுரையிலிருந்து மாருதி ஆம்னி காரை எடுத்துச் சென்ற நிலையில் அந்தக் காரில் கள்ளக்காதலி பிரின்ஸை காரில் ஏற்றிக் கொண்டு காரில் வைத்தே கொலை செய்து விட்டு காரை எடுத்துக்கொண்டு மதுரை வாடிப்பட்டி அருகே கொண்டு சென்று காத்திருக்குமாறு அனுப்பி விட்டு எதுவுமே நடக்காதது போல் கள்ளக்காதலன் வேலைக்கு சென்று வேலை முடிந்தவுடன் அங்கிருந்து
அவனுடைய நண்பரை காரை எடுத்துக்கொண்டு மதுரை வாடிப்பட்டி அருகே கொண்டு சென்று காத்திருக்குமாறு அனுப்பிவிட்டு எதுவுமே நடக்காதது போல் கள்ளக்காதலன் வேலைக்குப் போய் விட்டு வேலை முடிந்தவுடன் அங்கிருந்து
இரண்டு சக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகிலுள்ள டிராக்டர் கம்பெனி அருகே கொலை செய்த பெண்ணுடன் காரில் காத்திருந்த இடத்திற்கு கள்ளக்காதலன் வந்து.
அந்த இரண்டு பேரும் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கொலை செய்த பெண்ணை குழி தோண்டி புதைத்து விடுவதற்கு மண்வெட்டி , கடப்பாறை அனைத்தையும் ஏற்பாடு செய்து காருடன் நான்கு வழிச்சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்துக் காத்திருநத போது
இரவு நேர ரோந்துப் பணியிலிருந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் காரின் அருகில் இருந்த இரண்டு நபரையும் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்ததால் காரைத் திறந்து பார்த்த போது இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் கார் நின்றிருந்த பகுதி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு இருப்பதால் நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்தார் அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய காவல்துறையினர் கார் மற்றும் கள்ளக்காதலன் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடலை மருத்துவப் பிரதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வாடிப்பட்டி காவல்துறையினரை மதுரை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பாராட்டினார் .
கருத்துகள்